குளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்!
*தமிழகத்தில் குளிர் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களும் முதியவர்களும் பனியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர். மாலை 6 மணி தொடங்கிவிட்டாலே சில்லென்று வீசும் காற்றும், இரவில் கொட்டும் பனியால் வெளியில் நடமாடுவதை பலர் தவிர்த்துவருகின்றனர்.
*உடல் நடுங்கும் குளிரால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு பக்கம் குளிர் வாட்டினாலும், அதனுடன் சேர்ந்து குளிர்கால நோய்களான சளி, இருமல், ஜூரம், ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுவதால் சிகிச்சைக்காக டாக்டர்களிடம் கூடும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.
*எப்போதுதான் பனிக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்குமோ? என்று சிலர் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.
நோய்க்கான காரணங்கள்: குளிர் காலத்தில் ஏற்படும் நோய்கள் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குளிரால் எந்த நோயும் ஏற்படுவதில்லை.
*குளிர் காற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை பாதிப்பதாலே நோய்கள் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் வைரஸ் கிருமியின் ஆயுள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதவாது, சாதாரணமாக நமது கைகளில் இருக்கும் வைரஸ் கிருமிகள் சுமார் 3 மணி நேரம் உயிருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
*இதனால், வைரஸ் கிருமிகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக கைகளை குலுக்கும்போது, நெருங்கிப் பழகுவதாலும் வைரஸ் கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.
நோய்களை தடுக்க:
1. அவ்வப்போது கைகழுவ வேண்டும்.
2 .பேக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்படுத்தலாம்.
3 .மற்றவர்களை தொட்டுப் பேசுவதை தவிர்க்கலாம்.
4 .வைட்டமின் சி சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
5 .தினமும் தேன் சிறிது குடித்துவந்தால் வறட்டு இருமல், சளி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
6 .பனிக்காலம் தொடங்கியதும் டாக்டர்களின் ஆலோசனைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
7 .பனியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வெளியில் செல்லும்போது காதுகளில் பஞ்சு அடைத்துக் கொள்ளலாம் அல்லது குல்லா, மப்ளர் பயன்படுத்தலாம்.
8. காட்டன் உடைகளை தவிர்க்கலாம்.
9.உல்லன் ஸ்வெட்டர் பயன்படுத்தலாம்.
10.ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் பயன்படுத்தலாம்.
11.குளிர்பானங்களை தவிர்க்கலாம்.
12.ஈரம் அதிகம் உள்ள காய்கறிகளை தவிர்க்கலாம்.
13. காயவைத்து ஆறவைத்த சுடுநீரை குடிக்க வேண்டும்.
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment