TAMIL TRANSCRIPT OF THE INTERVIEW OF 5 MUSLIM LEADERS ABOUT 'THE FEARS AND ASPIRATIONS OF THE INDIAN ISLAMIC COMMUNITY' IN THE FAMOUS PROGRAM 'AAP KI ADALAT' OF INDIA TV. (WARNING - A LENGTHY TRANSCRIPT)
மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1
July 10, 2014
மக்கள் சக்தியானது ஜாதி, மொழி, மதம் போன்ற தடைகளை உடைத்தெறிந்து….. ஹிந்துஸ்தானம் உலக அரங்கில் உன்னதமாக மிளிர்வதற்கு…… உறுதியான ஆட்சி அமைய வழி செய்தது…… நடந்து முடிந்த லோக்சபை தேர்தல்.
பார்ப்பன பனியா கட்சி என்றும் ஹிந்தி மாகாணங்களில் புழங்கும் கட்சி என்றும் கிண்டலடிக்கப்பட்ட பாஜக…ஹிந்துஸ்தானத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நாற் திசைகளிலும் தன் முத்திரை பதித்து துஷ்ப்ரசாரகர்களின் முகத்தில் கரிபூச முடிந்தது நடந்து முடிந்த தேர்தலில்.
கடைந்தெடுத்த ஓட்டுவங்கி மதவெறி அரசியலானது ஹிந்துஸ்தானம் முழுதும் மதசார்பின்மை என்ற பசுத்தோல் போர்த்தி இது வரை உலாவந்துள்ளதும் இந்த தேர்தலில் முடிவுக்கு கொணரப்பட்டுள்ளது. உள்ளீடற்ற மற்றும் அடிமட்ட மக்களுக்கு எந்த வளர்ச்சியையும் இதுவரை கண்ணிலும் காட்டாத ……..பசப்பு மட்டிலும் மிக்க…….மதசார்பின்மை கோஷத்தை ஒதுக்கி ……. தேச வளர்ச்சியை முன்னிறுத்திய……. ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்களுக்கு ஹிந்துஸ்தானம் முழுதும் உள்ள முஸ்லீம் சஹோதரர்களும் வாக்களித்திருந்தால் மட்டிலும் இப்படிப்பட்ட தனிப்பெரும்பான்மை கிட்டியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மதசார்பின்மை மாயையில் இருந்து வெளிவந்த முஸ்லீம் சஹோதரர்கள் மற்றும் அதிலிருந்து இன்னமும் வெளிவராத முஸ்லீம் சஹோதரர்கள்……. பாஜக மற்றும் மோதி பற்றி கொண்டுள்ள அச்சங்கள் யாவை மற்றும் மோதி சர்க்காரிடமிருந்து இவர்களது அபிலாஷைகள் யாவை என்ற விஷயங்கள்………. இண்டியா டிவி தொலைக்காட்சியினர் நிகழ்த்திய *ஆப் கீ அதாலத்* (உங்கள் ந்யாயாலயம்) என்ற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. மேற்கண்ட விவாதம் ஹிந்தி / உர்தூ / ஹிந்துஸ்தானி என்ற பலபாஷைகள் கலந்த ஒரு மொழிநடையில் நடத்தப்பட்டது. இந்த பாஷைகளில் பரிச்சயம் உள்ள அன்பர்கள் கீழ்க்கண்ட உரலில் உள்ள காணொலியில் இந்த நிகழ்ச்சியைக் காணலாம். இந்த பாஷைகளில் பரிச்சயம் இல்லாத அன்பர்களுக்காக இந்த நிகழ்ச்சியின் சாராம்சம் மூன்று பாகங்களில் ஆன இந்த வ்யாசத்தில் பகிரப்படுகிறது.
வ்யாசம் எழுதி முடித்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது. இதைப் பகிரலாமா வேண்டாமா என்று சம்சயம் இருந்தது. ஹிந்துக்களொடு கைகோர்த்து தேச வளர்ச்சியில் பங்கு கொள்ள விழையும் முஸ்லீம் சஹோதரர்களின் அச்சங்கள் யாவை மற்றும் இவர்களது அபிலாஷைகள் யாவை……போன்ற சில விஷயங்கள் இந்த வ்யாசத்தில் பேசப்படும் நிகழ்ச்சியில் பெருமளவு முஸ்லீம் சஹோதரர்களாலேயே விவாதிக்கப்படுவதால்……… பகிர விழைந்துள்ளேன்.
இந்த விவாதங்களில் முஸல்மாணிய சஹோதரர்கள் சிலர் முன்வைத்த கேழ்விகளிலும் பகிரப்பட்ட சில உத்தரங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. வாசிக்கும் வாசகர்களுக்கும் அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் இயன்ற வரை நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை உள்ளது உள்ள படி எனக்குப் புரிந்த படி பகிர்ந்துள்ளேன். என் பகிர்தலில் பிழைகள் இருக்குமானாலும் சொல்லப்பட்ட கருத்துக்களில் அபிப்ராய பேதம் இருக்குமானாலும் …. அவற்றையும் சுட்டிக்காடுமாறு வாசகர்களிடம் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
பித்தலாட்ட மதமாற்றம், ஜிஹாதி வன்முறைக்கு மறைமுக ஆதரவு போன்ற பரிச்சயங்கள் இல்லாது தங்கள் பக்ஷத்து அச்சங்கள் மற்றும் அபிலாஷைகளை பெருமளவு தெளிவாக முஸல்மாணிய சஹோதரர்கள் இந்த நிகழ்ச்சியில் விவாதித்ததை நிச்சயம் போற்றுகிறேன்.
இயலுமானால் இந்த நிகழ்ச்சி ஹிந்துஸ்தானத்தின் மற்றைய பாஷைகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலாக ஒளிபரப்பப்பட வேண்டும். மிகப்பெரும்பான்மையான முஸல்மாணிய சஹோதரர்கள் ஹிந்துக்களுடன் கரம் கோர்த்து தேசத்தின் வளர்ச்சியில் பாடுபடத் தயாராக இருக்கிறார்கள் என்பது என் அனுமானம். முஸல்மாணிய சஹோதரர்களின் மத்தியில் நல்ல சக்திகளின் கை ஓங்கினால் பித்தலாட்ட மதமாற்ற சக்திகள் மற்றும் ஜிஹாதி மதவெறி சக்திகளின் கை தானாகத் தாழும் என்பது நிதர்சனம்.
முதலில் இந்த நிகழ்ச்சியின் கட்டமைப்பு பற்றி ஓரிரு வரிகள்.
நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் விருந்தினரரான அரசியல்வாதி / பெருந்தகையின் மீது பொதுவில் பேசப்படும் குற்றச்சாட்டுக்கள் நிகழ்ச்சி அமைப்பாளரான ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்களால் முன்வைக்கப்டும். குற்றம்சாட்டப்படும் நபர் பொதுமக்கள் முன்னிலையில் தன் தரப்பு வாதங்களை பதிலுக்கு முன்வைப்பார். நரேந்த்ரபாய் மோதி, டாக்டர் சுப்ரமண்ய ஸ்வாமி, AK49 என்ற க்யாதிக்கு உரித்த அரவிந்த கேஜ்ரிவால், அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவ்,திக்கிராஜா என்ற க்யாதி வாய்ந்த திக்விஜய் சிங்க் முதல் தமிழகத்து அரசியல்வாதியான ஆண்டிப்பட்டி ராஜா வரை பலரும் பங்கெடுத்த ப்ரபலமான நிகழ்ச்சி இது. நூறு நூற்றைம்பது பார்வையாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அவர்களும் கேழ்விகள் கேழ்க்கலாம். ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்கள் ஒரு அரசு வக்கீல் போன்று ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து கேழ்விகளையும் குறுக்குக் கேழ்விகளையும் முன்வைத்து பங்கெடுக்கும் விருந்தினரை வறுத்தெடுப்பார். ந்யாயாலயம் என்றால் ந்யாயாதிபதியும் இருப்பாரே. பொதுமக்களின் மத்தியில் மதிப்பு வாய்ந்த பத்திரிக்கையாளர், கல்வியாளர் போன்ற பெருந்தகைகள் ந்யாயாதிபதியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சி முடிவில் விவாதங்களின் பாற்பட்டு தனது தீர்ப்பினை அளிக்க நிகழ்ச்சி நிறைவு பெறும்.
நாம் விவரிக்க இருக்கும் நிகழ்ச்சி சற்றே மாறுபட்ட ஃபார்மேட்டில் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அனைவரும் முஸல்மாணிய சஹோதரர்கள். விருந்தினர்களாக பங்கெடுத்த பெருந்தகைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் இந்த நிகழ்ச்சியில் முன்வைக்கப்படவில்லை. மாறாக பங்கெடுத்த விருந்தினர் பெருந்தகைகள் மோதி சர்க்கார் பற்றி முன்வைக்கப்பட்ட அச்சங்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு தங்கள் அனுபவங்கள் சார்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள்.
விருந்தினர்களாக ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகள் பங்கெடுத்தனர்.
ஒரு புறம் மோதி அவர்களுடன் தோளொடு தோள் கொடுத்து குஜராத் மாகாண வளர்ச்சியில் பங்களித்து வரும் ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா ( Zafar sareshwala) என்ற வ்யாபாரி. அடுத்து குஜராத் மாகாண பாஜக Spokesperson என்ற பொறுப்பில் பணியாற்றும் மோ(ஹ்)தர்மா ஆஸிஃபா கான் சாஹிபா என்ற பெண்மணி. இருவரும் மோதி ஆதரவாளர்கள். குஜராத்தில் 2002ம் வருஷம் மதக் கலஹம் நடந்த பின்னர் மோதிக்கு எதிராக மிகக்கடுமையாக பொது தளத்தில் பணியாற்றி, பின்னர் தங்கள் முனைப்பின் காரணமாக கலஹம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்த படிக்கு மோதியின் மீது குற்றம் சாட்ட ஹேது ஏதும் இல்லை என ஆராய்ந்தறிந்த முஸல்மாணிய பெருந்தகைகள்.
மற்றொரு புறம் மோதி ஆதரவாளர்கள் என்ற படிக்கு இல்லாது ஆனால் மோதி சர்க்கார் மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸல்மாணிய பெருந்தகைகள். All India Muslim Personal Law Board இன் அங்கத்தினரான ஜெனாப் முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் (Mufti Ehsaz Ahmed), All India Imam Association அங்கத்தினராகிய மௌலானா ஸாஜித் ரஷீதி சாஹேப் (Maulana SAjid Rashidi) மற்றும் டொய்ச் வங்கியின் Managing Director மற்றும் Investment Banker என்ற ஸ்தானத்தில் பணிபுரிந்த ஜெனாப் ஸையத் ஜாஃபர் சாஹேப்(Syed Zafar).
நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன்னர் முஸல்மாணிய சஹோதரர்களிடையே மோதி அவர்கள் மீது நேர்மறையான நம்பிக்கை தரும் படிக்கான அவரது பல ப்ரசங்கங்கள் காணொலிகளாகக் காண்பிக்கப்பட்டன.
பத்திரிக்கையாளரான எம்.ஜே. அக்பர் அவர்கள் தான் பாஜகவில் சேரத் தூண்டியபடிக்கான…… மோதி அவர்கள் பீஹார் மாகாணத்தில் நிகழ்த்திய பொதுக்கூட்ட ப்ரசங்கம் முதல் காணொளியாகக் காண்பிக்கப்பட்டது.
தன் முன் கூடியுள்ள பெருங்கூட்டத்தினரிடம் மோதி அவர்கள் கேழ்க்கிறார். ஏழை முஸல்மான் எதிர்கொண்டு போராட வேண்டியது ஏழ்மையுடனா அல்லது ஹிந்துக்களிடமா? ஏழை ஹிந்து எதிர்கொண்டு போராட வேண்டியது ஏழ்மையுடனா அல்லது முஸல்மான்களிடமா? ஹிந்துக்கள் மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் இருவரும் முனைந்து போராட வேண்டியது ஏழ்மையுடன் என்று மோதி அவர்கள் முழங்குகிறார்.
மதசார்பின்மை என்று வெற்று கோஷம் போடும் ஓட்டுவங்கி அரசியல் வாதிகள் முஸல்மாணிய சஹோதரர்களுக்கு உண்மையில் நன்மை செய்திருக்கின்றனரா? அதே சமயம் முஸல்மானுக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் மோதியின் குஜராத்தில் முஸல்மான் களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என்று மக்கள் அறிய வேண்டும் என்று மக்களிடம் வினவுகிறார்.
போலி மதசார்பின்மை கோஷம் போடும் அரசியல்வாதிகள் நிறைந்த பீஹார் மாகாணத்தில் நகரங்களில் வசிக்கும் முஸல்மான் களில் 45 சதமானத்தினர் ஏழைகள். அதேசமயம் குஜராத் மாகாணத்தில் நகரங்களில் வசிக்கும் முஸல்மான் களில் 24 சதமானத்தினர் ஏழைகள். மதசார்பின்மை கொடிபிடிக்கப்படும் பீஹார் மாகாணத்துடன் ஒப்பிடுகையில் 50 சதமானத்துக்கும் கீழாக ஏழ்மை காணப்படுவது குஜராத் மாகாணத்தில் என மோதி நிதர்சனத்தை பொதுமக்கள் முன் முழங்குகிறார்.
இதன் பின்னர் மோதி அவர்கள் உத்தர ப்ரதேசத்தில் நிகழ்த்திய ப்ரசங்கத்தின் காணொளி காட்டப்படுகிறது. என்னுடைய சர்க்கார் ஆட்சிக்கு வருமானால் ஹிந்துஸ்தானத்தில் மதக்கலஹங்கள் நடக்க அனுமதிக்க மாட்டேன் என்று முழங்குகிறார். 2002 ம் வருஷம் குஜராத் கலஹம் நிகழ்ந்த சமயத்தில் மோதி அவர்கள் அரசாட்சி ஏற்றபின்னர்2014ம் வருஷம் வரைக்குமான 12 வருஷ காலத்தில் குஜராத் மாகாணத்தில் ஒருமுறை கூட கலஹம் நிகழ்ந்ததில்லை. ஏனென்றால் பலம் மிகுந்த குஜாராத் அரசு குஜராத் மாகாணத்தில் மதக்கலஹம் நிகழக்கூடாது என்று உறுதி கொண்டு ஆட்சி நடத்தியது. அது போன்ற கலஹமற்ற ஆட்சியை உத்தரப்ரதேசத்திலும் ஹிந்துஸ்தானம் முழுதும் எதிர்பார்க்கிறீர்களா? பாஜக சர்க்காருக்கு வாக்களியுங்கள் என்று மோதி முழங்குகிறார்.
இதன் பின்னர் ஆப் கீ அதாலத் நிகழ்ச்சியில் மோதி அவர்கள் பங்கெடுத்த போது முஸல்மாணிய குழந்தைகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பது தன் அவா என்றும் இக்குழந்தைகளின் ஒரு கையில் குரான்-ஏ-கரீமும் ஒரு கையில் கணினியும் இருக்க வேண்டும் என்பது என் கனவு என்றும் மோதி அவர்கள் பகிர்ந்த கருத்து காணொலியாகக் காண்பிக்கப்பட்டது.
இந்தக்காணொலிகளுக்குப்பின்னர் நிகழ்ச்சி அமைப்பாளரான ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான கேழ்விகளை இந்த முறை நான் கேழ்க்கப்போவதில்லை. மாறாக இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராகப் பங்கேற்கும் முஸல்மாணிய சஹோதரர்கள் தங்கள் வினாக்களை முன்வைப்பர். இங்கு பங்கெடுக்கும் ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகள் தங்கள் அனுபங்களையும் கருத்துக்களையும் பதில்களாக முன்வைப்பர் என்றார். நிகழ்ச்சியில் ந்யாயாதிபதியாகப் பங்கெடுத்தவர் ராஜஸ்தான் மாகாணத்து அஜ்மேர் நகரத்தில் உள்ள ஹஜ்ரத் க்வாஜா மொய்னுத்தீன் சிஷ்டி தர்க்காஹ்வின் உத்தராதிகாரியான ஜெனாப் ஸையத் மொய்னுத்தீன் சிஷ்டி. தலைப்பாகை முதல் அங்கிவரை காவி உடையில் நிகழ்ச்சியில் பங்கெடுத்தார் நிகழ்ச்சியின் ந்யாயாதிபதி. முழு நிகழ்ச்சியிலும் ஹிந்துவாகப்பங்கெடுத்தவர் நிகழ்ச்சி அமைப்பாளரான ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்கள் மட்டிலும்.
நிகழ்ச்சியில் மோதியின் மீதும் அவர் கருத்தாக்கங்கள் மீதும் ஒன்றன் பின் ஒன்றாக இல்ஜாம் (ilzam) என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதன் மீது விவாதங்கள், கேழ்விகள், பதில்கள் குறுக்குக் கேழ்விகள் அதற்கு பதில்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப்பார்ப்போம்.
குற்றச்சாட்டு எண் – 1
பீதியில் இருக்கும் முஸல்மாணியர் :-
மஹாத்மா காந்தியின் பேரனாகிய கோபால் க்ருஷ்ண காந்தி என்ற பத்திரிக்கையாளர் அவர்கள் மோதி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுதும் மதக்கலஹங்கள் பெருகும். ஹிந்துக்களும் முஸல்மான்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாவர் என்று ஒரு வ்யாசத்தில் எழுதியுள்ளார் என்று விவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர் துவங்குகிறார்.
விவாதம் துவங்குகிறது.
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-
2002ம் வருஷம் குஜராத் மாகாணத்தில் கலஹம் நிகழ்ந்தது உண்மை தான். இக்கலஹத்தில் நூற்றுக்கணக்கில் ஹிந்துக்களும் ஈராயிரம் முஸல்மாணியரும் பலியாயினர் என்பதும் உண்மை. இதைத் தொடர்ந்து இந்த கலஹத்திற்காக வேண்டி மோதி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று ஒருகாலத்தில் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால் அதற்குப்பின்னர் கலஹம் சம்பந்தமான ஆவணங்களை ஆராய்ந்தறிந்த படிக்கு, மோதி அவர்கள் குஜராத் கலஹத்துக்கு காரணம் இல்லை. மாறாக அதை அடக்க விழைந்த நபர் என அறிந்தேன். மோதியின் குஜராத்தில் முஸல்மான் சஹோதரர்களுக்கு வளர்ச்சி கிட்டுகிறது என்பதை நிதர்சனமாக அறிந்து என் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளேன்.
குஜராத்தில் 2002ம் வருஷம் மட்டிலும் கலஹம் நிகழ்ந்துள்ளதா. அதற்கு முன்னர் நிகழ்ந்ததில்லையா?
சொல்லப்போனால் மிக பயங்கரமாக குஜராத் மாகாணத்தில் நிகழ்ந்த கலஹம் 1969ம் வருஷம் நிகழ்ந்த கலஹம். இதில் கிட்டத்தட்ட 5000 முஸல்மாணிய சஹோதரர்கள் பலியானார்கள். இதன் பின்னர் 1985, 1987, 1990, 1992 எனத் தொடர்ந்து 2002ம் வருஷம் வரை குஜராத் மாகாணத்தில் பலமுறை கலஹங்கள் நிகழ்ந்துள்ளன.
கலஹம் நிகழ்வது ஒரு புறம்; அதில் ஆயிரக்கணக்காக மக்கள் பலியாவது ஒரு புறம். ஆனால் கலஹம் முடிந்த பின்பும் பொதுஜனங்களினிடையே மாதக்கணக்காக உறையும் பீதி மறக்கவொண்ணாதது. ஒவ்வொரு கலஹத்துக்குப் பின்னும் நிலைமை கட்டுக்குள் வரும் வரைக்கும் ஊரடங்குச்ச்சட்டம் மாதக்கணக்கில் அமலில் இருந்துள்ளது. பல சமயம் 6 மாதங்கள் சில கலஹங்களுக்குப் பின் 200 நாட்கள் என ஊரடங்குச்சட்டம் நீடித்தமை இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
ஒரு முஸ்லீம் சஹோதரர் குறுக்குக் கேழ்வி முன்வைக்கிறார் :-
2002ம் வருஷம் குஜராத் கலஹம் நிகழ்ந்த போது முதல் மூன்று நாட்களில் யார் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் அதற்குப்பின்னர் கலஹத்தை அடக்குகிறேன் என்று மோதி அவர்கள் சொன்னதாகப் பொதுவில் குற்றம் சாட்டப்படுகிறது. 15 ஆகஸ்ட் செங்கோட்டையில் உரையாற்றும் போது இதை மோதி அவர்கள் பொதுஜனங்களுக்கு மத்தியில் மறுப்பாரா? குஜராத் கலஹங்களில் குற்றமிழைத்த கயவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளிப்பாரா?
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா சாஹேப் (Zafar Sarehwala):-
2002ம் வருஷம் நிகழ்ந்த குஜராத் கலஹங்களில் கொடுமையானவை என்று 9 பெரும் கலஹ நிகழ்வுகள் வெவ்வேறு ந்யாயாலயங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன / விசாரிக்கப்பட்டு வருகின்றன. பக்ஷபாதம் இல்லாத இவ்விசாரணைகளில் இது வரை 63 ஹிந்துக்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாகாணத்தில் மந்த்ரி பதவியில் இருந்த ஸ்ரீமதி மாயாபென் கோட்னானி என்ற அம்மணி கூட ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். சாதாரண பொதுஜனமாகட்டும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஆகட்டும் விசாரணையின் பாற்பட்டு குற்றவாளிகள் என்று அறியப்பட்டால் அவர்கள் ந்யாயாலயத்தால் தண்டிக்கப்பட்டனர் என்பதை மறுக்க முடியாது. மதக்கலஹத்தில் இழைத்த குற்றங்களுக்கு தண்டனைகள் பெருமளவில் விதிக்கப்பட்டது 2002ம் வருஷத்து குஜராத் கலஹத்துக்குப் பின் தான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆயுள் தண்டனை தவிர 460ஹிந்துக்களுக்கு பற்பல கால அவதிகளில் சிறைத்தண்டனைகள் ந்யாயாலயத்தால் விதிக்கப்பட்டுள்ளன.
9 பெரும் கலஹ நிகழ்வுகளில் இதுவரை 7 கலஹ நிகழ்வுகள் ந்யாயாலயத்தால் முழுதும் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 2 கலஹ நிகழ்வுகளும் விசாரணையில் உள்ளன. அதில் 12 ஹிந்துக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் நிதர்சனம்.
இதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த அளவுக்கு குஜராத் மாகாணத்தில் ந்யாயம் கிடைத்துள்ளது என்பதை மக்கள் அறியலாம்.
ஆஸிஃபா கான் சாஹிபா :-
மதக்கலஹம் என்றதும் 2002ம் வருஷத்திய குஜாராத் கலஹம் மட்டிலும் ஏன் நினைவில் வருகிறது. அதில் குற்றமிழைத்தவர் பற்றி மட்டிலும் ஏன் நினைவுக்கு வருகிறது. எத்தனையெத்தனை படுபயங்கர மதக்கலஹங்கள் ஹிந்துஸ்தானம் முழுதும் நிகழ்ந்துள்ளன. 1993 மும்பை மாநகரத்தில் நிகழ்ந்த கலஹம். பின்னர் மாலியா மியானாவிலும் நீலியிலும் நிகழ்ந்த கலஹங்கள் குறைவானவையா? அப்போதெல்லாம் காங்க்ரஸ் தானே ஆட்சியில் இருந்தது. எவ்வளவு பேர் விசாரிக்கப்பட்டு இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளனர். கலஹம் நிகழ்ந்த பின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அது அறிக்கை அளித்த பின்னர் அதில் சொல்லப்பட்ட பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டுள்ளனவா? 1993 மதக்கலஹத்தில் விசாரணை கமிஷன் அறிக்கை 19 போலீஸ் அதிகாரிகளைக் குற்றம் சாட்டி அவர்கள் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் தொடர்ந்த காங்க்ரஸ் சர்க்கார் இவர்களுக்கு தண்டனை கொடுக்காது பதவி உயர்வு கொடுத்துள்ளது என்பதை மக்கள் அறிய வேண்டும். அதே சமயம் குஜராத் மாகாணத்தில் கலஹம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பல போலீஸ் அதிகாரிகள் ஜெயிலில் உள்ளனர் என்பதையும் அறிய வேண்டும்.
டாக்டர் ஃபஹீம் பெக் :-
கடந்த 10 வருஷ காலங்களில் காங்க்ரஸ் சர்க்கார் நாங்கள் முஸல்மாணியருக்கு அத்தைச் செய்வோம் இத்தைச் செய்வாம் என்று சொல்லி எங்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி ஓட்டு சேகரம் செய்ய முற்பட்டார்களேயன்றி எந்த வாக்குறுதிகளையும் அமல் செய்யப்புகவில்லை என்பது நிதர்சனம். நான் முன்னாள் ப்ரதம மந்த்ரி ஸ்ரீ மன்மோஹன் சிங்க் அவர்களின் தரப்பிலிருந்து … ஆர் டி ஐ விண்ணப்பங்கள் மூலம் …..சர்க்கார் முஸல்மாணியருக்கு என்னென்ன வாக்குறுதிகளை அமல் செய்துள்ளது என்று கடந்த இரண்டு வருஷங்களாக அறிய முற்பட்டேன். ஆனால் எனது எந்த விண்ணப்பங்களுக்கும் சர்க்கார் தரப்பிலிருந்து ஜவாப் கிடைக்கவில்லை.
இதற்கு மாறாக "ஸப் கா ஸாத் ஸப் கா விகாஸ்" - "அனைவருடனும் ஒன்றிணைந்து அனைவருக்காகவும் வளர்ச்சி" என்ற கோட்பாட்டை மோதி அவர்கள் முன்வைப்பது ஏற்புடையதே. மோதி தன் ப்ரசாரத்தின் போது காங்க்ரஸ் காரர்கள் முஸல்மாணியருக்கு பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றினர் என்றும் கூறியுள்ளார். மோதி அவர்கள் தன்னுடைய வாக்குறுதிகளை அமல் செய்வாரா மாட்டாரா? முஸல்மாணிய சஹோதரர்கள் மோதி சர்க்காரிடமிருந்து தங்கள் முஸல்மாணிய சமூஹம் சார்ந்து நேர்மறையான செயல்பாடுகளை எதிர்பார்க்கலாமா?
அப்படி இருப்பினும் கூட மோதி அவர்கள் உக்ரவாதி என்றே கூறுவேன். 2002 மதக் கலஹத்தின் போது மோதி அவர்கள் கலஹக்காரர்களிடம் முதல் மூன்று நாட்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதற்கப்புறம் சர்க்கார் தன் வேலையைச் செய்யும் என்று சொன்னார் என்றபடிக்கு ஒரு கருத்து நிலவி வருகிறது. அதைப்பற்றி மோதி அவர்களிடம் வினவப்பட்ட போதெல்லாம் நேரடியாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்தே பதில் சொல்லியிருக்கிறார்.
ஆஸிஃபா கான் சாஹிபா :-
நிகழ்வுகளை பக்ஷபாதமில்லாது ஆராயுங்கள். 25ம் திகதி மோதி முக்ய மந்த்ரியாகப் பதவியேற்கிறார். பதவியேற்று3 நாட்களுக்குள் கலஹம் நிகழ்கிறது. அதற்குள் எப்படி இப்படி ஒரு நிகழ்வை ஒருவர் திட்டமிட இயலும். இவை துஷ்ப்ரசாரங்களே. தவிரவும் அந்த முதல் மூன்று நாட்கள் பற்றி நாங்களும் மோதி அவர்களிடம் வினவியுள்ளோம். நிமிட வாரியாக சர்க்கார் தரப்பிலிருந்து அந்த மூன்று நாட்களில் கலஹத்தை அடக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ற விபரங்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. பதிலளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல. பதில்கள் பொது தளத்தில் பொதுஜனங்களுடைய பார்வைக்கு என்றும் உள்ளன. முதல் நாள் ராணுவம் வரவழைக்க விண்ணப்பிக்கப் பட்டது. ஆனால் வரவழைக்க முடியவில்லை. பாராளுமன்றத் தாக்குதலை அடுத்து ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லையில் இருந்தனர். வேறு வழியில்லாததால் போலீஸுக்கு கலஹக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது, கலஹத்தை அடக்க Flag March நிகழ்த்தப்பட்டது. துப்பாக்கிச் சூடுகள் நிகழ்ந்தன. அதில் கலஹத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள் மற்றும் முஸல்மாணியர் என்று இரண்டு சமூஹத்தைச் சார்ந்தவர்களும் மரணித்தனர்.
இந்த மோசமான சமயத்தில் தான் 400 குழந்தைகள் பாவ்நகர் மதரஸாவிலிருந்து பாதுகாக்கப்பட்டனர் என்பதை எப்படி மறப்பீர்கள்? அவ்வளவு ஏன் அதிக அளவு கலஹத்துக்கு உள்ளான குல்பர்க் சொஸைடியிலிருந்து அம்மணி ஜாகியா ஜாஃப்ரி அவர்கள் தப்பிக்க முடிந்தது என்பது பாதுகாப்பு நடவடிக்கைகள் முஸ்தீபுடன் அமலில் இருந்தன என்பதால் தான் என்பதை மறுக்க முடியாது அல்லவா. ஸர்தார்புராவிலிருந்து எத்தனையெத்தனை முஸல்மாணியர்கள் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கூட்டிச்செல்லப்பட்டனர்? இதுபோன்று நேர்மறையாக மோதி சர்க்காரால் முஸல்மாணியர் பாதுகாக்கப்பட எடுக்கப்பட்ட நிகழ்வுகளை நாம் கணக்கிலும் எடுக்காது …………. மாறாக மோதி சர்க்கார் தான் கலஹங்கள் நிகழக் காரணமானது என்று குற்றம் சாட்டுவது பிழையானது.
டாக்டர் ஃபஹீம் பெக் :-
இந்த விபரங்களை மோதி அவர்கள் நேருக்கு நேராகப் பொது தளத்தில் முஸல்மான் களிடம் ஏன் பகிரக்கூடாது என்பது தான் என் கேழ்வி. நாங்கள் அவருக்கு ஓட்டுப்போட்டிருந்தாலும் போடவில்லையெனினும் எங்களிடம் நேரடியாக அவர் சம்வாதம் செய்யலாமே. மேலும் அவருக்கு வெகுஜன ஆதரவு கிட்டியுள்ளது. இதை நாங்கள் ஏற்கிறோம். முதலில் மோதி அவர்கள் முஸல்மாணிய சமூஹத்தை ஒரு ஓட்டு வங்கி சமூஹமாக மட்டிலும் எண்ணியிருக்கலாம். ஆனால் இப்போது அப்படி நினைக்க முடியாது. பின்னும் இப்படிப்பட்ட வெகுஜன ஆதரவு அவருக்கு ஒரு அக்னி பரீக்ஷையே. வாக்குறுதிகளை சொன்னபடி நிறைவேற்றுவாரா?
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
முஸல்மாணிய சஹோதரர்களது ந்யாயமான கேழ்விகளை சர்க்கார் தரப்பின் முன் வைக்கவே நான் விரும்புகிறேன். உங்களது எல்லா கேழ்விகளும் சர்க்காரிடம் சேர்க்கப்படும் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.
மௌலானா ஸாஜித் ரஷீதி சாஹேப் (All India Imam Association – Maula Sajid Rashidi) :-
சஹோதரரே நீங்கள் மோதி அவர்களிடம் என்ன வினவ நினைத்தீர்களோ அதையே நாங்கள் அவரிடம் முன்னர் வினவியுள்ளோம். ஒரு க்ஷணம் நினைத்து பாருங்கள். தேர்தலுக்கு முன்னர் எந்த முஸல்மானாவது நான் மோதிக்கு ஓட்டுப்போடுவேன் என்று வெளிப்படையாக சொல்லியிருக்க முடியுமா? மோதி அவர்கள் வெளிப்படையாக முஸல்மான் சஹோதரர்களது வாக்குகளை சேகரிக்க முனைந்திருந்தால் முஸ்லீம் ஓட்டுக்கள் அவருக்கு கிட்டியிருக்காது என்பது மட்டுமல்ல எப்போதும் ஆதரவு தரும் ஹிந்துக்களும் அவருக்கு ஓட்டுப்போட்டிருக்க மாட்டார்கள்.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
நான் விளக்கம் அளிக்கிறேன். ஸ்வதந்த்ரம் கிடைத்ததிலிருந்து ஹிந்துஸ்தானத்தில் இதுவரை 45000 - 46000மதக்கலஹங்கள் நிகழ்ந்துள்ளன. குஜராத் மாகாணம் மட்டும் தான் ஹிந்துஸ்தானத்தில் விதிவிலக்கான மாகாணமாக ………. கலஹங்களுக்குப் பின்னர் கலஹத்தில் ஈடுபட்ட கலஹக்காரர்களை விசாரணை செய்து தண்டித்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. மற்ற எந்த மாகாணத்திலும் இந்த அளவு விசாரணையோ அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதோ இதுவரை நிகழ்ந்ததே இல்லை. நான் மோதி அவர்களிடம் கேழ்க்க விரும்புவது…………. ஐயா, நீங்கள் ராம ராஜ்யத்தை அமல் செய்வீர்களா? நாங்கள் விழைவது ஹிந்துஸ்தானத்தில் ராம ராஜ்யம் அமல் செய்யப்படுவதையே. ராவண ராஜ்யம் அல்ல. எங்களுக்கு ராம ராஜ்யமே வேண்டும் …… எந்த ராம ராஜ்யத்தில் அனைத்து மக்களுக்கும் நீதி கிட்டுமோ அப்படிப்பட்ட ராஜ்யம் (பெரும் கரவொலிக்கு மத்தியில்)
எங்களுக்கு கல்வி வேண்டும். வேலை வாய்ப்பு வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஹிந்துக்களுக்கும் முஸல்மாணியருக்கும் அனைத்து மக்களுக்கும் வேண்டும். எங்களை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லுமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா சாஹேப் (Zafar Sareshwala) :-
மோதி அவர்கள் கிட்டத்தட்ட 20 – 30 நபர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 250 முஸ்லீம் குழுக்களுடன் அவ்வப்போது அளவளாவியிருக்கிறார். ஒவ்வொரு அளவளாவலும் ஒரு மணி நேரமாவது நிகழும். அப்போது மிக வெளிப்படையாக அவர்களுடன் சம்வாதம் செய்வார். அப்போது அவர் சொல்லியிருக்கிறார். குஜராத் மாகாணத்தில் முஸல்மாணியர் ஜனத்தொகை 9 – 10 சதமானம் தான். நீங்கள் ஓட்டுப்போடாவிட்டாலும் கூட நான் ஆட்சியைப் பிடித்து விட முடியும். ஆனால் உங்கள் ஆதரவு இல்லாமல் என்னால் ஒரு முழுமையான ஆட்சி நடத்த முடியாது என்பது நிதர்சனம் என்று சொல்வார். முஸ்லீம்களின் ஓட்டு எனக்கு கிடைக்கிறதா இல்லையா என்பது அடுத்த பக்ஷம். 20 கோடி முஸல்மாணியரை நான் அரவணைத்து செல்ல வேண்டும். முஸல்மாணியரையும் கைகோர்த்து…….. ஒரு நலம் சார்ந்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை நடத்துவதற்காக வேண்டி…… என்னென்ன அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ…… அவை அனைத்தையும் எடுத்தே நான் ஆட்சி செய்வேன்.
ஆஸிஃபா கான் சாஹிபா :-
2007 வாக்கில் நடந்த தேர்தலில் மத்ய குஜராத்தில் முஸல்மாணியர் பெருமளவில் மோதி அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. வாக்குகள் கிடைக்கவில்லையானாலும் பாஜக எம்பிக்கள் மற்றும் எம் எல் ஏக்கள் ஒவ்வொரு முஸல்மாணிய குடியிருப்புகளுக்கும் சென்று உங்களது தேவைகள் என்ன என்று பேர் பேராக விசாரித்து சர்க்காரால் செய்ய முடிந்த வளர்ச்சிப் பணிகளை ஒவ்வொரு பகுதியிலும் செய்ய முனைந்தனர். முஸல்மான் சஹோதரர் பால் நட்பை அடிப்படையாகக்கொண்ட கரத்தை பாஜக அளித்தது. முஸல்மான்களும் தங்கள் நட்புக்கரத்தை நல்கினர். அதன் விளைவே நடந்து முடிந்த தேர்தலில் குஜராத்தில் 26 தொகுதிகளையும் பாஜகாவால் கைப்பற்ற முடிந்தது. பெருமளவில் முஸல்மாணியரும் ஓட்டுப் போட்டிருந்தாலேயே இப்படி ஒரு வெற்றியை பாஜக பெற்றிருக்க முடியும்.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
மோதி அவர்கள் தேர்தலில் நிற்க எத்தனை முஸல்மாணியருக்கு டிக்கட் கொடுத்துள்ளார்? தில்லியில், குஜராத்தில்,உத்தரப்ரதேசத்தில் — இங்கெல்லாம் ஒரு டிக்கட் கூட முஸல்மாணியருக்கு கொடுக்கப்படவில்லை.
ஜெனாப் முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் (Mufti Ehsaz Ahmed) :- All India Muslim Personal Law Board
நாம் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு நூற்றுக்கு நூறு சதமானம் ஓட்டளிக்கிறோமோ அந்தக் கட்சிகள் முஸல்மாணியருக்கு எத்தனை டிக்கட் கொடுத்துள்ளன என்பதும் வினவப்பட வேண்டும்.மேலும் எப்போது நாம் ஒரு அரசியல் கட்சிக்கு அருகில் செல்லக்கூட யோசனை செய்வோமோ? அப்படி சந்தேஹக் கண் கொண்டு நோக்கும் கட்சியானது நமக்கு இந்த கார்யம் செய்ய வேண்டும் அல்லது அந்த கார்யம் செய்ய வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? இது வரை மற்ற அரசியல் கட்சிகள் நமது மனத்தில் வலதுசாரிகளைப் பற்றி ஒரு தேவையற்ற பீதியை திட்டமிட்டு மனதில் விதைத்து நம்மை ஆண்டு வந்தனர். மோதி ஆட்சிக்கு வந்தால் கலஹம் நிகழும் நாம் வன்முறைக்கு உள்ளாவோம் என நம்மை அச்சுறுத்தியுள்ளனர் மற்ற கட்சிகள். இந்த தரம் தாழ்ந்த அரசியல் செயல்பாட்டிலிருந்து நாம் மீள வேண்டும். 2006 வாக்கில் நான் தாருல் உலூமில் பணி செய்த போது ப்ரவீண் டொகடியா போன்றோர் வீசும் உணர்ச்சியும் வெறியும் மிகுந்த கேழ்விக்கணைகளுக்கு பதிலளித்து பதிலளித்து ஆயாசம் அடைந்தது நினைவுக்கு வருகிறது. இது போன்ற நபர்களை வைக்க வேண்டிய இடத்தில் யாராவது வைத்துள்ளார் என்றால் அது மோதி தான் என்று சொல்வேன். ஒரு பொது விவாதத்தில் இப்படிக் கருத்துப் பகிர முடியுமா தெரியவில்லை. ஆனால் அது தான் உண்மை. இப்போதெல்லாம் ப்ரவீண் டொகடியா அவர்களது வன்மம் மிகுந்த பேச்சுக்கள் அதிகம் வெளிவருவதில்லை.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
பஜ்ரங்க் தள் மற்றும் ப்ரவீண் டொகடியா போன்றோர் வன்முறை மிகுந்த செயல்பாடுகளை குஜராத்தில் நிகழ்த்த முடியாது?
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala):-
நீங்கள் பொதுவாகப் பேச விழைவது மதக்கலஹம் பற்றி. மதக்கலஹம் என்ற கொடுமையான நிகழ்வுகள் கூட அடுத்த பக்ஷமே. மதக்கலஹம் வன்முறை நிகழ்வுகள் இவையில்லாமலும் கூட முஸல்மாணியர் மத்தியில் மிகக் கடுமையான பீதியை விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்க்தள் நிலைநிறுத்தியிருந்தனர் 1990 களில். சர்க்கார் காங்க்ரஸுடையதாக இருக்கட்டும் அல்லது வேறு கட்சியினதாக இருக்கட்டும் தெருவில் ஆட்சியில் இருந்தது இந்த ஹிந்து இயக்கங்களே. இவர்களுடைய அனுமதியின்றி அஹமதாபாத் நகரத்தில் ஒரு அசைவ உணவகத்தைக்கூட நடத்தமுடியாது. அந்த அளவுக்கு இவர்களது கெடுபிடி இருந்தது 90 களில். போலீஸ் தரப்பினரிடம் டொகடியா சாஹேப்புக்கு மிகுந்த செல்வாக்கு இருந்த காலம்.
இப்படிப்பட்டவர்களது வன்முறைச் செயல்பாடுகளை கட்டுக்குள் கொணர்ந்தவர் மோதி தான். அஹ்மதாபாத் நகரத்தில் டொகடியா சாஹேப் வருகிறார் என்றால் அவரை வரவேற்க 150 – 200 வாகனங்கள் சன்னத்தமாக இருக்கும். இவரது வருஷாந்தர பொதுக்கூட்டத்திற்கு 5 லக்ஷம் முதல் 10 லக்ஷம் வரை பொதுஜனங்கள் கூடுவர். ஆனால் இன்றைய திகதியில் இவரது வண்டி ஓட்டுனரைத் தவிர இவருடன் வேறு யாரையும் கூடப் பார்க்க முடியாது. இப்போதெல்லாம் மிகக் குறைவான பொதுஜனங்களே இவரது பேச்சை குஜராத்தில் கேழ்க்கிறார்கள்.
மஹாராஷ்ட்ராவில், கோவாவில், ஹைதராபாத்தில் டொகடியா சாஹேப் பெரும் பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்த முடியும். குஜராத்தில் வன்மம் கூடிய உரைகள் நிகழ்த்த முடியாது. ஏனெனில் அப்படி ஏதும் பேசினால் சாபர்மதி ஜெயிலில் மோதி மாவாட்ட வைப்பார் என்பது இவருக்குத் தெரியும்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
மோதி அவர்கள் ஸ்ரீ ராணா ப்ரதாப் போல தேர்தலை தீரத்துடன் எதிர் கொண்டார். ஆனால் பாத்ஷா அக்பர் போன்று இவரது ஆட்சி இருக்க வேண்டும். அவரது ஹ்ருதயத்தில் வீர சாவர்க்கர் இருந்தார் என்றால் அவரது புத்தியில் பாபா சாஹேப் அம்பேத்கர் இருக்க வேண்டும்.
(தொடரும்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள்,அபிலாஷைகள் – 2
July 14, 2014
குற்றச்சாட்டு எண் – 2
2014 தேர்தலில் மோதி ஜெயித்த பின்னர் பாராளுமன்றத்தில் முஸல்மாணிய எம் பிக்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. யூனியன் ப்ரதேசங்கள் உள்பட கிட்டத்தட்ட 27 மாகாணங்களிலிருந்து ஒரு முஸல்மாணிய எம்.பி கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 80 எம்பிக்களைக்கொண்ட உத்தரப்ரதேசத்திலிருந்து ஒரு முஸல்மான் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. உத்தரப்ரதேசத்தில் முஸ்லீம்களது ஜனத்தொகை 18-20 சதமானமாகும்.
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala):-
15ஆவது லோக்சபாவில் 543 எம்பிக்களில் முஸல்மாணியர் 29 பேர். இது 5 சதமானத்துக்கும் குறைவு.
முஸல்மாணியரது ஓட்டுக்களால் ஜீவிதமாக இருந்த காங்க்ரஸ் கட்சியில் 206 எம்பிக்களில் முஸ்லீம்கள் 9 பேர் மட்டிலும். இந்த எண்ணிக்கை 5 சதமானத்துக்கும் குறைவு.
மேலும் கேளுங்கள். சென்ற லோக்சபையில் இருந்த முஸ்லீம் எம்பிக்களின் செயல்பாடு எப்படி என்று. லோக்சபையில் இருந்த 29 முஸ்லீம் எம்பிக்களில் 19 பேருடைய செயல்பாடு எப்படி இருந்தது என்றால் ஐந்து வருஷ காலத்தில் ஒருமுறை கூட இவர்கள் தங்கள் வாயைத் திறந்ததில்லை. ஜெனாப் அஸாதுத்தீன் ஒவைஸி மற்றும் ஜெனாப் ஸையத் ஷா நவாஸ் ஹுஸைன் போன்ற இரண்டு எம்பிக்கள் மட்டிலுமே முஸல்மாணியர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி லோக்சபையில் விவாதித்துள்ளனர்.
இதை மனதில் வைத்து நான் உங்களிடம் கேழ்க்க விரும்புகிறேன். நமக்கு வாய்மூடி மௌனியான வாய் தைக்கப்பட்ட மக்கள் ப்ரதிநிதிகள் லோக்சபையில் தேவையா? வாய்மூடி ஏதும் பேசாது ரப்பர் ஸ்டேம்புகளாகவும் மௌனிகளாகவும் பாராளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் மக்கள் ப்ரதிநிதிகள் நமக்குத் தேவையா? யோசித்துப் பாருங்கள்.
உத்தரப்ரதேசத்தில் ஸ்ரீ முலாயம் சிங்க் ஆட்சிக்கு வந்த பின்னர் 175 மதக்கலஹங்கள் நிகழ்ந்துள்ளன. அங்கு எத்தனை முஸ்லீம் எம் எல் ஏக்கள் உள்ளனர். ஒரு அல்லாகே பந்தே (அல்லாவின் ஆள்) என்று சொல்லத் தகுந்த முஸல்மானாவது தன் வாயைத் திறக்க யோசனையாவது செய்திருப்பாரா உத்தர ப்ரதேச சட்டசபையில்.
நமது முஸல்மான் சமூஹத்துக்கு ரிவர்ஸ் கியரில் வருவது தற்போது மிகவும் அவச்யம். முதலில் நாம் கல்வியில் மேம்பாடு எய்துவோம். கல்வியில் முன்னேறாத சமூஹம் வாய் திறவாத….. சமூஹத்துக்கு உபகாரமாக இல்லாத எம்பிக்களையே உத்பத்தி செய்யும்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
வாய் திறவா மௌன எம்பிக்கள் வாராமல் (தேர்ந்தெடுக்கப்படாமல்) இருப்பதே மேல் என்று சொல்கிறீர்களா?
ஜெனாப் ஸையத் ஜாஃபர் (Syed Zafar) :-
ஸ்வதந்த்ரத்துக்குப்பிறகு…… ஹிந்துஸ்தானத்தில் இன்றைய தினத்தில் 20 கோடி முஸ்லீம்கள் இன்றிருக்கிறோம் என்ற நிலையில் நாம் கல்வி பற்றி யோசிக்க வேண்டும். ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்தின் முதல் கல்வி மந்த்ரி முஸ்லீம். அதற்குப் பின் நாம் பின்னடைந்து விட்டோம். அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் ஒரு அரசியல் கட்சியின் (பல செக்யுலர் அரசியல் கட்சிகளின்) கிட்டத்தட்ட எழுதப்படா அஜெண்டா நம் சமூஹத்தை கல்வியற்றவர்களாக வைத்திருப்பது. இதற்கு ஒரு வழிமுறையாக நம்மைக் கொம்பு சீவி வைத்திருப்பதையும்….வலதுசாரி சக்திகளைப் பற்றிய தேவையில்லாத பயத்தை நமது மனதில் நிரந்தரமாக வைத்திருப்பதையும்…..இலக்காக வைத்திருந்தனர் அவர்கள்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
நீங்கள் முந்தைய காங்க்ரஸ் சர்க்காரின் செயல்பாட்டைப் பற்றிப் பேசுகிறீர்கள். மோதி சர்க்கார் என்ன செய்யவிருக்கிறது? முஸ்லீம்களுக்கு கல்வி கிடைக்குமா? வேலை கிடைக்குமா?
ஜெனாப் ஸையத் ஜாஃபர் :-
இதுவரை கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் விஷயத் தெளிவுடன் எந்த அரசியல்வாதியாவது…..அரசியல் கட்சியாவது….. முறையாக சிந்தித்துள்ளார்களா என்றால் அது மோதி அவர்கள் என்றும்….. அக்கட்சி பாஜக என்றும்…. நிச்சயம் சொல்வேன். பாஜக இது பற்றி Vision Document என்று ஒரு ஆவணம் தயார் செய்துவருகிறது.இந்த ஆவணம் ஹிந்து அல்லது முஸல்மான் என்று ஏதோ ஒரு சமூஹத்திற்காக தயாரிக்கப்படவில்லை. மாறாக முழு பாரத வர்ஷத்திற்காகவும் அனைத்து மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டுவதற்குத் தோதான வளர்ச்சித் திட்டங்களையும் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகளுடன் கூடிய கல்விக்காகவும் திட்டம் தீட்டப்படுகிறது பாஜகவில்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
மோதி அவர்கள் "அச்சே தின் ஆனே வாலே ஹைன்" – "நல்ல காலம் பிறக்க இருக்கிறது" என்று சொல்கிறாரே. இது ஹிந்துக்களுக்கு மட்டிலுமா அல்லது முஸல்மாணியர் உள்ளிட்ட அனைத்து சமூஹத்தினருக்குமா?
ஜெனாப் ஸையத் ஜாஃபர் (Syed Zafar) :-
தற்போது நிலைமை எப்படி என்றால்…………. ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களாகிய நாம்…… அனைத்து மக்களும்….. ரயில் நிலையத்தில் ப்ளாட்ஃபாரத்தில் உள்ளோம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ரயில் வண்டி கிளம்பத் தயாராக உள்ளது. நம் சமூஹம்(முஸ்லீம் சமூஹம்) கல்வியில் பின் தங்கியுள்ளது. நமக்கு ஏசி போகியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் சரி…….. ஜெனரல் கம்பார்ட்மெண்டிலாவது முண்டியடித்து ஏறவேண்டும். ஏறி ப்ரயாணம் செய்து இலக்கை அடைய வேண்டும். இலக்கை அடையவில்லை என்றால் இதே ப்ளாட்ஃபாரத்திலேயே தங்கி விடுவோம். இதே வெற்று வாக்குறுதி அரசியல்வாதிகள் பின்னால் ஓடுவோம். அதே பொய் வாக்குறுதிகள் அளிக்கப்படும். அப்படியே கொம்பு சீவி விடப்படுவோம். ஏமாற்றப்படுவோம். வெற்று வாக்குறுதிகள் எப்போதாவது நிறைவேற்றப்பட்டிருந்தால் நாம் இன்றைய நிலைமையில் உள்ளது போல் பின் தங்கி இருந்திருக்க மாட்டோம். வளர்ச்சி இலக்கை நோக்கி முன்னேறுவோமாக.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
ஜாஃபர் சாஹேப் (ஸரேஷ்வாலா சாஹேப்) நீங்கள் கிட்டத்தட்ட 12 வருஷம் மோதி அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள். அதற்காக மிரட்டல் உருட்டல்கள் — கொலை மிரட்டல்கள் வரை சந்தித்துள்ளீர்கள். நீங்கள் குஜராத்தில் இருந்திருக்கிறீர்கள். அங்கு எந்த அளவு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம். ஆனால் வெளியே மற்ற மாகாணங்களில் இருக்கும் முஸல்மாணியர் யாரிடம் முகத்தொடு முகம் கொடுத்து எங்கள் ப்ரச்சினைகளைப் பகிர முடியும்? பா ஜ கவில் முஸ்லீம் தலைமை என்று ஏதும் இல்லை.
நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா? எதிர் காலத்தில் உங்களது அரசியல் செயல்பாடு என்ன? பங்களிப்பு என்ன?
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-
நான் வ்யாபாரி. அரசியலில் நான் என்ன பங்களிக்க முடியும்? ஆனால் இதுவரை நான் எனது சமூஹ மக்களுக்கு எப்படி உதவிகரமாக இருந்திருக்கிறேனோ அப்படியே தொடருவேன். இன்ஷா அல்லாஹ்! இன்னமும் முயற்சி செய்வேன்.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
இந்த தேர்தலில் பாஜக 7 முஸ்லீம்களுக்கு டிக்கட் கொடுத்துள்ளது. எல்லோரும் தேர்தலில் தோற்றுப்போயுள்ளனர். பெருமளவில் முஸ்லீம்கள் பொதுவில் ஹிந்து வேட்பாளர்களுக்கே வாக்களிக்கின்றனர். அது மட்டிலும் என்ன?பாஜக தரப்பிலிருந்து தேர்தலில் நிற்கும் முஸ்லீம்களை முஸ்லீம்களாகவே கூட நாம் கருதுவதில்லை. பாஜக தரப்பிலிருந்து ஒரு முஸ்லீம் பெருந்தகையான இன்னொருவர் விடுபட்டு விட்டார். ஜெனாப் முக்தார் அப்பாஸ் நக்வி. அவருக்கு டிக்கட் கொடுத்திருந்தால் அவரும் தோற்றுப்போயிருப்பார்.
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-
பாஜக தரப்பிலிருந்து தென்படும் முஸல்மாணிய முகங்கள் வெறும் டோக்கனிஸத்தின் பாற்பட்டு என்று சொல்கிறீர்கள். செயல்பாடுகளில் உத்சாஹம் பொருந்திய முஸ்லீம் முகங்கள் யாரும் இல்லை என்று சொல்ல வருகிறீர்கள். ஓரளவு உண்மை தான். ஆனால் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். முஸ்லீம்களும் பாஜகவுடன் பணியாற்ற வேண்டும். பாஜகவிற்கும் முஸ்லீம் கார்யகர்த்தர்களுக்கு உத்சாஹம் அளிக்க வேண்டும். அவர்களது பங்களிப்பை விஸ்தரிக்க வேண்டும். இரு தரப்பிலிருந்தும் கைகோர்த்தால் தான் டோக்கனிஸத்திலிருந்து வெளிவரும் படுக்கு சாத்யம் ஆகும்.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
ஸ்வதந்த்ரத்திற்குப் பிறகு மிக அதிகமாக காங்க்ரஸ் சர்க்கார் தான் அரசாட்சியில் இருந்துள்ளது. ஆனால் முஸல்மாணிய சஹோதரர்களுக்கு வாக்குறுதிகளை மட்டிலும் கொடுத்துள்ளார்களே ஒழிய சமூஹத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. பாஜக முஸல்மாணியரின் சமூஹ முன்னேற்றத்துக்கு என்ன செய்யும்?
ஆஸிஃபா கான் சாஹிபா (Ms. Asifa Khan ):-
சஹோதரரே, நம்முடைய விரோதி யார் நண்பர் யார் என்ற விஷயத்தைக் கூட இன்னொரு அரசியல் கட்சி தான் நமக்குச் சொல்லித்தர வேண்டுமா? முஸல்மாணியர்களாகிய நாம் நாமாகவே இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாதா?
குஜராத்தில் மோதி சர்க்கார் ஹிந்துக்களுக்காக அல்லது முஸல்மான் களுக்காக என்று ப்ரத்யேகமாக எந்த கார்யத்தையும் செய்வது கிடையாது. மோதி அவர்கள் எப்போது பேசினாலும் 6 கோடி குஜராத்திகள் என்று அனைத்து குஜராத்திகளுக்காகவும் தான் பேசுவார். அதே போல ஹிந்துஸ்தானம் என்று வரும் போது 125 கோடி ஹிந்துஸ்தானியரைப் பற்றியே பேசுகிறார். நாம் எல்லோரும் அதில் அடக்கம். ஹிந்து, முஸ்லீம், க்றைஸ்தவர் என்று குறுகிய பார்வையில் இருந்து வளர்ச்சி பற்றிப் பேசாது…… அனைத்து ஹிந்துஸ்தானியரையும் உள்ளடக்கிய ஒரு உயர்ந்த சம்வாதம்…… தேசத்தில் மோதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் அரவணைத்து அனைவரும் வளர்ச்சியில் பங்களிக்கும் ஒருங்கிணைந்த சமூஹகக் கட்டமைப்பை முன்னிலைப்படுத்தும் ஒரு தலைவர் நமக்குக் கிடைத்திருக்கிறார். இன்ஷா அல்லாஹ்! இது தொடருமானால் ஓட்டு வங்கி அரசியல் முடிவுக்கு வரும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மற்ற சஹோதரர்களுக்கு இணையாக முஸல்மாணிய சஹோதரர்களுக்கும் சம வாய்ப்பு கிட்டும்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
அந்த சஹோதரர் வளர்ச்சி முஸல்மாணியருக்கும் கிட்டுமா என்று அறிய விரும்புகிறார்.
ஆஸிஃபா கான் சாஹிபா(Ms. Asifa Khan) :-
குஜராத்தில் *கன்யா கேடம்பி* என்ற மகளிருக்கான கல்வித்திட்டத்தை மோதி அவர்கள் அறிமுகம் செய்திருந்தார்.
பெண் குழந்தைகள் குஜராத்தில் மிகவும் குறைவாக கல்வி கற்று வந்தனர். தப்பித் தவறி கல்வி கற்க விழைந்தாலும்,குஜராத்தில் பாதியில் கல்வியை விட்டுவிடுதல் என்ற குறைபாடு …….20 – 23 சதமான அளவுக்கு முஸல்மாணிய பெண் குழந்தைகள் மத்தியில் இருந்தது.
ஜில்லா பரூச் அருகே உள்ள சான்ச்வே என்ற க்ராமத்தில் இந்த திட்டத்தால் கவரப்பட்ட ஒரு முஸல்மாணியப் பெருந்தகை 20 லக்ஷ ரூபாய் நன் கொடை அளித்துள்ளார். எதற்காக இந்தப் பெருந்தகை இவ்வளவு பெரும் தொகையை சர்க்காருக்கு கொடுக்க விழைந்தார் என்று அறிய முற்பட்டேன். இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு க்ராமமும் சர்வே செய்யப்பட்டது. கல்வி கற்காத ஒவ்வொரு குழந்தையையும் கல்வி கற்க வேண்டி பள்ளிகளில் சேரவேண்டி ஊக்குவிக்கப்பட்டனர். முழுமையாக முஸல்மாணிய பெண்கள் கல்வி பெறாததற்கு ஒரு முக்ய காரணம் பள்ளிகள் க்ராமத்துக்கு அருகில் அமையவில்லை என்று கண்டறியப்பட்டது. ஆதலால் க்ராமத்துக்கு மிக அருகில் பள்ளிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு நகரத்திலும் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
முஸல்மாணிய பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெகு தூரத்துக்குச் செல்லாமல் ஓரளவுக்கு அருகாமையிலேயே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று கல்வி கற்க முடியும் என்ற நிலைமையைக் கொணர்ந்ததும் கல்வி கற்பதில் உத்சாஹம் பெருகியது. தங்களது நகரத்திலிருந்து வேறு நகரத்திற்குச் சென்று கல்வி கற்க வேண்டும் என்ற நிலை இருந்தால் நாம் நம் குழந்தைகளை வேற்று நகரங்களுக்கு சென்று கல்வி கற்க அனுமதிப்பதில்லை. ஆனால் அருகாமையிலேயே கல்விச்சாலைகள் இன்று இருப்பதால் ஒவ்வொரு கல்லூரியிலும் புர்க்கா / ஹிஜாப் (முகத்திரை) அணிந்து முஸல்மாணிய பெண்கள் கல்வி கற்பதை குஜராத்தின் பல நகரங்களில் இன்று காணலாம்.
இந்த அளவுக்கு இது வரை குஜராத் மாகாணத்தில் வேறு எந்த முக்ய மந்த்ரியும்…… நரேந்த்ரபாய் மோதி அவர்களைப் போல்….. ஒரு கூர்மையான பார்வையுடன் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கல்வியை அணுகவில்லை.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
ஜாஃபர் சாஹேப் நீங்கள் ஒரு வ்யாபாரி. மோதி சர்க்காரில் முஸல்மான்களுடைய வ்யாபாரம் அபிவ்ருத்தி அடைந்ததா?
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala):-
மோதி சர்க்கார் காலத்தில் பிந்தைய 10-12 வருஷங்களில் குஜராத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அதற்கு முந்தைய 50வருஷங்களில் காணக்கிட்டாதது. நாங்கள் BMW கார் வ்யாபாரம் செய்கிறோம். 2008ம் வருஷம் நாங்கள் எங்கள் வ்யாபாரத்தை அஹ்மதாபாத்தில் ஆரம்பித்தோம். இங்கும், குஜராத் முழுதும் நாங்கள் எவ்வளவு வ்யாபாரம் செய்ய முடியுமென்று நினைக்கிறீர்கள்? அதிலும் குறிப்பாக எத்தனை முஸல்மாணியர்களுக்கு எங்கள் BMW கார் வ்யாபாரம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
ரூபாய் 30 லக்ஷத்திலிருந்து ரூபாய் ஒன்றரை கோடி பெருமானம் வரைக்குமான விலை ரேஞ்சில் கிட்டக்கூடியது இந்த BMW கார். குஜராத் மாகாணத்தில் முஸல்மாணியர் 9 சதமானம். எங்கள் ஒட்டுமொத்த வ்யாபாரத்தில் 11சதமானம் முஸல்மாணியருக்கு என்றால் எங்கள் சமூஹம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று அனுமானிக்கலாம்.
2009, 2011 மற்றும் 2013ல் முறையே 53, 59 மற்றும் 63 கார்களை விற்பனை செய்திருக்கிறோம்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் மற்றைய ப்ரதேச முஸல்மாணியரும் இந்த அளவுக்கு வளம் பெற மோதி அவர்கள் வழி வகை செய்வாரா? பீஹாரிலும் உத்தரப்ரதேசத்திலும் எத்தனை முஸல்மாணியர்கள் இந்த அளவு பெருமளவில் வளம் பெற்றிருக்கிறார்கள்? இவர்களாலும் BMW கார் வாங்க முடியுமா?
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-
மோதி அவர்கள் முஸல்மாணியருடனான ஒரு உரையாடலில் அனைத்து மக்களும் வளம் பெருவதைப் பற்றி விவாதித்துள்ளார். அங்கிருந்த ஒரு காதூன் (மதிப்பிற்குரிய முஸல்மாணிய பெண்) உடன் ஆஸிஃபா கான் சாஹிபாவுமிருந்தார். அவர் நரேந்த்ரபாய் அவர்களிடம் நீங்கள் ஹிந்துஸ்தானத்தின் ப்ரதமமந்த்ரியாக ஆனால் முஸல்மாணியர் நலனுக்காகவும் பாடுபடுவீர்களா என்று கேட்டார். அதற்கு நரேந்த்ரபாய் அவர்கள் பதிலளிக்கையில்…….ஹிந்து மற்றும் முஸல்மாணியர் ஒரு வாஹனத்தின் இரு சக்கரம் போன்றவர்கள். இதில் ஒரு சக்கரம் பங்க்சர் ஆனாலும் …..பழுதானாலும்…… வாஹனம் இயங்காது என்று நான் நன்றாக அறிவேன் என்று கருத்து பகிர்ந்துள்ளார்.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
மதர்ஸாக்களில் கல்வி கற்கும் குழந்தைகள் தொழிற்சாலைகளில் சென்று வேலை செய்வதற்கு வாய்ப்புகள் பெறுவதில்லை. மதர்ஸாவில் கொடுக்கப்படும் டிகிரிகளுக்கு வேலைவாய்ப்புகளில் மதிப்பு இருப்பதில்லை. மதர்ஸாக்களில் கம்ப்யூட்டர், ஹிந்தி, ஆங்க்லம் போன்றவை கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு……….. மதர்ஸாக்கள் வழங்கும் டிகிரிகள் மதிப்புள்ளதாக ஆக்கப்படுமா?
முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் (Mufti Ehsaz Ahmed) :- (All India Muslim Personal Law Board)
இது சம்பந்தமான கருத்தை மோதி அவர்கள் இங்கு முன்னர் காண்பிக்கப்பட்ட காணொலியில் பகிர்ந்ததை நாம் பார்த்திருக்கலாம். அதில் முஸல்மாணிய குழந்தைகளின் ஒரு கையில் கம்ப்யூட்டரும் இன்னொரு கையில் குரான்-ஏ-கரீமும் இருப்பதை தான் காணவிழைவதாக மோதி அவர்கள் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் ஸர் சையத் அவர்கள் இதே போல் முஸல்மாணியரின் ஒரு கரத்தில் விக்ஞானமும் இன்னொரு கரத்தில் குரான்-ஏ-கரீமும் இருப்பதை தான் விரும்பவதாகக் கருத்து கொண்டிருந்தார்.அதே போன்றதொரு கருத்தை மோதி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்வதந்த்ரத்திற்குப் பிறகு முஸல்மாணியருக்கு சம வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட நாம் வெகுவாக முன்னேறியிருக்க முடியும். மோதி அவர்கள் தான் மதத்தின் பேரால் எந்த ஹிந்துஸ்தானியரையும் வித்யாசப்படுத்தி பார்க்க மாட்டேன் என்றும் அனைவருக்கும் நீதி கிடைக்க வழிவகை செய்வேன் என்றும் அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கொடுப்பேன் என்றும் சொல்லியுள்ளார். இது சரியான கருத்து.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
மதர்ஸாக்களை நவீன மயமாக்குதல் என்பது காங்க்ரஸ் சர்க்காரின் திட்டம். அது நடைமுறையிலும் இருக்கிறது.2007ம் வருஷம் ரங்கநாத் மிஷ்ரா கமிட்டியின் ரிபோர்ட் வந்துள்ளது அதன் பின்னர் ஸச்சார் கமிட்டியின் ரிபோர்ட் வந்துள்ளது. இந்த ரிபோர்ட்டுகள் முஸல்மாணிய சமூஹம் மிகவும் பின் தங்கிய நிலைமையில் இருப்பதை தெளிவாக விவரித்துள்ளது. நமது சமூஹத்தின் பின் தங்கிய நிலைமையை சரிசெய்வதற்கு இந்த ரிபோர்ட்டுகள் முன்வைத்த சிஃபாரிசுகளை இதற்கு முந்தைய சர்க்கார்கள் முழுமையாக அமல் செய்யவில்லை. மோதி சர்க்கார் இந்த கமிட்டி ரிபோர்டுகளின் சிஃபாரிசுகளை அமல் செய்யுமா?
ஆஸிஃபா கான் சாஹிபா (Ms. Asifa Khan) :-
முஸல்மாணிய சமூஹத்தின் நிலைமை பற்றி கமிஷன்கள் ரிபோர்ட்டுகள் என்ற படிக்கு கண்துடைப்பு வேலை செய்வதே இது வரை நிலைமையாக இருந்துள்ளது. இந்த கமிட்டி ரிபோர்ட் வெளிவந்த பின் ஆறு ஏழு வருஷங்களுக்கு UPA சர்க்கார் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் எந்த சிபாரிசுகளும் முழுமையாக அமல் செய்யப்படவில்லை.
குஜராத்தில் ஸச்சர் கமிட்டியின் சிபாரிசுகள் எந்த அளவுக்கு அமல் செய்யப்பட்டுள்ளன என்பதை ஆராய குந்து கமிட்டி என்று ஒரு கமிஷன் நிறுவப்பட்டது. இந்த கமிஷன் தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த படிக்கு ஸச்சர் கமிட்டியின் சிஃபாரிசுகள் ஹிந்துஸ்தானத்தில் குஜராத் மாகாணத்தில் நிறைவாக அமல் செய்யப்பட்டிருக்கிறது என்று ரிபோர்ட் அளித்துள்ளது. இது பொது தளத்தில் அனைவரின் பார்வைக்கும் உள்ளது. யாரும் ரிபோர்ட்டை சரிபார்க்கலாம்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
நீங்கள் குஜராத்தில் ஸச்சர் கமிட்டி சிபாரிசுகள் முறையாக அமல் செய்யப்பட்டுள்ளன என்று சொல்கிறீர்கள். இவை ஹிந்துஸ்தானம் முழுதும் முறையாக அமல் செய்யப்படுமா என்று இந்த சஹோதரர் அறிய விரும்புகிறார்.
மௌலானா ஸாஜித் ரஷீதி சாஹேப் (Maulana SAjid Rashidi) – All India Imam Association :-
நமது சமூஹத்தில் பெரும்பாலான சஹோதரர்கள் ஒரு நேர்மறையான அணுகுமுறையல்லாது எதிர்மறையான கருத்துக்களுடன் மோதி சர்க்காரை அணுக விழைவதாக எனக்குப் படுகிறது. நாம் இந்த சர்க்காரிடமிருந்து நலத்திட்டங்களை பெற விழைந்தால் இந்த சர்க்காருடன் அணுக்கமாக பணி புரிவதற்கு நம்மை முதலில் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சர்க்காரிடமிருந்து மிக அதிகமான இடைவெளியை வளர்த்துக்கொண்டு இந்த சர்க்கார் நமக்கு இது செய்யவில்லை அது செய்யவில்லை என்று குற்றம் சாட்ட விழைவது சரியான செயற்பாடு இல்லை. நாம் நம்முடைய கருத்துக்களை இங்கு பகிர்வது உலக முழுதிலும் அனைத்து மக்களாலும் பார்க்கப்படுகிறது. எனவே இங்கு கேழ்க்கப்படும் கேழ்விகள் தெஹ்ஸீப் (Tezhzeeb – வினம்ரதை – பணிவு) உடன் கேழ்க்கப்படுவது முக்யம் என்று எனது சஹோதரர்களிடம் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
தேர்தலுக்கு முன்னால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மோதி சர்க்கார் ஆட்சிக்கு வந்தால் முஸல்மாணியர் தொல்லைக்கு உள்ளாவார்கள். குஜராத்தில் 2002ம் வருஷம் நிகழ்ந்தது போல் தேசம் முழுதும் மதக் கலஹங்கள் நிகழும் என்று அச்சமூட்டினர். ஆனால் இவ்வாறு அச்சமூட்டப்பட்டாலும் தேசம் முழுதும் ……. அதுவும் குறிப்பாக……முஸல்மாணியர் அதிக எண்ணிக்கையில் உள்ள பாராளுமன்றத் தொகுதிகளிலும் கூட……பாஜக எம்பிக்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். உ.பி யில் மொராதாபாத், சம்பல், பிஜ்னோர், பீஹார் மாகாணத்தில் பீஹார் ஷெரீஃப் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். குஜராத் மாகாணத்திலும் ராஜஸ்தானத்திலும் ஒட்டு மொத்த பாராளுமன்றத் தொகுதிகளை பாஜக வெற்றி பெற்றமை முஸல்மாணியரின் ஏகோபித்த ஆதரவு இல்லாமல் பெற்றிருக்க முடியாது.
இந்த அளவுக்கு மோதியின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டுப் போட்ட முஸல்மாணிய சமூஹம் மோதி சர்க்காரிடமிருந்து வளமான வாழ்க்கை கிட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?
ஜெனாப் ஸையத் ஜாஃபர் (Syed Zafar) :-
பாஜக தன் தேர்தல் அறிக்கையில் தாங்கள் செய்ய விரும்பும் கார்யங்களை பட்டியலிட்டுள்ளது. அதை அமல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். அவர்கள் சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா என்று பார்க்க முனைவதே நம் அனைவருக்கும் நன்மை பயக்கும். அதை விடுத்து நாம் இதற்கு முன்னர் என்ன நிகழ்ந்தது என்று பின்னோக்கிப் பார்ப்பதில் எந்த லாபமும் இல்லை.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
தேர்தலுக்கு முன் மோதியைப் பற்றி அரசியல் கட்சிகள் முன் வைத்த முகம் அச்சம் தரத்தக்கது. தேர்தலுக்குப் பின் மோதி அவர்கள் பேசுவதைக் காண்கையில் மற்ற அரசியல் வாதிகள் முன் வைத்த ஒரு முகத்தையல்லாது பெரும் வேற்றுமையை காண்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற பின் நான் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் வண்ணம் ஆட்சி புரிவேன் என்று மோதி சொல்கிறார். அவ்வாறு அவர் செயல்பட முடியுமா என்று விளக்கவும்.
ஆஸிஃபா கான் சாஹிபா (Ms. Asifa Khan) :-
முஸல்மாணிய மற்றும் ஹிந்து இளைஞர் சமுதாயம் மோதி அவர்களின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் தனியொரு கட்சியாக பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்றது இந்த உத்சாஹமிகுந்த சமுதாயத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் தான். இப்போது அந்த நம்பிக்கையை அமல் செய்ய வேண்டும் என்ற படிக்கு மோதி சர்க்காருக்கு பொறுப்பு இரு மடங்கு ஆகிவிட்டது. இன்ஷா அல்லாஹ்! நான் மோதி அவர்களுடன் பணி செய்கையில் மதத்தின் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் சந்தித்ததில்லை. மோதி அவர்கள் அனைத்து ஹிந்துஸ்தானியரையும் அரவணைத்து தேசத்தை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் செல்ல விழைகிறார் என்று உறுதியாகச் சொல்லுவேன்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
நமது முஸல்மாணிய சஹோதரர்கள் அரசியல் என்று மட்டுமின்றி லையன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப், மருத்துவ சேவை சார்ந்த சங்கங்கள் என சமூஹத்திற்குப் பங்களிக்கும் அனைத்து துறைகளிலும் பங்கேற்க விழைய வேண்டும். அப்படிப் பங்கேற்றாலே நாம் முழுமையான மற்றும் துரிதமான வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்
(தொடரும்)
மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3
July 22, 2014
குற்றச்சாட்டு எண் – 3
மோதி அவர்கள் ப்ரதம மந்த்ரியாகப் பொறுப்பேற்றதால் செக்யுலர் சக்திகள் பெரும் பின்னடைவை சந்திக்கும்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
ஜாஃபர் சாஹேப், மோதி அவர்கள் ப்ரதம மந்த்ரியாகப் பொறுப்பேற்ற பின்னர் செக்யுலர் சக்திகளான முலாயம் சிங்க் யாதவ், மாயாவதி போன்றோர் செல்லாக்காசுகளாக ஆகி விட்டனர். காங்க்ரஸைப் பற்றிப் பேசுதவதற்கே ஒன்றும் இல்லை.
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-
யாரையாவது செக்யுலர் என்று சொல்லிவிடுவதால் மட்டிலும் செக்யுலர் ஆகிவிடுவார்களா? யாரையாவது கம்யுனல் என்று சொல்லிவிடுவதால் மட்டிலும் கம்யுனல் ஆகிவிடுவார்களா?
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
முஸல்மாணியரது ஓட்டுக்களல்லாமால் எந்த ஒரு அரசியல் கட்சியும் பெரு வெற்றியைப் பெற முடியாது. காங்க்ரஸ் ஒரு செக்யுலர் கட்சியாக இருந்தது. மிக அதிக காலம் ஆட்சியில் இருந்தது. ஆனால் எங்கள் சமூஹத்தை பெரும் அளவில் ஏமாற்றியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இக்கட்சி விஷம் கலந்த உணவாக ஆகிவிட்டது (food poison). நாங்கள் கிட்டத்தட்ட பெரும் கருத்துக்குருடர்களாக இந்தக் கட்சியின் பின்னர் சென்றோம். நான் நரேந்த்ரபாய் மோதி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் காணொலியில் காண்பித்த படி முஸ்லீம் குழந்தைகளின் ஒரு கையில் குரான்-ஏ-கரீம் மற்றும் மற்றொரு கையில் கம்ப்யூட்டர் என்ற நிலை வரவேண்டும் என்று மோதி அவர்கள் சொன்னது எப்போது அமல் செய்யப்படும்?
முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் (Mufti Ehsaz Ahmed) :- (All India Muslim Personal Law Board)
சமூஹத்தில் பொறுப்புள்ள ஒரு வ்யக்தி ஒரு வாக்குறுதியை பொதுதளத்தில் அளிக்கிறார் என்றால் அது நிறைவேற்றப்படும் என்று நம்பலாம். எப்போது தான் ஒரு கார்யத்தை செய்வேன் என்று உறுதி பூண்டுள்ளாரோ அதை அவ்வண்ணம் செய்ய மாட்டார் என்று துவக்கத்திலேயே நாம் ஏன் நினைக்க வேண்டும்? தகுந்த காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்றே நினைப்போமாக.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
ஜாஃபர் சாஹேப் நான் புள்ளி விபரங்களில் ஆழ்ந்து செல்லவில்லை. முஸல்மாணிய சஹோதரர்களில் நல்ல வருவாய் ஈட்டுபவர்கள் குறைவே. கல்வியில் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள். ஐஏஸ் பணியில் 3 சதமானம். ஐஃஎப் எஸ் பணியில் 1 சதமானம். இப்படி ஒரு நிலை இருப்பதால் தான் இங்கு இருக்கும் சஹோதரர்களின் மனதில் நமக்கு முன்னேற வாய்ப்புகள் கிட்டுமா என்று பெரும் சம்சயம் எழுகிறது.
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-
இப்போது ஐ ஏ எஸ் பற்றி ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்கள் கருத்துப்பகிர்ந்தார் இல்லை? இப்போது இதை முன் வைத்து யார் செக்யுலர் யார் கம்யூனல் என்ற பரிச்சயத்தை உங்கள் முன் வைக்கிறேன். உங்களில் பல பலபேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. UPA சர்க்கார் பதவியிலிருந்து விலகிச்செல்லும் போது UPSC தேர்வுகள் சம்பந்தமாக ஒரு முடிவு எடுத்தது.
UPSC தேர்வுகளில் அரபி மற்றும் ஃபார்ஸி மொழிகள் விருப்பப்பாடமாக பல்லாண்டு காலமாக இருந்து வந்தது பலரும் அறிந்த விஷயம். இதனால் அங்கொன்று இங்கொன்றாக பல முஸல்மாணிய இளைஞர்களும் இத்தேர்வில் பங்கெடுத்து வெற்றி பெற்றுள்ளனர். UPA சர்க்கார் அரபி மற்றும் ஃபார்ஸி மொழிகளை UPSC தேர்வுகளின் விருப்பப் பாடமாக இருந்ததை சமீபத்தில் ஆட்சியில் இருந்து விலகும் தருணத்தில் ரத்து செய்தது. சர்க்காரில் மந்த்ரியாக இருந்த ஸ்ரீ நாராயணசாமி அவர்களிடம் நாங்கள் இது விஷயமாக விவாதிக்க சென்றோம். இங்கு அமர்ந்திருக்கும் மௌலானா சாஹேபும் எங்களுடன் இருந்தார். 50 வருஷங்களுக்கு மேலாக அமலில் இருந்து சமீபத்தில் ரத்தான மொழி பற்றிய இந்த விஷயம் சார்ந்து அவர் என்ன சொன்னார் தெரியுமா? நான் பொது தளத்தில் தொலைக்காட்சியில் இதைப் பகிருகிறேன்.
அரே வா!!! எங்களுடைய மந்த்ரி சபையில் இந்த விஷயம் சம்பந்தமாக நிர்ணயம் செய்த போது மூன்று முஸ்லீம் மந்த்ரிகளும் உடனிருந்தனர். அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்ன பெரிதாக வந்து விட்டது?எங்களுடைய மூன்று முஸ்லீம் மந்த்ரிகளுக்கு தவறாக இல்லாத ஒரு விஷயம் உங்களுக்கு என்ன பெரிய தவறாகத் தெரிகிறது?
இவ்வளவு மட்டிலும் இல்லை. இதே குழு இந்த விஷயம் சம்பந்தமாக ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களையும் சந்திக்க விழைந்தது. அவருடைய அணுகுமுறையையும் தெரிந்துகொள்ளுங்கள். நானும் அப்போது உடனிருந்தேன். இவர் வெகு தூரம் ஓடக்கூடிய பந்தயக்குதிரை என சொல்வேன்.
நம்முடைய தேசத்தின் வணிகத்தில் 60 சதமான வெளிநாட்டு வர்த்தகம் அரபி மற்றும் ஃபார்ஸி மொழி பேசும் தேசங்களுடன் நிகழ்கிறது. சர்க்காரில் பொறுப்பில் இருப்பவர்கள் நமது செழிப்பான வெளிநாட்டு வர்த்தகத்தை கணக்கில் கொண்டு அரபி மற்றும் ஃபார்ஸி மொழி பயின்றவர்களை ஊக்குவிக்க அல்லவோ வேண்டும்? இது எப்படிப்பட்ட சர்க்கார்? இலக்கில்லாமல் செயல்படுகிறதே என்று குறைப்பட்டுக்கொண்டார். இது அவருடைய தீர்க்கமான தொலைநோக்குப்பார்வையை பறைசாற்றுகிறது.
முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் (Mufti Ehsaz Ahmed) :- (All India Muslim Personal Law Board)
மோதி அவர்கள் இந்த மொழிகளை UPSC தேர்வுகளில் திரும்பவும் விருப்பப்பாடங்களாக சர்க்கார் கொணரும் என்று வாக்குறுதி அளித்தாரே அதையும் பகிருங்கள்.
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-
ஆம் இந்த மொழிகளை நான் ஆட்சிக்கு வந்தால் திரும்பக்கொணருவேன் என்று வாக்குறுதியும் அளித்தார்.இவருடைய தொலைநோக்குப்பார்வைக்கு இன்னொரு உதாரணத்தையும் முன் வைக்கிறேன். இரண்டு வருஷங்கள் முன்னர் அஹ்மதாபாத்தில் ஒரு உலகளாவிய சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்றது. அதில் பாக்கி ஸ்தானிலிருந்தும் வ்யாபாரிகள் வந்திருந்தனர். மோதி அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சமூஹத்தின் பலதரப்பு மக்களையும் முனைந்து சந்தித்து அவர்களுடைய கருத்துக்கள் மற்றும் நிறை குறைகளை அறிவதில் நாட்டமுடன் இருப்பார். அதற்கேற்ற படிக்கு பாக்கி ஸ்தானிய வ்யாபாரிகள் மோதி அவர்களை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அவருக்கு செய்தி அனுப்பினார்கள். உடன் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார் மோதி அவர்கள். பாக்கி ஸ்தானிய வ்யாபாரிகளுடன் மத்ய சார்க்காருடைய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் செயலாளரும் உடனிருந்தார்.
அவர்கள், ஐயா நாங்கள் அஜ்மேர் செல்ல விரும்புகிறோம். அதற்கு உங்கள் உதவி தேவை என்று இறைஞ்சினார்கள். மோதி அவர்களும் ஒரு வேளை இவர்களுக்கு அஜ்மேர் வரை செல்ல கார் அல்லது ஜீப் போன்ற வாஹன வசதி தேவையாக இருக்கும் என்று எண்ணி, உங்களுக்குத் தேவையான வாஹன வசதியை உடனே செய்து தருகிறேன் என்று சொன்னார்.
ஆனால் அவர்களோ, இல்லை ஐயா, இது எங்கள் ப்ரச்சினை இல்லை. அஜ்மேர் வரை செல்வதற்கு எங்களுக்கு விசா கிடைக்கவில்லை என்றனர். மோதி வருத்தப்பட்டு சுற்றுலாத்துறை செயலாளரைப் பார்த்து, ஐயா இது என்ன விநோதமான செயல்பாடு? பாக்கி ஸ்தானிலிருந்து ஹிந்துஸ்தானம் வரும் யாத்ரிகர்களுக்கு அஜ்மேர் செல்வதற்கு அனுமதி இல்லையென்றால் நமது சுற்றுலா சம்பந்தமான அரசுக்கொள்கையில் குறைபாடு இல்லை?வெளிநாட்டிலிருந்து ஹிந்துஸ்தானத்திற்கு வருகை தரும் ஹிந்து யாத்ரிகர்களுக்கு காசி மாநகரம் செல்ல அனுமதி இல்லை என்றால் எப்படிப்பட்ட மதிஹீனமான சுற்றுலாக்கொள்கையாக அது பார்க்கப்படும்? என்று கருத்துப்பகிர்ந்தார். அவருடைய கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் பரந்த நோக்குடையவை என்பதற்கும் அனைத்து மக்களையும் வேறுபாடு இல்லாமல் அரவணைத்துச் செல்ல விரும்பும் நோக்கிற்கும் இவை உதாரணங்கள்.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
மோதி அவர்கள் முஸ்லீம்களுக்கு என்னென்ன செய்வார்? மான்யவர் ஸ்ரீ முலாயம் சிங்க் யாதவ் அவர்கள் முஸ்லீம்களுக்காக வேண்டி லக்னவ் நகரத்தில் நிர்மாணம் செய்த படி பெரிய கட்டிடங்களை நிர்மாணம் செய்வாரா?எங்களுடைய ப்ரச்சினைகளை நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டுமானால் யாருடன் பேச வேண்டும்? முஸ்லீம் எம்பிக்கள் இல்லையே. எங்களது தொகுதி எம்பியான டாக்டர் மஹேஷ் ஷர்மா அவர்களை அணுகுவதா? அல்லது வேறு யாராவது முஸல்மாணிய சஹோதரரை அணுகுவதா? யாரை நாங்கள் அணுக வேண்டும்?
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
இதற்கு யார் பதிலளிக்க வேண்டும். நானே பதில் சொல்கிறேன் ஐயா. முஸ்லீம் என்றும் ஹிந்து என்றும் எதற்கு வேறுபாடு? நீங்கள் உங்கள் தொகுதி எம்பியான டாக்டர் மஹேஷ் ஷர்மா அவர்களை அணுகுவதில் எதற்குத் தயக்கம் வேண்டும். அவ்வளவு ஏன்? உங்களுக்கு வேறு யாரும் கிட்டவில்லை என்றால் என்னிடம் கூட உங்கள் குறைகளைப் பகிரலாம். நான் அதை சர்க்காரிடம் நிச்சயமாகச் சேர்ப்பேன் என்று இந்த பொது தளத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-
ஒரு ஹிந்து மோசமானவர் இல்லை. ஒரு முஸல்மான் மோசமானவர் இல்லை. ஒரு க்றைஸ்தவர் மோசமானவர் இல்லை. ஒரு சீக்கியர் மோசமானவர் இல்லை. மனிதரை மனிதராகப் பார்க்க இயலாதவர்கள் மோசமானவர்கள்.
குற்றச்சாட்டு எண் 4 :-
மோதி அவர்கள் ப்ரதமராகப் பொறுப்பேற்றதால் முஸலீம்கள் பெருமளவு பொருளாதரப்பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
மோதியின் குஜராத்தில் வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் பேச்சு என்று சொல்கிறார்களே? இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-
கடந்த 12 வருஷங்களாக குஜராத் மாகாணத்தில் சண்டை சச்சரவுகள் மதக்கலஹங்கள் இவையெதுவும் இல்லாமல் அமைதி நிலவுகிறதே. அதனுடைய மிகப்பெரும் பயனை அடைந்து வருபவர்கள் முஸ்லீம்கள். அதுவும் அடிமட்டத்தில் இருக்கும் முஸ்லீம் சஹோதரர்கள். ரிக்ஷாகாரர்கள் போன்று சமூஹத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் அடைந்த நிம்மதி மற்றும் பொருளாதார வளர்ச்சி மிகவும் உகக்கத் தக்கது. முன்னெல்லாம் பாக் (Bhag)என்ற ஹிந்துப்பெரும்பான்மைப்பகுதிக்கு முஸ்லீம் ரிக்ஷாகாரர்கள் செல்லவே மாட்டார்கள். கலஹம் என்று ஏதும் இல்லை. ஆனால் மனதில் அச்சம் இருந்து வந்தது. முன்பெல்லாம் பயத்தின் காரணமாக நகரத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் ரிக்ஷா இழுத்து தினம் 200-250 ரூபாய் சம்பாதித்த சஹோதரர்கள் அச்சமில்லாது அமைதி நிலவும் மாகாணத்தின் எந்தப்பகுதிக்கும் தைரியமாகச் சென்று தொழில் செய்வதில் தினம் 700-750 ரூபாய் வரை செழிப்பாக சம்பாதிக்கிறார்கள்.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
குஜராத்தில் நிலவும் அமைதி ஹிந்துஸ்தானம் முழுதும் நிலவும் என்று உறுதி அளிக்க முடியுமா?
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-
இது ஹிந்துஸ்தானத்தில் முதல் முறையாக ஒரு மாகாணத்தின் ஆட்சி முறையை முன்னிறுத்தி அதன் மூலம் வெற்றியைப் பெற்ற தேர்தல் என்பதை நாம் நினைவுறுத்த வேண்டும். இந்த ஆட்சி முறை சரி அல்லது தவறு என்று பலபேருக்கு பல அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் இந்த முறை முன்னிறுத்தப்பட்டு இது வெற்றி பெற்றது என்பது மறுக்க முடியாது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல் அஹ்மதாபாத் நகரத்தை ஹிந்துஸ்தானத்தில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்று விருதளித்தது. ராத்ரி இரண்டு மணிக்கு புர்க்கா அணிந்த பெண்ணும் அவரது கணவரும் நகரத்தில் பயமின்றி செல்வதை எங்காவது காணமுடியும் என்றால் அது அஹ்மதாபாத்தில் தான். ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் வாஹனங்களில் பெண்கள் பயமின்றி செல்ல முடியும். பாக் (Bhag) என்ற பகுதி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. ஒருகாலத்தில் நாங்கள் கூட அங்கு சென்றதில்லை. அது போலவே முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு ஹிந்துக்கள் செல்ல மாட்டார்கள். ஆனால் இன்றைய திகதியில் உங்களில் யாரையாவது பாராசூட்டில் அஹ்மதாபாத்தின் நகரத்தில் எங்காவது இறக்கி விட்டால் இது போன்ற வித்யாசங்களை உணர மாட்டீர்கள். எல்லா பகுதிகளிலும் எல்லா மதத்தைச் சார்ந்த மக்களும் அச்சமில்லாமல் புழங்குவதைக் காணலாம். ராத்ரி நேரங்களில் ஹிந்துப்பகுதிகளில் புர்க்கா அணிந்த பெண்கள் தங்கள் குடும்பத்தாருடன் பார்க் மற்றும் தோட்டங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.
மணிநகர் என்பது ஸ்ரீ மோதி அவர்கள் வெற்றி பெற்ற சட்ட சபைத் தொகுதி. ஹிந்துப்பெரும்பான்மைத் தொகுதி. காலை நமாஸ் முடிந்ததும் அங்குள்ள பார்க்குகளில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள் நடைப்பயிற்சி செய்வதை சர்வ சாதாரணமாகக் காணலாம். வணிக வளாகங்களிலும் அனைத்து மக்களும் பெருமளவு புழங்குவதைக் காணலாம். இப்படி முன்பு இருந்ததில்லை.
ஸ்ரீ ரஜத் ஷர்மா :-
இப்படி ஒரு அமைதி ஹிந்துஸ்தானம் முழுதும் நிலவுமா?
ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-
நிச்சயமாக. மோதி அவர்களுடைய செயல்திட்டங்கள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சர்க்காரின் செயல்திட்டங்கள் அமைதியான சூழலில் மட்டுமே முடியும். ஆகவே தன்னுடைய இலக்கான வளர்ச்சியை அடைவதற்கு ஹேதுவாக தேசம் முழுதும் அமைதியான சூழலுக்கு மோதி அவர்கள் வித்திடுவார் என்பதும் வளர்சிக்காக வேண்டி சாலை நிர்மாணப்பணிகள், மின் திட்டங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அபிவ்ருத்தி போன்ற திட்டங்களை முனைந்து அமல் செய்வார் என்பதையும் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். குஜராத் மாகாணம் இப்படித் தான் வளர்ச்சி பெற்றது.
இதற்குப் பின் சில முஸல்மாணிய சஹோதரர்கள் மோதி அவர்களுக்கு தங்கள் ஆதரவை நல்க விரும்பவதாகவும் வளர்ச்சியில் பெரும் நம்பிக்கை உள்ளதாகவும் கருத்துப் பகிர்ந்தார்கள்.
பல சஹோதரர்கள் மிகவும் இனிமையான மற்றும் சுத்தமான உர்தூ ஷையில் கரவொலிகளுக்கு மத்தியில் உர்தூ கவிதைகள் பகிர்ந்தார்கள். உத்தர பாரதத்து முஸ்லீம் சஹோதரர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கவிஞர்கள் என்றால் அது நிச்சயமாக மிகையாகாது. மிகவும் நாசூக்கான மொழியான உர்தூவில் காதல், இன்பம், துன்பம் மற்றும் இறைவனைப் பற்றி வாயைத்திறந்து பேசினாலேயே கவிதை மொழியிலேயே பேசும் சாமர்த்யம் படைத்தவர்கள் உத்தர பாரதத்து முஸல்மாணிய சஹோதரர்கள். மிகவும் நளினமான மற்றும் சுத்தமான உர்தூ மொழியில் பகிரப்பட்ட கவிதைகள் ஆதலால் அதன் முழு தாத்பர்யத்தை உள்வாங்க முடியவில்லை. ஆனால் மிகுந்த கரவொலிகளாலும் ஓரளவுக்குப் புரிந்த படிக்கும் சஹோதரத்துவத்தைக் கொண்டாடும் உன்னத பொருள் பொதிந்த கவிதைகள் என்று மேம்போக்காகப் புரிந்து கொண்டேன்.
இதையடுத்து முழுதும் காவி உடையணிந்து காவித் தலைப்பாகை அணிந்த அஜ்மேர் தர்க்கா ஷெரீஃபின் உத்தராதிகாரியான ஹாஜி சையத் மொய்னுத்தீன் சிஷ்டி சாஹேப் அவர்கள் இந்த ந்யாயாலயத்தின் ந்யாயாதிபதி என்ற படிக்கு தன் தீர்ப்பைப் பகிர்ந்தார்.
இங்கு கேழ்க்கப்பட்ட கேழ்விகள் அனைத்திற்கும் விவாதத்தில் பங்கு பெற்ற ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகளும் தெளிவான நேரடியான பதில்களை அளித்தார்கள் என்பது போற்றத் தக்கது. ப்ரதமராகப் பதிவி ஏற்க இருக்கும் மோதி அவர்கள் ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்பது சரியான எதிர்பார்ப்பு. இந்த தேசத்தின் அரசியல் சாஸனம் மிகவும் வலிமை வாய்ந்தது. ப்ரதமராகப் பதிவி ஏற்கும் எந்த ஒரு நபரும் யாருக்கும் பாரபக்ஷம் காண்பிக்க இயலும் என்ற படிக்கு வலுவற்றது அல்ல நமது அரசியல் சாஸனம். மோதி அவர்களிடமிருந்து இந்த தேசத்தின் முஸ்லீம்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக வேண்டி இந்த தேசத்தைச் சார்ந்த அனைத்து மதங்களின் படி ஒழுகும் மக்களையும் அரவணைத்து மோதி அவர்கள் நமது வளர்ச்சிப் பயணத்தை துவக்கட்டும். நன்றி.
இங்கு பகிரப்பட்ட பல விஷயங்களில் நமது தமிழகத்து முஸல்மாணிய சஹோதரர்களுக்கும் உடன்பாடிருக்கும் என நம்புகிறேன். ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்களில் சிலருக்கு சில கருத்துக்களில் மாறுபாடுகளும் இருக்கலாம். கருத்து வேறுபாடுகளில் ஆழ்ந்து வேற்றுமைகளை வளர்த்தெடுக்காது கருத்தொற்றுமைகளின் பலம் கொண்டு ……….. ஹிந்துக்களும் முஸல்மாணியரும் கரம் கோர்த்து தேச வளர்ச்சியில் பங்களித்தால் தேசம் விரைவாக முன்னேறும். தேசத்தின் அனைத்து மக்களும் சுபிக்ஷமாக வாழ்வர்.
நமது முஸல்மாணிய சஹோதரர்கள் மாதம் முழுதும் நோன்பிருந்து இறைவனைத் தொழும் இந்த மாதத்தில்……..இறையருளால் அனைத்து நலன் களையும் பெறவும் ஹிந்து சஹோதரர்களுடன் இணக்கமாக வாழ்வதற்கும் எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
பாரதத் தாயை பணிந்து வணங்கும்
வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே
வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே
தூய நினைவுடனே.
(முற்றும்)
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment