Tuesday, 11 November 2014

கடவுள் மேல் நமது நம்பிக்கை






ஒரு ஊரில் ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் மட்டுமே !. அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து, அந்த பாலை அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அவள் வாழ்ந்து வந்தாள்...
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொண்டு போய் கொடுப்பது வழக்கம்...
ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அதாவது, அந்த பெண் தாமதாக வந்தாள் ! அன்று ஒரு நாள் மட்டுமல்ல ..இது தொடர் நிகழ்ச்சியாக போனதால் .ஒரு நாள் அவர் அந்த பெண்ணிடம் கோபமாக , 
'' இதோ பாரம்மா ..…நீ தினசரி சரியான நேரத்துக்கு பால் கொண்டு வராததால் , எனக்கு எல்லாமே தாமதமாகிறது "என்றார் ; பதிலுக்கு அந்த பெண் மிக மெலிதான குரலில் , 
'' "மன்னிக்க வேண்டும் சாமி..... நான் என்ன செய்வேன் …. நான் வீட்டை விட்டு சீக்கிரமாக தான் கிளம்புகிறேன் ...ஆனால், இங்கே வருவதற்கு, கரையில் படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறதே !'' என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு: 
: மறுகணம் சந்நியாசி எரிச்சலும் , சலிப்பும் மேலிட , , 
" சரிதான் !..... ஆற்றை கடக்க படகுக்கு காத்திருக்கிறாயா ?.... அவனவன் பிறவிப் பெருங்கடலையே "கிருஷ்ணா கிருஷ்ணா' என்று சொல்லி கொண்டே டே தாண்டி விடுகிறான் !.... நீ என்னவோ , ஆற்றை கடப்பதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்கிறாயே !''
என்றார் கோபத்தில் முகம் சிவக்க :
அவரின் வார்த்தைகள் அந்த பெண்ணின் மனதில் இனம் புரியாத ஒரு மாற்றத்தை உண்டாக்க ....ஒரு தீர்மானத்துடன் அங்கிருந்து அவள் கிளம்பினாள் !....
மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர....இப்போது சந்நியாசியின் மனதில் திகைப்பும் , ஆச்சரியமும் ! மனதில் தோன்றியதை செயல் படுத்தும் விதமாய் அவர் ஒரு நாள் அவளை நோக்கி , 
"அம்மா .... இப்போதெல்லாம் ம் சரியான நேரத்துக்கு வந்துவிடுகிறாயே ...என்ன மாயம் .....'' மேற்கொண்டு அவர் ஏதோ பேசு முன் அவசரமாய் இடையே குறுக்கிட்டாள் அந்த பெண் :
'' மாயம் ஏதுமில்லை சாமி ..... நீங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் !...…. அது மூலமாக தான் நான் ஆற்றை சுலபமாக தாண்டுகிறேன் !..உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா ?.......நான் . படகுக்காக இப்போதெல்லாம் காத்திருப்பது கிடையாது '' 
அவள் புன்னகையுடன் பேசி கொண்டே போக ... .....சன்னியாசிக்கு தாங்கொணா ஆச்சரியம் ! விழிகள் வியப்பில் விரிய ,
"என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வைத்து ஆற்றை தாண்டுகிறாயா....என்னால் நம்பமுடியவில்லை நீ சொல்வது உண்மையானால் இப்போதே என்னுடன் ஆற்றங்கரைக்கு கிளம்பு …. ...நீ ஆற்றை தாண்டுவதை நான் நேரில் பார்த்தால் தான் உன் வார்த்தைகளை நம்புவேன் ! '' என்று உறுதியாக கூற .....அவளும் அவரின் கோரிக்கையை ஏற்க ......இருவரும் ஆற்றங்கரையை நோக்கி நடந்தனர் :
ஆற்றின் கரைக்கு சென்றவுடன், "எங்கே தாண்டு பார்க்கலாம்" என்றார் சந்நியாசி அந்த பெண்ணிடம்.:மறுகணம் அந்தபால்காரப் பெண், கைகள் இரண்டையும் கூப்பியபடி "கிருஷ்ணா கிருஷ்ணா" என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க துவங்க ......
இப்போது அந்த சன்னியாசியின் முகத்தில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி ! கண நேரத்தில் அவரின் மனதில் ஆயிரமாயிரம் எண்ண அலைகள் !
. ஆறு எவ்வளவு ஆழம் என்று தெரியவில்லையே ..…. தவிர கால் உள்ளே போய் விட்டால் என்ன செய்வது ?....ஆடை நனைந்துவிடுமே…?' 
என்று எண்ணியபடியே தானும் அவளை போன்றே ஆற்றில் நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் , 
. 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க எத்தனிக்க .......
மறுகணம் கால் உள்ளே சென்றது !
.... சன்னியாசி தடுமாறினார் !பின் திகைப்பு மேலிட அந்த பெண்ணை நோக்கி ,
"அம்மா உன்னாலே முடிகிறது ... என்னால் ஏன் முடியவில்லை ….?" என்று அப்பாவியாய் கேட்க , பதிலுக்கு அந்த பெண்ணோ பணிவுடன் , 
, "சாமி ....…. உங்க உதடு 'கிருஷ்ணா கிருஷ்ணா'என்று சொன்னாலும்..... உங்கள் கவனம் முழுதும் உங்கள் உடுப்பு நனையக்கூடாது என்று தூக்கி பிடிப்பதிலேயே இருக்கிறது !.... ...ஆற்றின் ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்களின் இந்த முயற்சி, அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்லவா இருக்கிறது ?''
' பட்டு கத்தரித்தாற் ' போன்ற அவளின் இந்த வார்த்தைகள் சன்னியாசியின் மனதில் குற்ற உணர்ச்சியை உண்டாக்க ........வெட்கத்தில் தலை குனிந்தார் அவர் !!
கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.!!

__._,_.___

Posted by: Mathangi k kumar <mathangikkumar@gmail.com>

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator