வாழும்போதே தான தருமங்கள் செஞ்சி புண்ணியம் சேர்த்துக்கனும். பாவமென்று சொல்பவற்றை மறந்தும் கூட செய்யக்கூடாது.
தானத்தில் சிறந்தது அன்னதானம்னு சொல்வாங்க.
கர்ணன் எவ்ளோ பெரிய கொடையாளின்னு உங்களுக்கு தெரியும். அவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு போனான். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்பதே யாருக்கும் இருக்காது! தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு வந்தார். அவரிடம் தனக்கு பசிக்கும் காரணத்தை கேட்டான்.
நாரதர், "பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள்" என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தவுடன், பசி நீங்குகின்றது.
அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார். அதற்கு, நாரதர் "உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய். ஆனால், அன்னதானம் செய்ததில்லை. அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் ஏன் பசி நீங்குகிறது என்றால உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் ஒரு பிரஜை உன்னிடம் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்று சொன்னாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானம் நடக்கின்ற இடத்தை காட்டியமையால் உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.
அன்னதானம் செய்யாமலேயே, அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.
No comments:
Post a Comment