பரிகாரங்களால் கடைத்தேற முடியும் என்பதற்கு காஞ்சி மகா பெரியவர் வாழ்வில் ஒரு சம்பவம்.
(இந்திரா சௌந்தர்ராஜன்)
கொல்கத்தாவை சேர்ந்த சேட்ஜி ஒருவர் பெரும் செல்வந்தர். இவருக்கு எவருக்கும் வந்திராத ஒரு நோய் வந்தது. ஆம்; வாய் வழியாக எதையுமே சாப்பிட முடியாது.
தண்ணீர்கூட வயிற்றை துளை போட்டு ஒரு புனல் வழியாகத்தான் ஊற்ற வேண்டும். மருத்துவர்களும் உயிர் வாழ மட்டும் வழி செய்து தந்தனர்; குணப்படுத்த முடியாது என்று கூறிவிட்டனர். இதில் அமெரிக்க மருத்துவர்களும் அடக்கம்! 'எனக்கு மட்டும் எதனால் இப்படி?' என்று அவர் அழாத நாளில்லை. இறுதியாக அவர் காஞ்சி பெரியவர் முன் கதறியழுதார். பெரியவர் ஒரு பரிகாரத்தை கூறினார்:
18 புராணங்களை உள்ளது உள்ளபடி அச்சிட்டு வேத விற்பன்னர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இது ஒரு விஷயமா என்று நினைக்கலாம். இது அவ்வளவு சுலபமில்லை. 18 புராணங்களையும் தேடி கண்டுபிடித்து உள்ளது உள்ளபடி அச்சிட்டு ஒவ்வொன்றையும் வேத விற்பன்னர்களை தேடிப் பிடித்து வழங்குவது என்பது ஒரு அரசாங்கத்துக்கே பெரிய சவாலான செயல்.
ஆனால் சேட்ஜி அதை வெற்றிகரமாய் செய்து முடித்தார். அதற்கு அவருக்கு பல காலமும் பல லட்சங்களும் செலவாயின. 18வது புராணம் அச்சாகி வந்த நிலையில்கூட அவரிடம் எந்த குணமும் தெரியவில்லை. ஆனால் அதை அளிக்க இருந்த தினத்துக்கு முதல் நாள் இரவில் அவருக்கு தாகம் எடுத்து அவர் தண்ணீர் குடித்து, அவரது விசித்திர வியாதியும் ஒழிந்து போனது! மேல்நாட்டு மருத்துவர்களும் அதைப் பார்த்து அதிசயித்தனர்.
சேட்ஜி பெரியவர் காலில் விழுந்து ''உங்களால்தான் குணமானேன்'' என்றார். பெரியவரோ, ''காரணம் நானில்லை; புராணங்களுக்குள் வாழும் முனிவர்கள், ரிஷிகள், பத்தினியர்கள் இவர்கள்தான். நான் வழிகாட்டியவன் மட்டுமே'' என்றாராம். அப்படியானால், சரியான பரிகாரங்கள் பலன் தருகின்றன என்பதுதானே உண்மை?
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment