வயிற்றில் பெரும் கொழுப்பு தங்கி தொப்பையை
உண்டாக்கும் 12 பழக்கவழக்கங்கள்!!!
உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உடல் ஆரோக்கியம் என்பது வளர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் தான் வயிற்றில் கொழுப்பு வருவதற்கு காரணமாக உள்ளது.
வயிற்றில் உள்ள இந்த கொழுப்பை குழந்தைகளிடமும் கூட காணலாம்.
வயிற்றில் உள்ள கொழுப்பை ஒழுங்காக கவனிக்காமல் விட்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களை சந்திக்கும் இடர்பாடு ஏற்படும்.
வயிற்றில் கொழுப்பு உண்டாவதற்கு ஒன்றல்ல, இரண்டல்ல,
ஆனால் பல காரணங்கள் உள்ளது.
இந்த அச்சுறுத்தும் காரணங்களை தெரிந்து கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.
வயிற்றில் கொழுப்பு உண்டாவதற்கான காரணங்களைப் பார்ப்பதற்கு முன்பு அதனால் உண்டாகும் ஆபத்தைப் பற்றி பார்க்கலாம்.
இது உங்களை ஊக்கப்படுத்தலாம் அல்லது பிரச்சனை முளையில் இருக்கும் போதே எச்சரிக்கலாம்.
வயிற்றில் உள்ள கொழுப்புகளால் உண்டாகும் நோய்கள்
என்னவென்று தெரியுமா?
அவைகள்
இதயம், இரத்த அழுத்தம், கிட்னி, ஹைப்பர்டென்ஷன், வாதங்கள் மற்றும் புற்றுநோய் சம்பந்தப்பட்டவைகளாகும்.
சிறிய அளவில் இருந்தாலும் கூட அவை ஆபத்தை உண்டாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
தவிர, ஒரு முறை தொப்பை வர ஆரம்பித்து விட்டால், அது பெரிதாகி கொண்டே தான் போகும்.
அதனால் தொப்பை வருவதற்கான காரணங்களை கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் சேமிக்கப்படும் கொழுப்பை நீக்குவதும் மிகவும் கஷ்டம்.
அப்படியானால் கொழுப்பு நிறைந்த தொப்பையை குறைப்பது எப்படி?
வயிற்றில் கொழுப்பு சேர்வதற்கான காரணங்கள் பற்றிய அறிவைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.
சுறுசுறுப்பின்மை
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி காலம் காலமாக கூறப்பட்டு தான் வருகிறது.
சரியான உட்புற மற்றும் வெளிப்புற உடலை பராமரிக்க, உடற்பயிற்சி என்பது கட்டாயமாகும்.
ஒரு முறை உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டால், வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கலாம்.
இதனால் லூசான சட்டை போட்டு தொப்பையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை தானே!
நேரம் கழித்த இரவு உணவு
இரவு நேர உணவு செரிமானமாக போதிய நேரம் தேவை.
நிறைந்த வயிற்றுடன் படுக்க சென்றால், சரியான செரிமானத்தையும், உணவை சரியாக பங்களிப்பு செய்வதையும் தடுக்கும்.
இதன் விளைவாக, கொழுப்புகள் எல்லாம் வயிற்றில் தேங்கி விடும்.
அளவுக்கு அதிகமாக உண்ணுதல்/குடித்தல்
உணர்ச்சி ரீதியாக சோர்ந்து போயிருக்கும் போது அளவுக்கு அதிகமாக உண்ணும் அல்லது குடிக்கும் பழக்கமுடையவர்களா நீங்கள்?
இது உணர்ச்சி ரீதியாக கண்டிப்பாக உங்களுக்கு உதவ போவதில்லை. மாறாக உங்கள் வயிற்றை சுற்றி கொழுப்பு தான் தேங்கும்.
அளவுக்கு அதிகமாக உண்ணுவதற்கு பதிலாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
இது நல்ல பயனை அளிக்கும். டென்ஷனை போக்கவும் உதவும்.
குறைந்த புரதம் நிறைந்த உணவுகள்
புரதம் என்பது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த மிகவும் அத்தியாவசியமாகும்.
இது இன்சுலின் அளவை குறைத்து கூடுதல் மெட்டபாலிக் வீதத்தை மேம்படுத்தும்.
உயர்ந்த மெட்டபாலிக் வீதம் என்றால் கொழுப்புகள் வேகமாக எரியும் என்று அர்த்தமாகும்.
மேலும் பசியை அதிகரிக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் புரதம் உதவுகிறது.
அதனால் உங்களை மெலிய வைக்க இது உதவிடும்.
ஒழுங்கற்ற உணவுகள்
உங்கள் உடலுக்கு அடுத்த வேளை உணவு எப்போது வரும் என தெரியவில்லை என்றால், கொழுப்புகளை சேமிக்க தொடங்கி விடும்.
இந்த நிலையை தவிர்க்க, சீரான இடைவேளையில் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதனால் உடலுக்கு தொடர்ச்சியான ஆற்றல் திறன் வந்த வண்ணம் இருக்கும்.
தூக்க குறைபாடு
பருவம் வந்த உடல் என்றால், தினமும் 7 மணிநேர ஆழ்ந்த தூக்கம் கண்டிப்பாக தேவையானது.
சில மணிநேரம் கூடுதலாக விழித்திருந்தால் அல்லது தூக்கத்தை எதிர்த்து போராடினால், அது உங்கள் கார்டிசோல் அளவை அதிகரித்து விடும்.
மேலும் சர்க்கரை உணவுகளின் மீது நாட்டத்தை கொண்டு வரும். வயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகி விடுகிறது.
மதுபானம்
கட்டுப்பாட்டுடன் எப்போதாவது குடித்தால் பிரச்சனை இல்லை.
ஆனால் அளவுக்கு மீறி செல்கையில், மதுபானத்தால் உங்கள்
உடலில் கலோரிகள் அதிகரிக்கும்.
இதனால் வயிற்றில் கொழுப்புகள் தேங்கும்.
கார்பனேட்டட் பானங்கள்
கார்பனேட்டட் பானங்களில் கலோரிகள் அதிகமாக உள்ளது.
அதற்கு காரணம் அதிலுள்ள அதிகளவிலான சர்க்கரையே.
இந்த சர்க்கரை அதிகமாக உண்ணுவதற்கு தூண்டி விடும்.
இதனால் நீங்கள் அதிகமாக உண்ண ஆரம்பித்து விடுவீர்கள்.
இதனால் உங்கள் வயிற்றில் கொழுப்புகள் தேங்கி விடும்.
டயட் பானங்கள் கூட உங்களை விட்டு வைக்க போவதில்லை.
ஆரோக்கியமற்ற உண்ணும் பழக்கங்கள்
பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள் அதிக அளவிலான கலோரிகளுடன் வருகிறது.
அந்த உணவுகளின் சேர்வையுறுப்புக்களை பார்த்தீர்களானால், அவைகளில் ஏதோ ஒரு வகையில் சர்க்கரை கலந்திருக்கும்.
மாதவிடாய் நிறுத்தம்
மாதவிடாய் நிறுத்தத்தின் போது, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் அவர்களின் வயிற்று பகுதியில் அதிக கொழுப்புகளை பெறும் வாய்ப்புகள் உள்ளது.
பரம்பரை
உங்கள் பெற்றோருக்கு இந்த பிரச்சனை இருந்திருந்தால், அவை உங்களுக்கும் அப்படியே வந்திருக்கலாம்.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், உங்கள் டயட் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும் கூடுதல் கவனம் தேவை.
பிடித்திருந்தால் "LIKE" பண்ணுங்கள்...
ரொம்ப பிடித்திருந்தால் "SHARE" பண்ணுங்கள்...
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment