டிப்ஸம்மா... டிப்ஸ்! By - கீதா ஹரிஹரன்
சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது மஞ்சள் வாழைப்பழத்தைச் சேர்த்துப் பிசையவும். சுவையாகவும் இருக்கும். கறிவேப்பிலை, கொத்துமல்லி மலிவாகக் கிடைக்கும் சமயங்களில் வெயிலில் காயவைத்து ரசப்பொடியுடன் கலந்து வைத்துக்கொண்டால் கறிவேப்பிலை, கொத்துமல்லி இல்லாத சமயத்திலும் ரசம் கமகமக்கும்.
அரிசி, பருப்பு, நூடுல்ஸ், ரசம் போன்றவை அடுப்பிலிருக்கும்போது பொங்கி வழிகிறதா? அவை இருக்கும் பாத்திரங்களின் மேல் விளிம்பில் சற்று உள்புறமாக எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி தீயைக் குறைத்து வைத்துச் சமைத்தால் பொங்காமல் இருக்கும். மைக்ரோவேவ் அடுப்பு மூலமாகச் சமைக்கும்போதும் இதுபோன்ற எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி சமைக்கலாம். சாப்பிட முடியாத அளவுக்கு வாழைப்பழங்கள் கொழகொழவென்று கனிந்திருக்கிறதா? தோலை உரித்து பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சப்பாத்திகளோ, இனிப்பு பூரிகளோ தயாரித்து விடலாம். அல்லது பாலுடன் மிக்ஸியில் அடித்து "மில்க்ஷேக்' தயாரிக்கலாம். பிரெட் துண்டுகளுக்கு இடையில் காய்கறிக் கலவையை வைத்து சாண்ட்விச் தயாரிக்கும்போது கத்தியால் ஷார்ப்பாக துண்டு போட வராது. சிலசமயம் காய்கறிகளில் இருந்து பிரெட் வழுக்கிக் கொள்ளும். இதைத் தவிர்க்க பிரெட்டை நான்கு அல்லது இரண்டு துண்டுகளாக கட் செய்வதற்கு முன் கத்தியை வெந்நீரில் முக்கி எடுத்து கட் செய்தால் எளிதாகத் துண்டு போட வரும். |
No comments:
Post a Comment