மார்கழிமாதம் இன்று
"மாதங்களில் நான் மார்கழி" எனக் கண்ணபிரான் கீதையில் அருளியுள்ளார். மார்கழிமாதம் வழிபாட்டுக்குரிய மாதமாகக் கருதப்பட்டு பெண்கள் பாவை நோன்பு நோற்பதிலும், ஆண்கள் பஜனை செய்வதிலும் ஈடுபடுவர். மார்கழி மாதம் தனுர்மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் பெண்கள் விடியற்காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு அதன் நடுவில் சாணப்பிள்ளையார் பிடித்து வைத்து அதன்மீது பூசணிப் பூவைச் செருகிவைப்பர். ஆன்மிக மார்க்கத்துக்கு இட்டுச் செல்லும் மாதம் மார்கழி என்பதையே இது உணர்த்துகிறது.
மார்கழி மாதம் தேவர்களின் விடிகாலைப் பொழுது. பகவான் விழித்தெழக்கூடிய இம்மாதத்தில் அவர் கண் விழிக்கும் நேரம் அவருடைய அருட்பார்வை தங்கள் மேல் விழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இம்மாதத்தில் இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.
மாதம் முழுவதும் அதிகாலையில் நீராடி தெய்விகப் பாவையைக் குறித்து பாவை நோன்பு நோற்பதன் மூலம் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைவர். திருமணமான பெண்களின் கணவர் தீர்க்காயுசுடன் வாழ்வார். நாட்டில் மழை வளமும் பெருகும்.
கோகுலத்தின் கோபியர்கள் மார்கழி மாதம் முழுவதும் யமுனையில் நீராடி கண்ணனையே தங்கள் கணவனாக அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் பாவை நோன்பு நோற்றதை அறிந்து கொண்ட ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனை மணாளனாக அடைய மார்கழி மாதத்தில் நோன்பு நோற்றாள். நோன்பின் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவற்றை எடுத்துக்கூறி நோன்பு நோற்கும் போது பாடும் பாடல்களாக முப்பது பாசுரங்களைப் பாடியுள்ளார். அவை திருப்பாவைப் பாடல்கள் எனப்படுகின்றன.
முதற்பாடல்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் —
( hari krishnamurthy K. HARIHARAN)"
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari

No comments:
Post a Comment