சர்க்கரை நோய் ஏன் வருகிறது?
முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்!
சர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக கட்டுரைகள் படித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆயினும் சர்க்கரை நோய் பற்றி எப்போதும் சந்தேகம் ......
• ஏன் சர்க்கரை நோய் வருகிறது?
• என் பெற்றோருக்கு நீரிழிவு நோய் உள்ளது..
எனக்கு வருமா?என்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகின்றனர்.
இதற்கு நாம் அறிவியல்அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இக்கட்டுரை இந்த நோய் பற்றித்தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும், இந்நோய் பாதிக்கப்பட்டோருக்கும், நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போர் குடும்பத்தினருக்கும்நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இங்கு மிகவும் விரிவாக அறிவியல் விளக்கங்கள் எழுதாமல் முடிந்த அளவு எளிமையாக உள்ளது.
நீரிழிவு நோயைப் பொதுவாக இரண்டு வகைப்படுத்தலாம்.
1.முதல்வகை நீரிழிவு நோய்
2.இரண்டாம் வகை நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் வரக்காரணங்கள்.
நீரிழிவு நோய் வர நிறையக் காரணங்கள் உள்ளன.
• மரபு வழி- அம்மாவுக்கு நீரிழிவு இருந்தால் 2- 3% பிள்ளைகளுக்குவரலாம்.
அப்பாவுக்கு இருந்தால் 3% க்கு சற்று அதிகமாக வரலாம்.
தாய்தந்தை இருவருக்கும் இருந்தால் நீரிழிவு வரும் வாய்ப்புக்கள் இன்னும்அதிகம்.
• உணவுக்குறைபாடு- குறைந்த புரத உணவு, நார்ச்சத்துக் குறைவானஉணவு
• உடல் எடை, கொழுப்பு அதிகம்
• உடலுழைப்பற்ற வேலை
• மன அழுத்தம்
• மருந்துகளால் - வேறு நோய்களுக்குக் கொடுக்கும் சிலமருந்துகள் நீரிழிவு நோயைத் தூண்டுபவை.
• கணையத்தில் கிருமித் தொற்று.
• இரத்த அழுத்தம்
• இரத்தத்தில் கொழுப்பு அதிகமிருத்தல்
• புகை பிடித்தல்- புகைக்கும் பழக்கம் உள்ளோருக்கு நிரிழிவு நோய் வரும்வாய்ப்புக்கள் அதிகம்.
அவர்களுக்கு கண் கோளாறும், மூட்டுத்தேய்வும்ஏற்படும்.
நீரிழிவு நோயாளிகள் அதிகம் புகைத்தால் வாழ்நாள் குறையும்.
முதல் வகை நீரிழிவு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்களிடையே பலஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன.
அவற்றைத்தெரிந்துகொண்டாலே நோய் பற்றி ஓரளவு தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
முதல் வகை நீரிழிவு ( Type 1 Diabetes Mellitus)
இன்சுலின் உடலில் உற்பத்தியாகாது.
நோய் வருவதைத் தடுக்க முடியாது.
அதிக உடற்பயிற்சியாலோ, உணவுக்கட்டுப்பாட்டாலோ வராமல் தடுக்க முடியாது.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்காது.
நீரிழிவு நோயாளிகளில் 15% பேர் இந்த வகையினர்.
சிறு வயதிலேயே ஆரம்பித்து விடும்.(குழந்தைகளிலும்!)
நோய்க்குறிகளும், விளைவுகளும் கடுமையாக இருக்கும்.
குழந்தை பலகீனமாகவும், உடல் எடை குறைவாகவும் ஆகிவிடும்.
அதிக தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், பசிக்குறைவு,உமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும்.
இன்சுலின் ஊசி அவசியம்,
தினமும் இருமுறை அல்லது அதற்குமேல் தேவைப்படும்.
ஊசிக்கேற்றவாறு உணவு முறைப்படுத்தி உண்ணவேண்டும்.
பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
• இரண்டாம் வகை நீரிழிவு(Type 2 Diabetes Mellitus)
• இன்சுலின் உடலில் உற்பத்தியாகும்.
• நோய் வருவதைத் தடுக்கலாம்.
•அதிக உடற்பயிற்சியாலோ, உணவுக்கட்டுப்பாட்டாலோ வராமல் தடுக்கலாம்.
• கணையத்தில் பீட்டா செல்கள் இருக்கும்.
• 85% பேர் இந்த வகையினர்!
• நடு வயதில் ஆரம்பிக்கும்.
• இரத்த அழுத்தம், அதிக உடல் எடை ஆகியவற்றால் வரலாம். நோயாளிகளில் 55% பேர் உடல் எடை அதிகமுள்ளவர்கள்.
• .நோய்க்குறிகள்: கண் பார்வை மங்குதல், ஆறாத புண், தோல் அரிப்பு, அதிக தாகம், வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வலி.
• உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரைகள் ஆகியவற்றால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
• இதிலும் பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
இதைப்படிக்கும் என் அன்பு நண்பர்கள், மற்றவர்களுடன் பகிரவும் |
No comments:
Post a Comment