Monday, 16 December 2013

உபநயனம்:

உபநயனம்:
(சர்மா சாஸ்திரிகளின் 'வேதமும் பண்படும் நூலிலிருந்து ஒரு பக்கம்)
பூர்வ ஜன்மங்களின் புண்ணிய பலத்தினால் தான் பிராமணப் பிறவி கிடைத்துள்ளது. பிராமணனாக பிறந்தால் மட்டும் ப்ராமணத்தன்மை பூரணமாக வந்து விடுவதில்லை, இதை நாம் நன்கு உணர வேண்டும். சில ஸம்ஸ்காரங்களை ரிஷிகள் வகுத்துள்ளனர். அந்த ஸம்ஸ்காரங்கள் மூலம்தான் பிராமணன் பிரமாணமாக்கப்படுகின்றான்.

அந்த ஸம்ஸ்காரங்கள் மொத்தம் 40. இந்த நற்பதில் ஒன்றுதான் உபநயனம் என்கிற ஸம்ஸ்காரம்.

நோக்கம்:
உபநயனம் என்பது மிக முக்கியமான ஸம்ஸ்காரம். இதன் நோக்கமே குருவிடம் அழைத்துச் செல்லப்பட்டு, ஒப்படைத்துக் கொள்வது; குருவின் மூலம் தகுதி பெற்று குருவால் வேதத்தின் அருகே அழைத்துச் செல்லப்பட்டு அதன் மூலம் பிரம்மமாகிய பரம்பொருளை அடைவது என்று படிப்படியாக நாம் உயர நமக்கு உதவிப்புரிவதே உபநயன ஸம்ஸ்காரம் ஆகும்.

எந்த வயதில்?
ஏழாவது வயதில் உபநயனம் செய்விப்பது உத்தமம். பதினோறாவது வயதிற்குள் போடலாம். 

ஒரு வேளை தவறினால் 16 வயது தாண்டுவதற்கு முன் போடுவதும் சாஸ்திர சம்மதம் தான். ஆனால் 16 வயதிற்குள் உபநயனம் செய்யாவிட்டால் அவனுக்கு ப்ரம்ஹன்யம் போய்விடும். 

ஆதலால் பல வைதிக கர்மாக்கள் கைவிடப்பட்டுள்ள இக்காலத்தில் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பூணூலையாவது உரிய காலத்தில் சிரத்தையுடன் போட்டுவிப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

நியமங்கள்:
உபநயனத்தை உத்தராயணத்தில் நல்ல முகூர்த்தத்தில் உரிய லக்னத்தில் யதோக்தமாக செய்துவிக்க வேண்டும். 

உபநயனத்தில் வந்தவர்களை உபசரிப்பது, போட்டோ, வீடியோ முதலிய ஏற்பாடுகள், விருந்தோம்பல் மற்றும் பல லௌகீகமான அம்சங்கள் அவசியம்தான். சந்தேகமில்லை. ஆனால் வைதிகத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் லௌகீகத்திற்கு ப்ராதான்யம் அளித்தால் அது தவறாகும். வைதிகத்தை மையமாக வைத்துதான் உபநயனம் ஏற்பாடு செய்ய வேண்டும். வைதிகத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றால் அதில் என்னவெல்லாம் அடங்கும் என்று சிலருக்கு மனதில் கேள்விகள் எழலாம்.

அவைகள் இதோ.
1. ஜபம் செய்வதற்கு அவரவர் சக்திக்கேற்ப நல்ல எண்ணிக்கையில் ரித்விக்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. வைதிக சாமான்கள் நல்லவைகளாகவும், தரமாகவும் இருத்தல் அவசியம்.
3. நாந்தி போன்ற விஷயங்களில் ஏனோதானோவென்று இராமல் முறையாக செய்ய முயற்சி எடுத்தல்.
4. ப்ராயஸ்சித்தம் ஏதாவது இருந்தால் அதை முறைப்படி செய்வது.
5. உபநயனம் ஆன தினத்திலிருந்து குறைந்தது 4 நாட்களாகவது விடாமல் ஸமிதாதானம் செய்வதற்கு முன் கூட்டியே ஏற்பாடு செய்தல் வேண்டும்.
6. வைதிக சம்பாவனை விஷயத்தில் கஞ்சத்தனம் பார்க்காமல் தாராளமாக நடந்து கொள்வது.

உபநயனத்தில் இடம் பெறும் ப்ரயோகங்கள் உபநயனத்தில் அங்கமாக வேத மந்திரத்துடன் கூடிய பல அம்சங்கள் ரிஷிகளால் விதிக்கப்பட்டுள்ளன. அவைகள் என்னவென்றால்.
1. உதகசாந்தி ஜபம்
2. அங்குரார்ப்பணம் 
3. ப்ரதிஸர பந்தம்
4. நாந்தி ச்ராத்தம்
5. புண்யாஹவாசனம்
6. யக்ஞோபவீத தாரணம்
7. குமார போஜனம்
8. சௌளம் 3வது வயதில் இது செய்யப்பட வேண்டும். ஆனால் தற்காலத்தில் இந்த சௌள கர்மா (மந்திரபூர்வமாக சிகை வைத்துக் கொள்வது) உபநயனத்தன்று நடைபெறுகின்றது.
9. ப்ரஹ்மசர்ய அடையாளங்கள்
10. அஸ்மாரோஹணம்
11. மௌஞ்ஜீ பந்தனம்
12. ஹஸ்த க்ரஹணம்
13. ப்ரதான உபநயன ஹோமம்
14. ப்ரஹ்மோபதேசம் (காயத்ரி மந்திர உபதேசம்)
15. ஸமிதாதானம்
16. பிக்ஷ£சரணம்
17. ஆசிர்வாதம்
18. ப்ரணவ&சிரத்தா&மேதா பூஜை
19. ஹாரத்தி
20. மாத்யாஹ்னீகம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ப்ரயோகங்களும் மிக கவனமாகவும், ச்ரத்தையாகவும் நடை பெற வேண்டும்.

