இன்றைய கட்டுரை நமது பிரச்சனைகளை சாதகமாக்கி
வெற்றிபெற ஒரு உண்மைச் சம்பவம்.
மணப்பாறை முறுக்கும் ஒரு வணிக பாடமும்
மணப்பாறை முறுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தின்பண்டம்.
கிடைத்த தகவலின் படி தினமும் 2000 கிலோகிராம் வரை சென்னைக்கு மட்டும் முறுக்கு மணப்பாறையில் இருந்து அனுப்பப்படுகிறது.
மணப்பாறை முறுக்கு உண்டான விதம் ஒரு சுவாரசியமான கதை.
முன்னாளில் மணப்பாறையில் ஒரு வற்றாத கிணறு இருந்தது.
அதில்தான் மக்கள் குடிநீர் எடுத்துச் செல்வார்கள்.
சில வருடங்கள் முன், அந்த கிணற்றில் வந்த சுவையான தண்ணீர் உப்புத் தண்ணீராக மாறியது.
இப்படி பல கிணறுகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டன.
அவை இப்பொழுது பொதுமக்கள் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டன.
ஆனால் ஒரு முறுக்கு வியாபாரி இதன் உப்புத்தன்மையை பயன்படுத்தி (தண்ணீர் பஞ்சம்தான்) முறுக்கு செய்து விற்றார்.
அவருடைய முறுக்குகள் பிரபலமாகவே, மற்றவரும் (அவரிடம் வேலை பார்த்தவர்கள் உட்பட) இந்த இரகசியத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
உப்பு மிச்சம் என்று பார்த்தால், அதில் வந்த தண்ணீரில் இருந்த மற்ற இயற்கை கனிமங்கள் முருக்கிற்கே ஒரு முறுக்குத் தன்மையை கொடுத்து, இன்று சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.
இப்போது அந்த கிணற்றுத் தண்ணீருக்கு அவ்வளவு டிமாண்ட்.. ஒருவருக்கு ஒரு குடம் தண்ணீர்தான் தினமும் தரப்படுமாம்..!
வணிகத்திற்கு நிபந்தனை இன்றி சரணடைந்த ஒருவர் தனக்கு வரும் சோதனைகளை சாதனைகளாகவே மாற்றி வெற்றி கொள்வார்..!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment