தூக்கமின்மையால் அவதியா ..? இதை பண்ணுங்க தானா வரும் உறக்கம்
கடுமையான வேலை அல்லது மன அழுத்தம் ஆகியவை காரணமாகத் தூக்கமின்மை உண்டாகிறது. சில யோகாசனங்களைத் தவறாமல் செய்வதன் மூலம் நாம் இரவில் நிம்மதியாகத் தூங்கி பகலிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம். அந்த யோகாசனங்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். • பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana) இந்த ஆசனத்திற்கு, முதலில் நாம் தரையில் உட்கார்ந்து கால்களை நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். பிறகு கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, மெதுவாகக் குனிந்து கைகளால் பாதங்களைத் தொட முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில் நம் கால் முட்டிகளில் தலை உரச வேண்டும். குனியும் போது நன்றாக மூச்சை வெளியேற்றி, பின்னர் மூச்சை சிறிது நிறுத்தி, அதன் பிறகு தலையை நிமிர்த்தும் போது மூச்சை இழுக்க வேண்டும். இந்த ஆசனத்தை ஒரு நாளுக்கு பல முறை செய்தால் சோர்வுகள் பறக்கும். இரவில் நிம்மதியாகத் தூங்கலாம். • உத்தனாசனம் (Uttanasana) நேராக நின்று, நம் இரு கைகளையும் முன்புறமாகத் தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். பின்னர் அப்படியே முன்புறமாகக் கீழே குனிந்து, கால் முட்டிகளை மடக்காமல் கைகளால் தரையைத் தொட வேண்டும். ரொம்ப கஷ்டமாக இருந்தால் கொஞ்சம் முட்டியை மடக்கிக் கொள்ளலாம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு, கைகளை நீட்டியவாறே மெதுவாக நிமிர்ந்து, கைகளை தலைக்கு மேலே கொண்டுவந்து, பின்னர் கீழே இறக்கிக் கொள்ளலாம். இந்த ஆசனம் செய்யும்போது, நம் ரத்தம் தலையில் பாய்வதால், நரம்பு மண்டலங்கள் மிகவும் சுறுசுறுப்பாகும். • சவாசனம் (Shavasana) இந்த ஆசனத்திற்கு, முதலில் நாம் தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். பின்னர், உடம்போடு ஒட்டி உள்ளங்கைகள் மேலே இருக்குமாறு கைகளை வைக்க வேண்டும். மூச்சை மட்டும் சீராக இழுத்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். |
No comments:
Post a Comment