Monday, 10 November 2014

சகோதரிகளே உங்களுக்கான தலையணை மந்திரங்கள்-16 !!

சகோதரிகளே உங்களுக்கான 

தலையணை மந்திரங்கள்-16 !!

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. 

சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம். 

கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! 

சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.

இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். 

நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 

ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!

எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!

1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். 

தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.

ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.

நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.

2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். 
எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. 

இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! 

கணவனின் கருத்தையும் கேளுங்கள். 

இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது 
வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். 

வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் 

புகழ் அற்றவராக இருக்கலாம். 

ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்
(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. 
ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)

4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. 

நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். 

ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். 

வெற்றிபெற விடுங்கள். 

அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். 

நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். 

கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். 

இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். 

ஒருவர் போல் மற்றவர் இல்லை. 

உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். 

சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த 
அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!

6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். 

கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். 

விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். 

இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை 
விழிக்க அனுமதிக்காதீர்கள். 

நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.

8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். 

கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.

9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். 

அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். 

கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.

10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். 

பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். 

ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். 

நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.

11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். 

எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 

புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். 

இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். 

அப்புறம் என்ன? 

கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?

12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள்.

"ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்" என்று கணவன் நொந்து 
போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.

13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். 

அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். 

ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். 

துப்புறவு மட்டும் செய்யுங்கள். 

எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை 
ஓய 2 நாள் ஆகும்.

14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். 

இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். 

குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் 
நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.

15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. 

தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். 

நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். 

தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். 

உங்களை நீங்கள் காதலியுங்கள். 

உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.

16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை 
அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். 

இது மிகவும் தவறு. 

ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. 

இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. 

இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். 

ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!

....

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator