ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி: சென்னையில் இன்று தொடங்குகிறது.......
ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை நடத்தும் 6-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தொடங்குகிறது.
திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக மைதானத்தில் ஜூலை 14-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திரர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தில்லியில் உள்ள திபெத் இல்லத்தின் இயக்குநர் ஜெசி தூர்ஜி தமுல், ஜெயின் துறவி சமானி ஸ்ரீநிதிஜி, அகில இந்திய பிங்கலவாரா அறக்கட்டளையின் தலைவர் இந்திரஜித் கௌர், ஹிந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, ஆடிட்டர் பிரபாகர், நம்பி நாராயணன் ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
பிரமாண்டமான ஏற்பாடுகள்: கண்காட்சி அரங்குகளுக்காக சுமார் 1 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமான பந்தலும், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்த தனியாக அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கேன்டீன், கழிவறை வசதிகள், இலவச மருத்துவ முகாம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
250 அரங்குகள்: கண்காட்சியில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்தானம், ஆந்திர மாநில அறநிலையத் துறை, இந்திய தொல்லியல் துறை, திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சின்மயா மிஷன், மாதா அமிர்தானந்தமயி மடம், ஈஷா அறக்கட்டளை, வேலூர் நாராயணி பீடம், பிரம்மகுமாரிகள் அமைப்பு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம், தர்ம ரக்ஷண சமிதி, அகில இந்திய சாய் சமாஜம், கோவிலூர் மடாலயம், பேரூர் சாந்தலிங்க அடிகளார் மடம், சேவாபாரதி உள்பட நாடு முழுவதும் இருந்து 250-க்கும் அதிகமான ஆன்மிக, சேவை அமைப்புகள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. ஆன்மிகம், சேவை தொடர்பான புத்தகங்கள், வெளியீடுகள், குறுந்தகடுகள், கைவினைப் பொருள்களும் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கும்.
ஆந்திரத்திலிருந்து வந்துள்ள ரதங்கள்: ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம், ஸ்ரீகாளஹஸ்தி, காணிப்பாக்கம், துவாரகா திருமலை, திருமலை திருப்பதி, கனகதுர்கா - விஜயவாடா, யாதகிரி குட்டா ஆகிய இடங்களில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் இருந்து வந்துள்ள பிரசார ரதங்கள் கண்காட்சி அரங்கில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்: அந்தந்த ஆலயங்களின் வடிவில் சுவாமி சிலைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரதங்களில் முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். கண்காட்சியின் இறுதி நாளான ஜூலை 14-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
அனுமதி இலவசம்: கண்காட்சி தினமும் காலை 9.30 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment