2014-ஆம் வருட ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட "The Act of Killing" என்றொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். Very chilling and distressing documentary.
1960-களில் இந்தோனேஷியாவில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கி வருகிறது. மேற்கத்தியப் பொருட்களையும், ஹாலிவுட் திரைப்படங்களையும் இந்தோனேஷியாவில் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள். ஏற்கனவே கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த மேற்கத்திய நாடுகள், இந்தோனேஷியாவிலும் அதே நிலைமை வருவதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கின்றன. அதன்படி, 1965-ஆம் வருடம் இந்தோனிஷிய ராணுவம் இந்தோனேஷியாவின் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. சுஹார்ட்டோ இந்தோனேஷிய அதிபராகிறார்.
அதற்குப் பிரதியுபகாரமாக இந்தோனேஷிய கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்க சுஹார்ட்டோவிற்கு அழுத்தம் கொடுக்கின்றன மேற்கத்திய நாடுகள். அதனை ஏற்றுக் கொள்ளும் சுஹார்ட்டோ, நாடு முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட்டுகளைக் கொல்லும்படி உத்தரவிடுகிறார். இதனை ராணுவமே நேரடியாகச் செய்தால் பிற உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடுமென்று அஞ்சிய சுஹார்னோ, அந்தக் கொலைகளைச் செய்து முடிக்க Pancacila Youth ('பஞ்சசீலா' என்று உச்சரிக்கிறார்கள்) என்றொரு அமைப்பினை ஏற்படுத்துகிறார். பெரும் கொலைகாரர்களும், ரவுடிகளும், கிரிமினல்களும் மட்டுமே Pancacila Youth-இல் உறுப்பினர்களாக்கப்படுகிறார்கள்.
Pancacila Youth இந்தோனேஷிய கம்யூனிஸ்ட்கள், சீனர்கள், ஆட்சிக்கும் தங்களுக்கும் வேண்டப்படாதவர்களைப் பிடித்துக் கொல்ல ஆரம்பிக்கிறார்கள். குறைந்து பட்சம் ஐந்து இலட்சத்திலிருந்து, இரண்டரை மில்லியன் (ஆம்; 2.5 million!) இந்தோனேஷியர்கள் இந்தப் பஞ்சசீலா யூத்தினரால் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்தப் பஞ்சசீலா யூத்தில் உறுப்பினராக இருந்து, பல ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற அன்வர் காங்கோ மற்றும் இன்னொருவனைப் பற்றிய ஆவணப்படமே The Act of Killing. முக்கியமாக அன்வர் காங்கோ.
சினிமா தியேட்டரில் ப்ளாக்கில் டிக்கெட் விற்கும் சிறிய கிரிமினலான அன்வர், பஞ்சசீலாவில் சேர்ந்து தான் எவ்வாறு கம்யூனிஸ்ட்டுகளைக் கொன்றேன் என்பதினை இந்த ஆவணப்படம் முழுக்க நடித்துக் காட்டுகிறான். பல ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளும், சீனர்களும் அன்வர் காங்கோவினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சித்திரவதை செய்வதில் ஆரம்பித்து, தலைகளை வெட்டி வீழ்த்துவது, கழுத்தில் கம்பியை இறுக்கிக் கொல்வது...இன்ன பிற கொடூரங்களையும் புன்னகை பூத்த முகத்துடன், பெருமையாக நடித்துக் காட்டுகிறான் அன்வர். இந்தச் சம்பவங்கள் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் எந்தக் கோர்ட்டாலும் தங்களை ஒன்றும் செய்ய இயலாது என்று சிரித்த முகத்துடன் சொல்கிறார்கள் இந்த ஆவணப்படத்தில் வரும் அத்தனை கொலைகாரர்களும். They never show any remorse or guilt. Rather they explain everything with an air or casualness and a smile.
கடந்த நூற்றாண்டில் இந்தியாவைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகளிலும், பாகிஸ்தானில் துவங்கி, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், கம்போடியா, வியட்நாம், சீனா, இந்தோனேஷியா....என அத்தனை நாடுகளிலும் இனத்தாலும், மதத்தாலும், அரசியல் கோட்பாடுகளின் அடிப்படைகளாலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும். அதேசமயம் இந்தியாவில், ராணுவ ஆட்சிக்கு நிகரான மிசா அவசரச் சட்டத்தால் கொல்லப்பட்டவர்கள் அதிகபட்சம் ஒரு ஆயிரம் பேர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள் (அதுவே தவறுதான்).
பொறுமையிலும், சகிப்புத்தன்மையிலும் தன்னை நித்தம் அலங்கரித்துக் கொள்ளும் பாரத அன்னைக்கு மகனாகப் பிறந்ததில் நான் பெருமையடைகிறேன்.
Note : நான் ஒரு கம்யூஸ்ட்டோ அல்லது கம்யூனிஸ்ட் ஆதரவாளனோ அல்ல என்பதினை இங்கு தெளிவு படுத்த விழைகிறேன். இது நம் கண்முன்னே நாமறியாமல் நடந்த படுகொலைகளைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு மட்டுமே.
No comments:
Post a Comment