ராக்கிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்
By நெல்சன், சென்னை
ராக்கிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப. சதாசிவம் வலியுறுத்தினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 156-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா அரங்கில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா தலைமையில் வியாழக்கிழமை (டிச.19) நடைபெற்றது.
இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப. சதாசிவம் பேசியது:
சிறந்த பட்டதாரிகளை உருவாக்குவதோடு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணி முடிந்து விடுவதில்லை.மாறாக, நேர்மையான, பொது வாழ்க்கையிலும் தனிமனித வாழ்விலும் நம்பத் தகுந்த, தவறுகளைத் தட்டிக் கேட்கின்ற, சமூக நீதிக்காக குரல் கொடுக்கக் கூடிய பொறுப்புள்ள மனிதர்களை உருவாக்க வேண்டியதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணியாகும்.
கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் ராகிங் சம்பவங்கள், கல்வியின் தரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. எனவே, ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
ராகிங் தடுப்பு நடவடிக்கைகளில் பேராசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், நிர்வாக ஊழியர்கள், பாதுகாவலர்கள் என அனைவரையும் ஈடுபடுத்தி சிறிதளவும் ராகிங் இல்லை என்ற நிலையை கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து உறுதி செய்யவேண்டும்.
பட்டம் பெறும் பட்டதாரிகள் தங்களுக்குள் ஒரு திறமை இருக்கிறது என்பதை முதலில் நம்பவேண்டும். தங்களுக்கு வசதியாக உள்ள துறையை அல்லது பணியை தேர்வு செய்வதைவிட, சற்று வசதி குறைவாக உள்ள துறையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
ஏனெனில், வசதியான துறை என்பது ஒருவருக்கு ஏற்கெனவே நன்கு பழக்கப்பட்ட, தெரிந்த பணியாக இருக்கும். இப்படிப்பட்ட துறையை தேர்வு செய்பவர் புதிய சிந்தனைகளை சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறார்.வசதி குறைந்த துறையை தேர்வு செய்யும்போதுதான், புதிய கோணத்தில் சிந்திக்க முயற்சிப்பதோடு, உங்களைப் பற்றி நீங்களே ஆழமாகத் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment