தத்தாத்திரேயரின் குணாதிசயங்கள் ....
பிறந்தக் குழந்தையான தத்தாத்திரேயர் சாதாரணக் குழந்தையாக வளரவில்லை. அவர் போக்கே விசித்திரமாக இருந்தது. யாருடனும் அதிகம் பேசமாட்டார். வயது ஆக ஆக அவர் போக்கே முற்றிலும் மாறியது. ஆனால் அவை எதுவுமே உண்மை அல்ல. அவர் வெளித் தோற்றம் வேறு. உள்ளே ஆத்மா வேறாக இருந்தது. அவர் மனித உருவில் தோன்றி இருந்த தெய்வம் அல்லவா. காலம் ஓடியது.
தத்தாத்திரேயர் மாபெரும் யோகா புருஷராக இருந்தார். வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரமாக சுற்றித் திரிவார். மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் சென்று அமர்ந்து கண்களை மூடியபடி இருப்பார். அவரை சுற்றி எப்போதுமே பெரும் ஒளிவெள்ளம் இருந்தது. அவரைக் கண்ட ரிஷி முனிவர்கள் அவர் சாதாரண பிறவி அல்ல என்பதை புரிந்து கொண்டார்கள்.
மாபெரும் யோகி, ஞானி, அவதூதர் என அவரை பலரும் பலவிதமாக போற்றித் துதிக்கலாயினர். காரணம் வேதங்கள் அவருக்கு அத்துப்படி. அவர் உலக நன்மையை கருத்தில் கொண்டே அவதூதராக அவதரித்து இருந்தார் என்பது மும்மூர்த்திகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் நடத்தைகளைக் கண்டு அவர் மிகப் பெரிய யோக புருஷர் என்பதை உணர்ந்து கொண்ட ரிஷியும் முனிவர்களும் அவரிடம் சிஷ்யர்களாகத் துடித்தார்கள்.
தத்தாத்திரேயரோ வந்தவர் அனைவரையுமே சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டது இல்லை. பால்ய லீலைகளாக அவர் செய்து காட்டியவை ஏராளம், ஏராளம் உண்டு. அவர் செய்த யோகா சாதனைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த முனிவர்களினாளும் கூட நினைத்தும் பார்க்க முடியாதவை. வெளிப் பார்வைக்கு ஒழுங்கற்ற வாழ்கையைக் கொண்டவர் போலத் தோற்றம் தருவார். வேண்டும் என்றே இறைச்சிகளை வாயில் கடித்து உண்டவாறு அலங்கோலமாக இருப்பார்
அரைகுறை ஆடைகளுடன் காட்சியளிப்பார், மது மற்றும் கள்ளை குடித்தபடியும், விலை மாதர்களுடன் சல்லாபித்தபடியும் தோற்றம் தருவார். ஆனால் அவற்றை எல்லாம் பார்த்த ரிஷி முனிவர்கள் அவை நிஜமல்ல, கானல் நீர்தான். தத்தாத்திரேயர் வேண்டும் என்றே நம் மனத்தைக் கலைக்க அப்படி ஒரு கபட நாடகம் ஆடுகின்றார் என்று எண்ணிக் கொண்டு அவர் எத்தனை விரச காட்சியில் தோன்றினாலும் அவரை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவருடன் இருந்தார்கள். அடச் சீ...என்ன ஈனத்தனமான மனிதர் இவர் என வெறுத்து ஓடி விட்ட ரிஷி முனிவர்களும் உண்டு. பாவம் அவர்கள். ரிஷி முனிவர்களாக இருந்து என்ன பயன்....உண்மையை புரிந்து கொள்ளவில்லையே. பரப்பிரும்மமான தத்தாத்திரேயருக்கு மற்றவர்களை அப்படியெல்லாம் சோதனை செய்வதில் அலாதியான ஆனந்தம் உண்டு.
''ஓ....தத்தாத்திரேயா, அவதார புருஷா, உலகைப் படைத்துக் காத்து தீய சக்திகளை அழிக்க வந்த முமூர்த்திகளின் அவதாரமானவரே, பரப்பிரும்மமே, உனக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. வேறு எந்த தடையும் இல்லை. வெவ்வேறு ரூபங்களில் உன் ஜோதியைக் கலந்து ரூபங்களை எடுக்கிறாய். இந்த உலகத்தை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு எடுத்துச் செல்ல அத்ரி முனிவர் - அனுசூயா தம்பதியினரின் அவதார புருஷனாகப் பிறந்தவரே, உன் பெயரை உச்சரித்தால் மட்டுமே போதும். பாபங்கள் விலகும், தீமைகள் அழியும். நீயே மூவுலகத்துக்கும் அதிபதி...தூயவனும் நீயே...உன்னை நாங்கள் அனுதினமும் மனம் வற்றும்வரை துதித்துக் கொண்டே இருக்க எங்களுக்கு சக்தி கொடு'' என அவரை வேண்டித் துதித்தார்கள்.
தத்தாத்திரேயர் எதிலும் பற்றில்லாமல் திரிவார். அதனால் அவர் மனது எந்த விதத்திலும் களங்கம் அடைந்தது இல்லை. ஜடத் தன்மையுடன் வெளியில் தெரியும் உடலுக்கும் உள்ளிருக்கும் புனித ஆத்மாவிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பார். அவர் எந்த நேரத்தில் எங்கு இருப்பார், எங்கு போவார் என எவருக்கும் புரியாத, தெரியாத புதிர் அவர். ஒருமுறைப் பார்த்தால் பிச்சைக்காரனைப் போல துணி உடுத்தி அரைகுறை ஆடைகள் அணிந்துகொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிவார். நான்கு நாய்கள் பின் தொடர, பசு மாடு பின்னால் நின்று கொண்டு இருக்க அப்படியும் காட்சி தருவார்.
இன்னொரு சமயத்திலோ ஏரிகளிலும், குளங்களிலும் முழ்கி நின்றும், சுடுகாடுகளில் உருண்டு புரண்டு கிடந்தும் நாட்கணக்கில் ஏகாந்தத்தை அனுபவித்தபடி இருப்பார். ஏரிகளில் முழ்கி பலமணி நேரம் அப்படியே கிடப்பது அவரது வாழ்கையில் சர்வ சாதாரணம். இப்படியாக அவரது வாழ்கை பல நூற்றாண்டு காலம் தொடர்ந்தது.
அவர் உலகிலேயே மிகப் பெரிய அவதாரம் என்றாலும் மனித உருவில் அவதாரம் எடுத்து இருந்ததினால் ஒரு துறவி போலவே அவதூதராகவே வாழ்ந்து கொண்டு இருந்தார் மும் மூர்த்திகளை ஒன்றடக்கி இருந்த அந்த அவதூதர். பல்வேறு இடங்களுக்கும் சென்று அலைந்து கொண்டு இருந்தாலும் அவருக்கு பிடித்த இடம் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதே. உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும், புலித்தோலை உடைப் போல உடுத்திக் கொண்டும் இருப்பார். அமைதியான ஆனால் ஜொலிக்கும் முகத்தையும் கொண்டவர் அவர்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment