பூலோகத்தில், எப்போதெல்லம் அநி யாயம் பெருக் கெடுக்கிற தோ, அப் போதெல்லாம், அவதா ரம் எடுப்பார் . திருமால் என்பது நம்பிக்கை. தெய் வங்களிலேயே அவர்தான் சாந்த மூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உட னே, அவ தாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடு வார். கம்சன் என்றகொடியவன், தன் சகோதரியை யும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், விஷ்ணு பக்தர்கள். அவர்களை க் காப்பாற்றவும், தர்மத்துக்கு புறம்பாக பறிக்கப்பட்ட நாட் டை தன் பக்தர்களான
பாண்ட வர்களிடம் ஒப்படைத்து, தர்ம த்தை நிலைநிறுத்தவும் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.
வசுதேவர் – தேவகி தம்பதிக்கு பிறந்த பிள்ளை கிருஷ்ணன். பக்தர்களுக்கெல்லாம் கண் போ ன்றவன்
என்பதால், "கண்ணன்' எனப்பட்டான். அவனுக்கு அழ கே அவனது நீலநிற மேனி தான். கிருஷ்ண ஜெயந்தி
நாளில் அவனை வரவேற்கும் விதத்தில், வீடுகளில் சின்னக் கண் ணனின் குட்டிப் பாதங்களை பதிப்பது
வழக்கம். இது, ஏதோ அல ங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது.
கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வே ண்டியது இறைவனின் திரு வடியைத் தான். ஆழ்வார்
கள் கண்ணனின் திருவடி யைப் பாடினர். அருணகிரி நாதர், முருகப் பெருமா னின் திருவடியில், தஞ்சம
டையும் பாக்கியம் கிடைக் காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக் கும்
திருவாசகத்தில்,
"திருவடி தீட்சை தந்தவனே… எங்கே போ னாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்…' னக்
கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்கு வோராக இருந்தாலும், இறைவனின் திரு வடியைப் பற்றிக்
கொள்ளவே ஆசை கொ ள்கின்றனர்.
ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென
அவர்கள் கால் களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதி ல்லை. "காலில் விழுந்து
விட்டான்… விட்டு, விடுங்கள்…' என்கின்றனர். இதுபோல், "என் வாழ்வில் நடக்கும் இன்ப,
துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் கிருஷ்ணா, ராமா…' என்று, பகவான் காலில் விழுந்து
விட்டால், அதைத்தான், "சரணாகதி தத்துவ ம்' என்கிறது ஆன்மிகம்.
ஒரு காலத்தில், தமிழ் இல க்கியங்கள் அங்கீகரிக்க ப்பட வேண்டும் என்றால், அதை, மதுரை பொற்றாம ரைக்
குளத்தில் இருந்த சங்கப் பலகையில் ஏற்றி னால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு சமயம்,
நம்மாழ்வாருடைய பாசுரங்களை உருக்க மாகச் சொல் லியபடியே, மதுரகவியாழ்வார் அங்கு சென்றார்.
அங்கிருந்த சிலர், "உங்கள் ஆழ்வாருடைய பிரபந்தம் சங்கப் பலகை ஏறி ற்றா?' என, ஏளனம் செய் வது போல்
கேட்டனர்.
இதனால், வருத்தமடைந்த மதுரகவியாழ்வார், ஆழ் வார்திருநகரிக்கு வந்து, நடந்த விஷயத்தை நம்
மாழ்வாரிடம் வருத்தத் துடன் சொன்னார். அவரி டம், "கண்ணன் கழலிணை எண்ணும் மனமுடையீர்…
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே…' என்ற ஒரு பாசு ரத்தை எழுதிக் கொடுத்தார் நம்மாழ்வார். அதை,
சங்கப் பல கையிலே வைத்தார் மதுரகவியாழ்வார். அது, பலகையில் ஏறியது.
"நாம் கண்ணனின் திருவடியை அடைய வேண்டும் என்றால், "நாராயணா' எனும் நாமத்தை நினைக்க வேண்டும்…' என்பது இதன் பொருள்.
இப்படி, கண்ணனின் திருவடிக் கு ஒரு சிறப்பு இருப்பதால் தா ன், அவனது அவதார நன்னாளி ல், நம்
வீடுகளில் அவன் திரு வடியைப் பதிக்கிறோம். ஒவ் வொரு முறை பதிக்கும் போதும், "நாராயணா…
நாராயணா…' என உருக்கமாகச் சொல்லியபடியே பதித்தால், நமக்கு மறு பிறப்பு என்பது இல்லை. வாழும்
காலத்தில், செல்வச் செழிப் புக்கு குறைவிருக்காது. பசு, கன்று வளர்ப் போருக்கு பால்வளம் பெருகும்;
நாட்டில் சுபிட்சமும், அமைதியும் ஏற் படும்.
சுகப்பிரம்ம மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவுக்கு கண்ணனின் கதை யைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜா,
"எனக்கு பசியே இல்லை…' என்றாராம். கண்ணன் என்ற சொல் லுக்கு அவ்வளவு மவுசு!
கிருஷ்ண ஜெயந்தி நாளில் மட்டு மல்ல… அவனை எந்நாளும் நம் மனதில் நினைத்தவருக்கு, வாழ்வில்
என்றும் இன்பமே! -
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment