மூளைக்கட்டி நோயை குணப்படுத்தும் கூட்டு சிகிச்சை:-
நம் உடலில் இதயத்துக்கு அடுத்தப்படியாக முக்கியமான பகுதி மூளை. இதை உயிருள்ள கம்ப்யூட்டர் என்று சொல்லலாம். நாம் நினைப்பதை செயல்படுத்தும் உத்தரவுகளை மூளைதான் பிறப்பிக்கிறது. நடப்பது, உட்காருவது, பேசுவது, கடமைகளை செய்வது என அனைத்து செயல்களையும் இயக்குவது மூளை. இச்சை செயல் (கட்டளை) மட்டுமல்லாது அனிச்சை செயலையும் செய்து ஆபத்து காலத்தில் நம்மை காப்பாற்றுகிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் மூளைக்கட்டி நோய் பரவி மனிதனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மூளைக்கட்டியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது விஞ்ஞான வளர்ச்சியான தொலைபேசிகளும், மூளைக்கட்டிகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மூளைக்கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியை குறிக்கிறது.
இவ்வகையான வளர்ச்சியினால் ஏற்படும் உயிரணுக்களின் பிரிவினாலும், தடையற்ற வளர்ச்சியினாலும் அது புற்றுக்கட்டியாகவோ அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ இருக்கலாம். மூளைக்கட்டி நோய் ஏற்பட்டால் மூளையின் செயல்பாடு மாற்றமடைவதால் ஞாபக மறதி, எரிச்சல், உடற்சோர்வு கடுமையான தொடர்ச்சியான தலைவலி, திடீர் வாந்தி, தலைச்சுற்று, வலிப்பு, பார்வைப்புலன் மங்குதல், கேட்டல் புலன் குறைதல், நடத்தையில் மாற்றமேற்படல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். சில கட்டிகள் பிறப்பிலிருந்தே இருக்கலாம். மேலும் கதிரியக்க செயற்பாடுகள், மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மூளைக்கு பரவுவதாலும் மூளைக் கட்டிகள் ஏற்படும். தொடக்கநிலை மூளைக்கட்டிகள் பொதுவாக குழந்தைகளின் மண்டையறை பின்பள்ளத்திலும் வயது வந்தோர்களில் பெருமூளை அரைக்கோளத்தின் முன்புறப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன. எனினும் அவை மூளையின் எந்த பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மூளைக்கட்டிக்கும், மலேரியாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. மலேரியாவை பரப்பும் அனாபிலிஸ் கொசுவானது வைரஸ் பரப்பலாம். அல்லது மூளைக்கட்டிக்கு காரணமாக இருக்கலாம். மூளைக்கட்டிகளின் அறிகுறிகளானது கட்டியின் அளவு மற்றும் கட்டியின் இடம் ஆகிய 2 காரணிகள் சார்ந்ததாக இருக்கலாம். பல நிகழ்ச்சிகளில் நோய் ஏற்பட்ட பின்னர் அறிகுறி வெளிப்படத் தொடங்கும். மூளையில் ஏற்படும் நோய்களை 14-ம் நூற்றாண்டில் சித்தர்கள் கபாலரோகம் என குறிப்பிட்டுள்ளனர். சுகபிரசவத்தில் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கலான நேரத்தில் `ஆயுத கேஸ்' என்பார்களே அதுபோல் ஒரு கொறடாவை பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுப்பார்கள். அந்த நேரத்தில் ஆயுதமானது மெல்லிய மண்டை ஓட்டை தாக்குவதால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது. இது மூளை கட்டி நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மூளையில் ஏற்படும் கட்டியால் காக்காவலிப்பு என்று சொல்லப்படும் வலிப்பு நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் கீழே விழுந்து தலையில் விழுந்து அடிபடும்போது ரத்தக்கசிவு, ரத்தஉறை, தடைகள் அழுத்தம். தசை தடிப்பு, தசையின் நெருக்கம் போன்ற காரணங்களால் மூளையில் கட்டி ஏற்படுகிறது. இதற்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும்போது வலிப்பு நோயானது கட்டுக்குள் இருக்கும். ஆனால் திரும்பவும் வர வாய்ப்பு உள்ளது. 10 வயதுக்கு ஒருமுறை நோயின் சக்தி அதிகரிக்கும். ஆனால் வலிப்பு நோயை அலோபதி சித்தா கூட்டு சிகிச்சை முறையில் முற்றிலும் குணப்படுத்தலாம். சித்த வைத்தியத்தில் நவபாஷாண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மூளை கட்டியால் மூளை ஜவ்வில் நோய் கிருமிகள் உருவாகி டி.பி.வைரஸ், கேன்சர் வைரஸ் போன்றவை உருவாகிறது. மூளைக்கட்டிகளில் கிலியோ பிளாஸ்டோமா, மெடுலோ பிளாஸ்டோமா, அஸ்டிரோ சைடோமா, சி.என்.எஸ்.லிம்போமா, பிரைன்ஸ் டெம் கிளியோமா, கெர்மினோமா, மெனின் கியோமா, ஒலிகோடென்ட் ரோகிளியோமா, பிக்ஸட் கிளோமாஸ் கிரேனியோ பேரின்ஜியோமா, எபென்டைமோமா போன்ற பல வகைகள் உண்டு. மூளைக் கட்டிகளுக்கு மருத்துவரீதியான குறிப்பிட்ட குறிகளோ அல்லது அறிகுறிகளோ இல்லாத போதும் வலிப்பு ஏற்படும் போது இதை அறியலாம். தலையில் ரத்த அழுத்தம் மூளை வீக்கம், மூளை முதுகுத் தண்டு நீர்பாதையில் அடைப்பு ஆகியவற்றின் காரணமாக வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மண்டையோடு அடிப்பகுதியில் ஏற்படும் சில கட்டிகள் தவிர்த்து பல உறைப்புற்றுகளை அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக நீக்க முடியும். மிகவும் சிக்கலான நிகழ்வுகளில் காமா கத்தி, சைபர்கத்தி அல்லது நோவலிஸ் டி.எக்ஸ் கதிரியக்க அறுவை சிகிச்சை போன்ற குறுகிய இட நுண் கதிரியக்க அறுவை சிகிச்சையானது நிலையான விருப்பத் தேர்வாக நீடித்திருக்கிறது. பெரும்பாலான அடிமூளைச் சுரப்பி சீதப்படலக் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலமாக நீக்க முடியும். இது பொதுவாக நாசிக் குழி மற்றும் மண்டையோட்டு அடிப்பகுதி வழியாக குறைந்த அளவு துளைத்தல் அணுகுமுறையில் செய்யப்படுகிறது. பெரிய அடிமூளைச் சுரப்பி சீதப்படலக் கட்டிகளை நீக்குவதற்கு மண்டைத் திறப்பு அவசியமானதாக இருக்கிறது. குறுகிய இட நுண் அணுகுமுறைகள் உள்ளிட்ட கதிரியக்கச் சிகிச்சை அறுவை சிகிச்சை செய்ய இயலாத நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முதன்மை மூளைக் கட்டிகளுக்காக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நோய் தீர்க்கும் நிர்வகிப்பு இல்லாத போதும் பெரும்பாலான நோயாளிகளுக்கு கட்டிகளை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை முயற்சிகள் அல்லது குறைந்த பட்சம் சைட்டோரிடக்சன் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் இந்த உறுப்புக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை மூலமாக முழுமையாக நீக்கிய பின்னர் கட்டி நோய் மீளல் பொதுவானது அல்ல. கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை போன்றவை வீரியம் மிக்க கட்டிகளுக்கான நோய் தீர்க்கும் தரநிலையின் முழுமைவாய்ந்த பகுதிகளாக இருக்கின்றன. அறுவை சிகிச்சை மூலமாக போதுமான அளவு கட்டியின் சுமையைக் குறைக்க இயலாத போது கதிரியக்கச் சிகிச்சையும் பயன்படுத்தப்படலாம். |
No comments:
Post a Comment