Tuesday, 10 December 2013

பிரிட்ஜில் வைக்கக்கூடாத 10 பொருட்கள்

பிரிட்ஜில் வைக்கக்கூடாத 10 பொருட்கள் !! பெண்களுக்கு அதிகமாக பயன்படும் தகவல் !!

பொதுவாகநாம்சமைக்கப்பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.ஆனால், சிலபொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. வைக்கக்கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும்சொல்லலாம்.

அது போன்ற பொருட்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

வெங்காயம் வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்கவேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நாம் வாங்கி வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்கவேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போது மேபிரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்து விடும்.அதனை காற்றோட்டமான சூழலில் வைக்கவேண்டும்.பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாகப்பிரித்து எடுத்துவைக்கலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்துவைக்கக்கூடாது. உருளைக்கிழங்குகளில் பச்சைவேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்கவேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்கவேண்டும். பாலீதீன் பையில் வைக்கக்கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப்போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அதுதேன் தான். ஆனால் நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன் சுவை மற்றும் பல வற்றுக்காக பலவித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும் தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக்கூடாது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப்போய் தோல் கருத்துவிடும். எனவே வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்குகாற்றோட்டமான இடத்தில் வைக்கவேண்டும்.

முலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கிவந்த முலாம் பழத்தை பிரிட்ஜில் வைக்கக்கூடாது.அவ்வாறு வைத்தால், முலாம்பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்துவிடுகிறது. ஆனால் நறுக்கிய முலாம் பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவிபழம், பிளம்பழம், மாங்காய்போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது
Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator