10 வேட்டி தான் சொந்தம்
************************************
அரசியல் வாதிகள் என்றாலே, அவர்கள் வாழும் சொகுசு பங்களாக்களும், அவர்கள் `பந்தா' வாக வந்து செல்லும் "ஸ்கார்பியோ'' வகை வாகனங்களும் தான் மக்கள் கண் முன்பு வருகிறது. இப்படியெல்லாம் இல்லாமல் நாடும், நாட்டு மக்களுமே என் சொந்தம் என்று வாழ்ந்து சென்றவர் காமராஜர்.
அவருக்கு சொந்தமாக என்ன-எவை இருந்தன என்று பலரும் ஆய்வு செய்த போது ஆச்சரியமூட்டும் தகவல்கள் தான் கிடைத்தன.
* 50 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல், பூர்வீக வீட்டு பக்கம் செல்லாமல் நாடு, நாடு என்று ஓடிக்கொண்டே இருந்தார். எனவே 50 ஆண்டு கால தேச சேவையே காமராஜருக்கு முதன்மையான சொத்தாக இருந்தது.
* 9 ஆண்டுகள் சிறைவாசம் செய்த தியாகம் அவருக்குச் சொந்தம்.
* 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வகித்து காங்கிரஸ் பேரியக்கத்தைக் கட்டிக்காத்த பெருமை அவருக்குச் சொந்தம்!
* 9 ஆண்டுக்காலம் தமிழக முதல்-அமைச்சராக இருந்து வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, கல்வியையும், தொழிலையும், விவசாயத்தையும் பெருக்கி, அன்னைத்தமிழை அரியணையில் ஏற்றி, அகில இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக விளங்கி, அனைவரது பாராட்டுகளும் பெற்ற பெருமைகளும் அவருக்குச் சொந்தம்!
* 6ஆண்டுக்காலம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து, அந்தக்குறுகிய காலத்திற்குள்ளேயே நூறாண்டுச் சாதனைகளைச் செய்து, இரண்டு முறை இந்தியப் பிரதமர்களைத் தேர்வு செய்து கொடுத்து "கிங் மேக்கர்'' என்று போற்றப்பட்டு "காலா காந்தி'' என்ற அடை மொழியையும் பெற்ற குடை சாயாத பெருமையும் அவருக்குச் சொந்தம்!
* கட்சிப்பணிக்காக முதல்-அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த துறவு மனமும் தூய்மைப்பாங்கும் அவருக்குச் சொந்தம்!
* கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து, பத்து கதர் வேட்டி-சட்டையும், ஒரே நூறு ரூபாய்த்தாளும் தான் தம் இறுதிக்கையிருப்பு என்று உலகத்தாருக்குச் சொல்லாமல் சொல்லி விட்டு, தம் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்ட சொக்கத்தங்கம் என்ற பெருமை அவருக்குச் சொந்தம்!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment