Thursday, 26 December 2013

கொத்சு புராணம் முதல் பகுதி. (சிதம்பரம்) (தொடர்ந்து நான்கு நாள் வரும்)

Varagooran Narayanan 26 December 18:36
கொத்சு புராணம் முதல் பகுதி. (சிதம்பரம்)
(தொடர்ந்து நான்கு நாள் வரும்)

நன்றி பால ஹனுமான்.

கொத்சு எத்தனை வகைப்படும்?

இப்படி பரிட்சையில் கேட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்… ஏனெனில் கொத்சுவில் ஏகப்பட்ட வகை உண்டு!

பொதுவாக கத்தரிக்காயில் செய்யப்படுவதே கொத்சு என்றாலும், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதம். தஞ்சை மண்டல திருமணங்களில் பரிமாறப்படும் கும்பகோணம் கொத்சு புகழ் வாய்ந்தது. இன்னும் சில கல்யாண விருந்துகளில் காலை உணவில் பெரும்பாலும் வெண் பொங்கலுடன் பாசிப்பருப்பு கத்தரிக்காய் கொத்சு பரிமாறப்படும். கொங்கு மண்டலத்தில் கத்தரிக்காயுடன், தக்காளி, சில நேரம் பீர்க்கங்காய் கூட சேர்த்து செய்வார்கள்.

மயிலாப்பூர் ராயர் மெஸ்ஸில் செவ்வாய் தோறும் இட்லி, பொங்கலுக்கு அளிக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத அளவு கத்தரிக்காய் துகள் மிதக்கும் தண்ணீர் போன்ற கொத்சுவை ருசிக்கவே நிறைய ரசிகர்கள் பல்லாண்டுகளாக படையெடுக்கிறார்கள். அதே மயிலாப்பூரில், கற்பகாம்பாள் மெஸ்ஸில், ஞாயிறு தோறும் கொத்சு ஸ்பெஷல். அங்கே தினம் மாலை வேளையில் டிபனுக்கு ஊற்றுகிறார்கள் கல்யாண கொத்சு. இது சாம்பார் போலவே இருந்தாலும் சுவையில் தெரியும் வித்தியாசம்! இதனை கொத்சு இருந்தாலும் சிதம்பரம் கொத்சுக்கு ஈடு இணை கிடையாது. சிதம்பரம் நடராஜருக்குப் படைக்கப்படும் நைவேத்தியமாக இருப்பதிலிருந்தே கொத்சுவின் பெருமை புரியும். அதனால் மறு பேச்சின்றி சிதம்பரம் போய் விடலாமே!

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator