நல்ல குடும்பம்!!!
நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் :
1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
2. கணவன் – மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும்.
எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள்.
அது குடும்ப அமைதியைக் காக்கும்.
வீண் செலவுகள் செய்ய வேண்டாம்.
அது குடும்ப அமைதியை குலைக்கும்.
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம்.
எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது.
அது பிரச்சினைகளுக்கு இடம்தரும்.
மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.
7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.
8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.
9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை.
அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment