Tuesday, 17 December 2013

வளமான வாழ்விற்கு வாஸ்து

வளமான வாழ்விற்கு வாஸ்து
 1.வீட்டில் நடுவில் மைய பிரம்ம ஸ்தானப் பகுதியில் எதுவும் அமையாதிருத்தல் நல்லது.

2.கோவில் நிழல் வீட்டின் மேல் படக்கூடாது

3.தெருவின் நேராக வீடு அமையக் கூடாது.

4.வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு ராசி இருப்தால் ராசிப்படி வாசல் அமைப்பது கட்டாயமில்லை.

5.வடக்குப் பகுதி வளர்ந்த வடமேற்கு மனை, அதிக கடன்களை ஏற்படுத்தும். சரி செய்ய இயலாவிடின் வடமேற்கு வளர்ந்த பகுதியில் துளசி செடியும் பவளமல்லி மரம் வைக்கலாம்.

6.தண்ணீர்த் தொட்டி மாடியில் தென்மேற்கில் அமைக்கவேண்டும்.

7.பூஜைஅறை வடகிழக்கில் அமைவது நல்லது.பூஜைஅறையில் எப்பொழுதும் இரண்டு விளக்குகள் எரியவிடுவது நல்லது. ஒரு விளக்குக்கு ஒரு திரி போட்டு ஏற்றுவது சிறப்பு.

8.குளிர்சாதனப் பெட்டியை ஹாலில் வைக்கலாம். சமையல் அறையில் வைக்க கூடாது.

9.பீரோவை வடக்கிலோ, தென்மேற்கிலோ வைக்கலாம்.தெற்குப்பார்த்து அல்லது கிழக்குபார்த்து திறக்க வேண்டும்.

1௦.வடக்கில் தலைவைத்துப் படுக்க கூடாது.

11.குழந்தைகள், பெரியவர்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து படிப்பது நன்மை தரும்.

12.வீட்டு வாசல்படிகள் உயரம் குறைவு, அகலம் அதிகமாக அமைக்கவேண்டும்.

13.வாசல் கதவுகளைத் திறக்கும்போதும் மூடும்போதும் அதிக ஒலி எழுப்பக் கூடாது.

14.கழிவு நீர்த் தொட்டி வடமேற்கில் அமைக்கலாம்.

15.குளியல் அறை தென்கிழக்கு, வடமேற்கில் அமைக்கலாம்.

16.வடகிழக்கு மூலையில் குளியல்,கழிவுஅறை அமைப்பதை தவிர்க்கவேண்டும், தென்மேற்கு படுக்கை அறைநோயாளிகளுக்கு நோய் குணமாகும். வடகிழக்குப் பகுதி படுக்கைஅறை பெண் குழந்தை பிறப்பு.

17.தென்கிழக்கு, வடமேற்கில் கிணறு, குழாய் அமைவதை தவிர்ப்பது நல்லது.

18.மேற்கு, தெற்கில் ஜன்னல் வைப்பது வாரிசுகள் ஆயுள் அதிகரிப்பு.

19.வடக்கு, கிழக்குப் பகுதி அதிக அளவு காலியிடம் வசதியான வாழ்க்கை.

வாஸ்து குறைபாடு நீங்க:

1.தெற்கு திசை நோக்கி நிலைக் கண்ணாடி2.சிவன்,பார்வதி,முருகன்,விநாயகர்,குடும்பபடம் கிழக்கு பார்த்து வைத்து வழிபடல்,3.ஆகாச கருடன் மூலிகை வடகிழக்கில் வைப்பது,4.வெள்ளெருக்கு வேரை தெற்கில் வைக்கவேண்டும். வாஸ்து குறைபாடு இருப்பின் ஸ்படிகலிங்கம் வைத்துப் பூஜிக்கலாம். கங்கைத் தீர்த்தம் (சொம்பில் அடைத்து) பூஜை அறையில் வைக்கலாம்.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator