சகோதர சகோதரிகளே, முகநூலில் ஹிந்து மற்றும் இஸ்லாமியரிடையே நிறைய விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒருவர் மற்றவரின் நம்பிக்கையை பற்றி தெரியாமல் கூட விவாதிக்கிறோம். இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று யோசித்ததில் என் சிற்றறிவுக்கு கீழே உள்ளவை தோன்றின. தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
1)இஸ்லாம் என்பது மதம் அல்லது மார்க்கம்
ஹிந்து இஸம் என்பது வாழ்க்கை முறை
2)இறைவன் அருவமானவன்.
இறைவன் அருவம் உருவம் என்ற பேதங்களை கடந்தவன்.
3)இறைவன் நம் கண்களுக்கு புலப்படாதவன்.
இறைவன் தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.
4)உருவ வழிபாடு கூடாது அது கேவலமானது.
அருவம் உருவம் என்பன புலன்களை சார்ந்தது. இறைவன் புலன்களை கடந்தவன். வேண்டுதலுக்கு இணங்கி புலன்களுக்கு புலப்படுபவன்.
5)ஒரு தனி நபரான முஹம்மது நபிகளை சார்ந்தது. இறைத்தூதர் நபிகள், அவர்தான் இறுதி தூதர், அவர் மூலம் தான் புனித நூல் வெளிப்படுத்தப்பட்டது.
எந்த தனிநபரையும் சாராதது. முதல் தூதர், இறுதி தூதர் என்று யாரும் இல்லை. ஆயிரமாயிரம் குருக்கள், ரிஷிகள், முனிகள், சந்நியாசிகள் ஆகியோர் வழிகாட்டியாய் உள்ளனர்.
6)மெக்கா மற்றும் மெதினாதான் புனித நகரங்கள்.
அகண்ட பாரதம்தான் புன்னிய பூமி.
7)புனித நூலான குரானை மட்டுமே சார்ந்தது.
எதையுமே சாராதது. அறிவால் இறைவனை அறிய முடியாதென்பதே அறிவு. ஆயிரமாயிரம் நூல்கள், தத்துவங்கள், மார்கங்கள், அனுபவங்கள், கதைகள் மற்றும் ஒருவரின் உள்ளார்ந்த ஆழ்நிலை அனுபவங்கள் வழிகாட்டியாய் இருக்கின்றன.
8)அல்லாவின் மேலும் அவரின் தூதர் நபி மேலும் நம்பிக்கை வைக்காதவர் நரகத் தீயில் தள்ளப்படுவார்கள்.
இறைவனை நம்புவதற்கும் சுவர்க-நரகத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லாம் நம் கர்மவினைப்படி நடக்கின்றன. நல்லது செய்தால் நன்மை கிடைக்கும், தீயது செய்தால் தீமை கிடைக்கும்.
9)இறுதி நாளுக்கு பின் உலகம் அழிந்து முடிந்து விடும்.
யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அழிவுக்கு பின் ஆக்கம், ஆக்கத்தின் பின் அழிவு.
10)இறைவன்பால் மற்றும் இஸ்லாமில் நம்பிக்கை இல்லாதவர்கள் காஃபிர்கள்.
இறைவன்பால் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் ஹிந்து.
11)இறைவனை அல்லது அல்லாவை தவிர வேறு எதையும் தொழுவது கூடாது.
இறைவனை தவிர வேறு எதுவும் இல்லை. எதை மனதார தொழுதாலும் அது இறைவனே.
12)நம்பிக்கைக்கு முதலிடம். முதலில் நம்பு, பின்பு இறைவனை அறிவாய்.
இறைவனால் அளிக்கப்பட்ட அறிவுக்கே முதலிடம். அறிவால் உரசிப் பார்த்த பின்பு நம்பு. (இந்த பதிவு உட்பட)
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment