அன்னதான சிறப்புக்கு மஹாபெரியவா சொன்ன உண்மைக்கதை.(2 of 3) இந்த அநுக்ரஹ வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச்சொல்லி ஜாடை காட்டினார், ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது. ஒரு பக்தர் ஸ்வாமிகளைப்பார்த்துக் கேட்டார், "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மஹிமை இருக்கா ஸ்வாமீ?" உடனே ஸ்வாமிகள், "ஆமாமாம்! மோட்சத்துக்கே அழைச்சுண்டு போகக்கூடிய மஹாப் புண்ய தர்மம் அது. ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணியிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார். ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு, பெளவ்யமாக, "என் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாள் .... நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்றோம் ... இந்த அதிதி போஜன மஹிமையைப்பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா ..... நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சிக்கிறாப்போல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும்" என்றார். அவரை அமரச்சொன்னார் ஸ்வாமிகள். பக்தரும் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பரப்பிரும்மம் பேச ஆரம்பித்தது. "ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தெட்டு [1938-39] .... முப்பத்தொன்பதாம் வருஷம்ன்னு ஞாபகம்.ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்திலே [கும்பகோணம்] நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவத்தத்தான் இப்போ நா சொல்லப்போறேன். அத நீங்கள்ளாம் ஸ்ரத்தையாக் கேட்டுட்டாளே, இதுலே இருக்கற மஹிமை நன்னாப் புரியும்! சொல்றேன் ... கேளுங்கோ ... சற்று நிறுத்திவிட்டு, தொடர்ந்தார் ஸ்வாமிகள். கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்ட கரையிலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்ன்னு பலசரக்கு வியாபாரி ஒருவர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு ..... அவரோட தர்மபதினி பேர் சிவகாமி ஆச்சி. அவா காரைக்குடி பக்கத்துல பள்ளத்தூரைச் சேர்ந்தவா. அந்த தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது. கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா. தொடரும்(2 of 3)
No comments:
Post a Comment