தக்க வயதில் ஒழுங்காக உபநயனம் செய்விக்கப் பெறும் ஒவ்வொரு சிறுவனும் ப்ரஹ்ம தேஜஸால் ப்ரகாசிக்கப்பட்டு வாழ்க்கையில் எல்லா விதத்திலும் உயர்வான்
உபநயனம்:  (சர்மா சாஸ்திரிகளின் 'வேதமும் பண்படும் நூலிலிருந்து ஒரு பக்கம்)  பூர்வ ஜன்மங்களின் புண்ணிய பலத்தினால் தான் பிராமணப் பிறவி கிடைத்துள்ளது. பிராமணனாக பிறந்தால் மட்டும் ப்ராமணத்தன்மை பூரணமாக வந்து விடுவதில்லை, இதை நாம் நன்கு உணர வேண்டும். சில ஸம்ஸ்காரங்களை ரிஷிகள் வகுத்துள்ளனர். அந்த ஸம்ஸ்காரங்கள் மூலம்தான் பிராமணன் பிரமாணமாக்கப்படுகின்றான்.    அந்த ஸம்ஸ்காரங்கள் மொத்தம் 40. இந்த நற்பதில் ஒன்றுதான் உபநயனம் என்கிற ஸம்ஸ்காரம்.    நோக்கம்:  உபநயனம் என்பது மிக முக்கியமான ஸம்ஸ்காரம். இதன் நோக்கமே குருவிடம் அழைத்துச் செல்லப்பட்டு, ஒப்படைத்துக் கொள்வது; குருவின் மூலம் தகுதி பெற்று குருவால் வேதத்தின் அருகே அழைத்துச் செல்லப்பட்டு அதன் மூலம் பிரம்மமாகிய பரம்பொருளை அடைவது என்று படிப்படியாக நாம் உயர நமக்கு உதவிப்புரிவதே உபநயன ஸம்ஸ்காரம் ஆகும்.    எந்த வயதில்?  ஏழாவது வயதில் உபநயனம் செய்விப்பது உத்தமம். பதினோறாவது வயதிற்குள் போடலாம்.     ஒரு வேளை தவறினால் 16 வயது தாண்டுவதற்கு முன் போடுவதும் சாஸ்திர சம்மதம் தான். ஆனால் 16 வயதிற்குள் உபநயனம் செய்யாவிட்டால் அவனுக்கு ப்ரம்ஹன்யம் போய்விடும்.     ஆதலால் பல வைதிக கர்மாக்கள் கைவிடப்பட்டுள்ள இக்காலத்தில் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பூணூலையாவது உரிய காலத்தில் சிரத்தையுடன் போட்டுவிப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.    நியமங்கள்:  உபநயனத்தை உத்தராயணத்தில் நல்ல முகூர்த்தத்தில் உரிய லக்னத்தில் யதோக்தமாக செய்துவிக்க வேண்டும்.     உபநயனத்தில் வந்தவர்களை உபசரிப்பது, போட்டோ, வீடியோ முதலிய ஏற்பாடுகள், விருந்தோம்பல் மற்றும் பல லௌகீகமான அம்சங்கள் அவசியம்தான். சந்தேகமில்லை. ஆனால் வைதிகத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் லௌகீகத்திற்கு ப்ராதான்யம் அளித்தால் அது தவறாகும். வைதிகத்தை மையமாக வைத்துதான் உபநயனம் ஏற்பாடு செய்ய வேண்டும். வைதிகத்திற்கு முக்கியத்துவம்  தரவேண்டும் என்றால் அதில் என்னவெல்லாம் அடங்கும் என்று சிலருக்கு மனதில் கேள்விகள் எழலாம்.     அவைகள் இதோ.  1.	ஜபம் செய்வதற்கு அவரவர் சக்திக்கேற்ப நல்ல எண்ணிக்கையில் ரித்விக்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.  2.	வைதிக சாமான்கள் நல்லவைகளாகவும், தரமாகவும் இருத்தல் அவசியம்.  3.	நாந்தி போன்ற விஷயங்களில் ஏனோதானோவென்று இராமல் முறையாக செய்ய முயற்சி எடுத்தல்.  4.	ப்ராயஸ்சித்தம் ஏதாவது இருந்தால் அதை முறைப்படி செய்வது.  5.	உபநயனம் ஆன தினத்திலிருந்து குறைந்தது 4 நாட்களாகவது விடாமல் ஸமிதாதானம் செய்வதற்கு முன் கூட்டியே ஏற்பாடு செய்தல் வேண்டும்.  6.	வைதிக சம்பாவனை விஷயத்தில் கஞ்சத்தனம் பார்க்காமல் தாராளமாக நடந்து கொள்வது.    உபநயனத்தில் இடம் பெறும் ப்ரயோகங்கள் உபநயனத்தில் அங்கமாக வேத மந்திரத்துடன் கூடிய பல அம்சங்கள் ரிஷிகளால் விதிக்கப்பட்டுள்ளன. அவைகள் என்னவென்றால்.  1.	உதகசாந்தி ஜபம்  2.	அங்குரார்ப்பணம்   3.	ப்ரதிஸர பந்தம்  4.	நாந்தி ச்ராத்தம்  5.	புண்யாஹவாசனம்  6.	யக்ஞோபவீத தாரணம்  7.	குமார போஜனம்  8.	சௌளம் 3வது வயதில் இது செய்யப்பட வேண்டும். ஆனால் தற்காலத்தில் இந்த சௌள கர்மா (மந்திரபூர்வமாக சிகை வைத்துக் கொள்வது) உபநயனத்தன்று நடைபெறுகின்றது.  9.	ப்ரஹ்மசர்ய அடையாளங்கள்  10.	அஸ்மாரோஹணம்  11.	மௌஞ்ஜீ பந்தனம்  12.	ஹஸ்த க்ரஹணம்  13.	ப்ரதான உபநயன ஹோமம்  14.	ப்ரஹ்மோபதேசம் (காயத்ரி மந்திர உபதேசம்)  15.	ஸமிதாதானம்  16.	பிக்ஷ£சரணம்  17.	ஆசிர்வாதம்  18.	ப்ரணவ&சிரத்தா&மேதா பூஜை  19.	ஹாரத்தி  20.	மாத்யாஹ்னீகம்    மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ப்ரயோகங்களும் மிக கவனமாகவும், ச்ரத்தையாகவும் நடை பெற வேண்டும்.    தக்க வயதில் ஒழுங்காக உபநயனம் செய்விக்கப் பெறும் ஒவ்வொரு சிறுவனும் ப்ரஹ்ம தேஜஸால் ப்ரகாசிக்கப்பட்டு வாழ்க்கையில் எல்லா விதத்திலும் உயர்வான்

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator