கடந்த 50 ஆண்டுகளுக்குள் தான் மனிதனை மனிதன் மதிக்கும் பழக்கம் தோன்றியது. அதுவரை எந்த அளவிற்கு கொடூரமாக ஒரு மனிதனை ஒருவன் கொல்கிறானோ அந்த அளவிற்கு அவன் வீரன் என்று அழைக்கப்பட்டான்.
ரோமானியர்கள் காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் பொழுது போக்கிற்காக மனிதர்கள் கொல்லப்படுவதை பார்த்து ரசித்தனர். பெரிய மைதானத்தில் சுற்றிலும் அமர்ந்து, இரண்டு அடிமைகளை களத்தில் இறக்கிவிட்டு ஆயுதங்களை கொடுத்து விடுவார்கள். எதிரியை கொன்றால் மட்டுமே தன்னால் உயிர்வாழ முடியும் என்ற நிலை. இதனால் தன் பலம், திறமை முழுவதையும் வெளிக்காட்டி தங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக ஆவேசத்துடன் போராடுவார்கள்.
இந்த ஜீவ மரணப் போராட்டத்தை மேல அமர்ந்திருப்பவர்கள் பார்த்து ரசித்து மகிழ்வார்கள்.
இப்படி பார்வையாளர்களின் மத்தியில் கேளிக்கைக்காக சண்டை போட்டு உயிரை விடும் இவர்களை 'கிளாடியேட்டர்கள்' என்று அழைத்தார்கள். தமிழில் 'அடிமை போராடிகள்'.
பலியிடப்படும் ஆட்டிற்கு நல்ல ஆரோக்கியமான உணவை கொடுத்து கொழு, கொழு என வளர்ப்பதைப் போல, தங்களது சந்தோஷத்திற்காக உயிரை விடும் இந்த அடிமைகளுக்கும் சத்துள்ள உணவைக் கொடுத்து பலசாலிகளாக வளர்த்து வந்தார்கள்.
இவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில் ஆயிரக்கணக்கில் பலர் உயிரை விட்டிருக்கிறார்கள். போட்டி போடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமைகள் இருவரும் வட்டமான சிறிய பலகை மீது ஒருவரையொருவர் தொடும் தூரத்தில் நிறுத்தப்படுவார்கள். ஓடிவிட முடியாதபடி அவர்களின் கால்கள் கயிற்றால் கட்டி வைக்கப்படும். கூரான ஆணிகளை கொண்டு தோலினால் செய்யப்பட்ட கையுறைகளை அணிவித்து போட்டி தொடங்கியதும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். சிறிது கூட ஓய்வு இல்லாமல், இருவரில் ஒருவர் கொல்லப்படும் வரை போட்டி நீடிக்கும்.
தேஸோஸ் என்ற ஊரை சேர்ந்த தியோஜீன்ஸ் என்ற அடிமை தன்னை எதிர்த்து போட்டியிட்ட 1475 போட்டியாளர்களை கொன்று அனைவரது பாராட்டையும் பெற்றதுதான் உச்சகட்ட சாதனை பட்டியலில் இருந்து வருகிறது. | Timeline Photosதினம் ஒரு தகவல் - 'கிளாடியேட்டர்' ரோமானியர்கள் காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் பொழுது போக்கிற்க... |
|
|
No comments:
Post a Comment