தொலைபேசி வெற்றிக்கு..!
உலகின் எல்லா பாகங்களிலும் தொலைபேசி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் ஒரு வருத்தத்திற்கு உரிய உண்மை.
நம்மில் பலருக்கு தொலைபேசி (செல்போன், லேண்ட்லைன் இரண்டையுமே இங்கு குறிப்பிடுகிறேன்) உரையாடலின் ஒழுக்கவியல் தெரிவதில்லை. தொலைபேசி ஒழுக்கவியல்:
1. நீங்கள் பிறரை அழைப்பதாக இருந்தால் சப்தம் இல்லாத இடத்தில் இருந்து அழைக்கவும்.
2. அலைபேசியாக இருந்தால், சிக்னல் உள்ள இடத்தில் இருந்து அழைக்கவும்.
3. அழைப்பை எடுக்க முடியாவிட்டால், ப்ரீ ஆனவுடன் திரும்ப அழைக்கவும். 4. கனிவாக பேசவும். (இந்த பழக்கம் அதிக நபர்களிடம் இல்லவே இல்லை)
5. சடார் என்று கட் செய்யாமல் உரையாடல் முடிந்து ஒரு வினாடி கழித்து, எதிர் முனையில் இருந்து பதில் இல்லை என்றால், கட் செய்யவும்.
6. அலைபேசியை கட் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கட் செய்யாமல் விட்டுவிட்டு அழைத்தவரைப்பற்றி தவறாக அருகில் உள்ளவரிடம் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள் அதிகம்.
7. சரியான நபரிடம்தான் பேசுகிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொலைபேசி அழைப்புகளின் ஆச்சரிய தகவல்: 1. அழைப்பு கனெக்ட் ஆன இரண்டு வினாடிகளுக்கு அப்பால் பேச்சைத் தொடங்கிய அழைப்புகள் பிரச்சனையில் முடிகின்றது.
2. அடிக்கடி ஹோல்ட் செய்வதும், 15 வினாடிகளுக்கு மேல் ஹோல்ட் செய்வதும் பிரச்சனையான அழைப்புகளாக மாற வாய்ப்புள்ளது. 3. அறிமுகம் செய்வதில் அவசரப்படுபவர்கள் 60% பிரச்சனையான அழைப்புகளை செய்கிறார்கள்.
4. தொலைபேசி அழைப்புகளில் உங்கள் உணர்வுகள் பேச்சின் வாயிலாக புரிந்துகொள்ளப் படுகிறது. எனவே நல்ல உணர்வோடு பேசவும்.
5. பெரும்பாலும், பணிவாக பேசுகிறவர்கள், மற்றவரை அமைதிப்படுத்துகிறார். ... |
No comments:
Post a Comment