ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் உணவுகள் !!
இன்றைய அவசர உலகில் பலரால் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இதற்கு காரணம் அதிகப்படியான மன அழுத்தம், போதிய தூக்கம் இல்லாமை மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாதது போன்றவை தான். தற்பொழுது வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தை அடைய வேண்டுமென்று, பலர் கடினமாக உழைப்பதுண்டு. அப்படி உழைத்தால் மட்டும் போதுமா என்ன? துணையுடன் காதல் வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இன்றைய ஆண்களால் காதல் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. இருப்பினும், இந்த பிரச்சனைக்கு வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், பாலுணர்ச்சியை தூண்டும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் நல்ல தீர்வு காண முடியும். அதுமட்டுமின்றி, இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பது என்பது கடினமாக ஒன்றாகிவிட்ட நிலையில், பாலுணர்ச்சி குறைவாக இருந்து, குழந்தைப் பெற முயற்சித்தும் முடியாவிட்டால், பின் எவ்வளவு தான் சம்பாதித்தாலும், அது வேஸ்ட் தான். ஆகவே பாலுணர்ச்சியை தூண்டும் உணவுகளை தவறாமல் சேர்த்து வந்தால், ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தி அதிகரிப்பதோடு, பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, காதல் வாழ்க்கையை நன்கு சந்தோஷமாக அனுபவிப்பதுடன், நல்ல அழகான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும். சரி, இப்போது காதல் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷத்தைப் பெற உதவும் உணவுகளைப் பார்ப்போம். வெங்காயம் வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது லேசாகும். இப்படி லேசானால், இரத்தத்தில் அளவு அதிகரித்து, உடலில் சீராக பாய்ந்து, பாலுணர்ச்சியை நீண்ட நேரம் தக்க வைக்கும். பாஸ்தா பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதால், அது காதல் வாழ்க்கையின் போது உடலில் எனர்ஜியை நீட்டிக்கும். எனவே பாஸ்தா சமைக்கும் போது, அதில் ஜாதிக்காய் மற்றும் சிவப்பு மிளகாய் போன்ற மூலிகைகளை சேர்த்து சமைத்து சாப்பிட்டால், மிகவும் நல்லது. மிளகாய் அளவுக்கு காரத்தை சாப்பிட்டால், எப்படி சுறுசுறுப்புடன் இருக்கிறோமோ, அதேப் போன்று காதல் வாழ்க்கையிலும் நன்கு செயல்பட முடியும். காபி அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் நல்லதல்ல. ஆனால் அளவாக குடித்து வந்தால், உடலில் எனர்ஜி அதிகரிக்கும். இதனால் காதல் வாழ்க்கையிலும் நீண்ட நேரம் இருக்க முடியும். சால்மன் சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கியது. இது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடல் முழுவதும் சீராக ஓட வைக்கும். டார்க் சாக்லெட் இனிப்பு இல்லாத டார்க் சாக்லெட் பாலுணர்ச்சியை தூண்டும் உணவுப் பொருட்களில் முதன்மையானது. எனவே இதனை தவறாமல் அவ்வப்போது சாப்பிடுங்கள். செர்ரி செர்ரிப் பழங்களில், இரத்தக்குழாய்களை சுத்தம் செய்யும் ஆந்தோசையனின்கள் இருப்பதால், இதனை உட்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, காதலுணர்வு நீண்ட நேரம் இருக்கும். ஓட்ஸ் ஒட்ஸ் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, படுக்கையில் நன்கு எனர்ஜியுடன் இருக்கவும் உதவும். குங்குமப்பூ குங்குமப்பூ உடலில் உள்ள வலிகளை குணமாக்குவதோடு, உடலை மிகவும் சென்சிடிவ்வாக மாற்றி, தொட்டாலே காதல் உணர்ச்சியானது பெருக்கெடுக்குமாறு மாற்றிவிடும். கடல் சிப்பி கடல் சிப்பியில் ஜிங்க் சத்து அதிகம் இருப்பதால், ஆண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தி அதிகரிக்கும். வாழைப்பழம் வாழைப்பழத்தை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்தத்தின் அடர்த்தியை லேசாக்கி, உடலில் சீராக ஓடச் செய்யும். மாதுளை மாதுளையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, அதில் நன்கு எனர்ஜியுடன் செயல்பட முடியும். கிராம்பு கிராம்பு சாப்பிட்டால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, ஆண்குறிகளுக்கு இரத்தத்தின் அளவு அதிகரித்து, அளவுக்கு அதிகமான பாலுணர்ச்சியை ஏற்படுத்தும். நவதானியங்கள் உடலுறவில் நல்ல சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமானால், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள நவதானிய உணவுகளை உட்கொள்ளுங்கள். க்ரீன் டீ க்ரீன் டீ குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள ரேடிக்கல்களை வெளியேற்றி, மனதை புத்துணர்ச்சி அடையச் செய்து, காதல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. சோம்பு சோம்பு வியர்வையை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, பாலுணர்ச்சியை நீண்ட நேரம் நீட்டிக்கும்.
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment