Friday, 18 July 2014

ஒரு குட்டி கதை :

ஒரு குட்டி கதை :

கடவுள்: கழுதையைப்
படைத்து அதனிடம் சொன்னார். நீ
கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்
பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத்
தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.

கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மனிதனின்
வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல
நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.

நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மரங்களில்
கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

குரங்கு: எனக்கு 10
வருடங்களே போதும் சாமி.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: மனிதனைப் படைத்தார். நீ
சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்
அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

மனிதன்: சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

* அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்
மனிதனாகவும், 
* பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும்,
* குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்
நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,
* கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்
போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்........



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator