வாழ்க்கை தத்துவம்:
-----------------------------
குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், "அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே' என்றான்.
வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை "தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா" இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.
தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்' என்றார் தந்தை.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment