| சிறு வயதில் நாம் இறைவனை வேண்டிய சில தருணங்கள் :
தேர்வு முடிவு வெளிவரும் நாள் அன்று தேர்ச்சி பெற வேண்டிக்கொள்வோம்.
திருட்டுத்தனம் செய்து பெற்றோரிடம் மாட்டிக்கொள்ளும் தருவாய் மாட்டாமல் இருக்க வேண்டிக்கொள்வோம். விடுமுறை நாள் கடந்தாலும் நாளைய நாள் விடுமுறை நாளாக மாறாதா என்று வேண்டுவோம்.
வாகனத்தில் செல்லும் போது வாகனம் ஓட்டுபவர் கைகளை விட்டு விட்டு கோவில் கோபுரத்தை வணங்கும் போது உயிர் பயத்தோடு இறைவனை வேண்டிக்கொள்வோம். நம்மை அடித்த ஆசிரியர் இன்று பள்ளிக்கு வரக்கூடாது என்று வேண்டிக்கொள்வோம்.
நாம் கேட்ட புத்தாடை இந்த பிறந்தநாளுக்கு நமக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டுக்கொள்வோம்.
நாளை தேர்வு இருந்தால் நாளை மழை பெய்து பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிக்கொள்வோம். நம்மை திட்டாமல் ரிப்போர்ட் கார்டில் அப்பா கையெழுத்து இடவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
வீட்டுப்பாடம் எழுத மறந்துவிட்டு என்று ஆசிரியர் வீட்டுப்படத்தை நம்மிடம் கேட்கக்கூடாது என்று வேண்டுவோம்.
விவரமே அறியாத வயதில் சாமி எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டு என்று அப்பா அம்மா சொல்லச் சொல்ல அதை திரும்ப சொல்லி தொடங்கியது நம் வேண்டுதல்..... |
|
|
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment