ஒரு சிந்தனை:
நாம் யோசிப்போம். நாம் சொல்லுவது சரியா?
சமீபத்தில் எனது நண்பரின் தந்தை மரணம் அடைந்ததை ஒட்டி பலர் தங்களது துக்கத்தையும், வருதத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டனர். இது இயற்கைதான். அந்த மாதிரி நேரங்களில் மிகவும் அவசியம்கூட.
ஆனால் அதுபோது எனது மனதை உறுத்திய விஷயம் என்னவென்றால், பெரும்பாலோர் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும்போது கடைசியில் 'உனது தந்தையின் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கின்றேன்' என்று முடிப்பதுதான்.
நமது சம்ப்ரதாயத்தில் இந்த அணுகுமுறை கிடையாது. மேற்கத்திய கண்ணோட்டத்தில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். அதை பற்றி நான் எதுவும் சொல்லுவதற்கில்லை.
ஆனால் நமது ஹிந்து மத சித்தாந்தத்தின்படியும், நம்பிக்கையின்படியும், கலாச்சாரத்தின்படியும் 'ஆன்மா சாந்தியடைவது' என்பது அபத்தமான 'கான்செப்ட்' ஆகும். நாம் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு விணைப்பயனிலும், மறு பிறவியிலும் நம்பிக்கையுண்டு. அது மாத்திரம் அல்ல. விசிஷ்டாத்வைதியாக இருந்தாலும் அல்லது அத்வைதியாக இருந்தாலும் நமக்கு 'ஆன்மா சாந்தியடைவது' என்ற பேச்சே இல்லை. இது உங்களுக்கே தெரிந்திருக்கும். சுமார் 40,50 வருஷங்கள் முன்பு வரை நமது பெரியோர்கள் யாரும் 'ஆன்மா சாந்தியடையட்டும்' என்பது போன்ற சொற்றொடர்களை உபயோகப்படுத்தியதே இல்லை.
சரி, அப்போ, எனன சொற்களை உபயோகப்படுதினால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். "அவரது ஆன்மா நற்கதியடைய பிரார்த்திக்கின்றேன்' எனும் பொருள்பட சொல்லுவதுதான் சரி. இதுதான் நமது 'கான்செப்ட்' ஆகும்.
இறந்தவர் நல்லகதியை அடைய வேண்டித்தான் நாம் இறுதி சடங்குகளை (அபர கர்மா) அவரவர்களது குலாச்சாரப்படி செய்கின்றோம்.
அநித்யமான உடலே நீங்கியது என்பதே சத்யம். ஜீவன் நல்ல கதியை அடைந்துவிட்டான் என்பதில்தான் இறந்தவரின் பந்துக்களுக்கு மனச்சாந்தி உண்டாகிறது. ஒரு ஜீவன் பாபியாக இருந்தால் பாப பலனை அனுபவிக்க நரகத்தை அடைவான் என்றும், புண்ணியவானாக இருந்தால் புண்யபலனை அனுபவிக்க ஸ்வர்கத்தை அடைவான் என்றும் வேதம் சொல்கிறது.
அதாவது 100 சதவிகிதம் புண்யம் செய்தால் ஸ்வர்க்கம், 100 சதவிகிதம் பாபம் செய்திருந்தால் நரகம். பாதி புண்யம். பாதி பாபம் என்றால் மனுஷ ஜன்மம். பாபமே மிகுதியாக செய்திருந்தால் மிருக ஜன்மம் என்று பொதுவாக கூறலாம்.
மேலும் பல ஜன்மாக்களில் செய்யும் தபஸ், புண்ய குவியலினால் தேவதைகளுடைய லோகத்தை அடைவது ஸாலோக்யமாகும். தேவதைகளின் ஐஸ்வர்யத்தை அடைவது ஸார்ஷ்டிதமாகும். தேவதைகளாகவே ஆகிவிடுவது ஸாயுஜ்யமாகும். இவ்வாறு அவரவர் புண்ணியத்திற்கு தக்கபடி பலன் கிடைக்கும்.
இறந்து போனவன் நரகத்தையடையாமல் புண்ணிய லோகத்தையோ அல்லது மறுபிறவியில் சுகானுபவம் பெற உதவி புரிவதற்காகவே அபா கர்மா செய்யப்படுகிறது.
ஆதலாம் இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால், நம்மில் சில பேராவது இனிமேல் மேற்க்கத்திய 'கான்செப்டான' சொற்றொடர்களை உபயோகப்படுத்தாமல் அதற்கு பதிலாக "ஆன்மா நல்லா கதியை அடையப் பிரார்த்திக்கின்றேன்..." என்பது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment