விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர
வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில்
எழுந்து கழிவறைக்குச் செல்லும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின்
எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும்
கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின்
நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும்வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன்போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள்.இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல்செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிறநேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக்குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00மணி வரை இதயத்தின் நேரம்.
இந்தநேரத்தில்அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம்
பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிகஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதியஉணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.
பகல்நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற,எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய,வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber.இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ளமூன்று பகுதிகளைஇணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச்செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்தநேரத்தில்தூங்காது விழித்திருந்தால்பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00மணி வரை கல்லீரலின் நேரம்.
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும்ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment