Monday, 16 December 2013

சங்கீத நாடக அகாடமி சார்பில் மீனாட்சிக்கு விருதும் ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற ஊராகும். குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் இசைக் கருவியான கடத்துக்கு தனி மவுசு உண்டு. இக்கடத்திலிருந்து கர்நாடக இசைக்கலைஞர்கள் விரும்பும் ஒலி கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மானாமதுரை பகுதியில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மையே இதற்கு காரணம். இதனால் கர்நாடக இசைக் கலைஞர்கள் மானாமதுரையில் ஆர்டர் கொடுத்து கடம் வாங்கிச் செல்கின்றனர். மேலும் இங்கு தயாரிக்கப்படும் கடம் கடல் கடந்து உலக நாடுகளிலும் தனது இசையை ஒலித்து வருகிறது.

தற்போது மானாமதுரையில் கடம் தயாரிப்பில் ஒரு குடும்பத்தினர் மட்டுமே பாரம்பரியமாக ஈடுபட்டு உள்ளனர். மானாமதுரை குலாலர் தெருவில் வசிக்கும் அக்குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த கேசவன் மனைவி மீனாட்சி மத்திய அரசின் சங்கீத நாடக அகடாமி சார்பில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவுக்கு செல்ல மீனாட்சி தயாராகி வருகிறார்.

எனது கணவர் கேசவன் கடம் தயாரிக்கும் பணி செய்து வந்தார். அவரது மறைவுக்குப்பின் நானும் எனது மகன் ரமேசும் கடம் தயாரித்து வருகிறோம் என விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மீனாட்சி தெரிவித்தார். சங்கீத நாடக அகாடமி சார்பில் மீனாட்சிக்கு விருதும் ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள்

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator