காடகம் - வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய்த பலன்:
சக்தியும், மகத்துவமும் வாய்ந்த இந்த காடகத்தை பற்றி ஒரு வார்த்தை.
தைத்ரீய யஜுர் பிராஹ்மண காடகம் என்றும் அழைக்கப்படும் காடகத்தில் மொத்தம் மூன்று ப்ரச்நங்கள் இருக்கின்றன. மொத்தமாக சேர்த்து பார்த்தால் கிட்டத்தட்ட 167 பஞ்சாதிகள் ஆகும்.
பல பெரியோர்களின் அபிப்ராயப்படி காடகத்தை பாராயணம் செய்வதே ஒரு மகத்தான உபாஸனை ஆகும்.
ஆம், காடக மந்த்ரங்களை பாராயணம் செய்வதே உபாஸனை ஆகிறது.
அது மட்டுமல்ல. காடகத்தை நம்பிக்கை, ச்ரத்தையுடன் பாராயணம் செய்வதால் வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என பெரியோர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். மனு ஸ்முருதியிலும் இதற்கு ஆதாரம் கிடைக்கின்றது.
காடகத்தில் ஒரு விசேஷ உபநிஷத் அடங்கி இருப்பதனாலும், மேலும் இது ஒரு தனி ஸாகையாக இருப்பதனாலும் இதை ஆபத்கால தர்மமாக அத்யயனம் செய்தவர் வேத ஸாகை ஒன்றை முழுவதையும் அத்யயனம் செய்ததாக சொல்லப்படுவதுண்டு.
இதை குறிப்பிடுவதின் தாத்பர்யம் என்னவென்றால் காடகம் அவ்வளவு சிறப்புடைய வேத பகுதி என்பதே.
'காடகம்' கற்றுத் தர புது வகுப்புக்கள்: ஒரு சிலர் கேட்டுகொண்டதற்கிணங்க யஜுர்வேதத்தின் அங்கமான 'காடகம்' பகுதியை கற்றுதர புது வகுப்புக்கள் விரைவில் சென்னை மேற்கு மாம்பலத்தில் துவங்கவிருக்கின்றது.
தகுதி: ஏற்கனவே சூக்தாதிகள் பாடமாகியிருக்க வேண்டும். மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது வியாழன், வெள்ளி நாட்களில், நடைபெறும் 'க்ளாஸ்'க்கு' 'ரெகுலராக' வரமுடியுமானால் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய நபர்: ஸ்ரீ விஸ்வநாதன் அவர்கள் : 9840318675 |
No comments:
Post a Comment