தாழ்வு மனப்பான்மை போக சில வழிமுறைகள்
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள்
நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும்
சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.
யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான்
அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும்
கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல்
செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்
தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும்
வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை
என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில்
நிற்பவருக்கு எல்லாமே தெரியும்
என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த
எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல
வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக
சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப்
பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக
புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள்
அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும்
வரப்போவதில்லை என்பதை ஏற்றுக்
கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.
# மாற்றத்தை வெளியில் தேடாமல்
உங்களுக்குள் தேடினால்,
தாழ்வு மனப்பான்மையை எளிதில்
போக்கி விடலாம்
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment