கொன்றை மலருக்கும்... தமிழ் வருடம் பிறக்கும் சித்திரை மாதத்துக்குமான தொடர்பு... பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆம்... சித்திரை முதல் தேதியன்று கண் விழித்ததும் பார்க்க வேண்டிய மங்கலப் பொருட்களின் வரிசையில் பொன்னுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்திருப்பது கொன்றை மலரே! அந்தளவுக்குச் சிறப்பு பெற்றது கொன்றை.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே'
என்று சிவனைப் போற்றுகிறது தேவாரம்.
அவ்வையார் எழுதிய கொன்றை வேந்தனில், சிவன் விரும்பி அணிந்த மலர் கொன்றை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுசீந்திரம், தாணுமாலயன் சுவாமி ஆலயம்; திருவதிகை, ஸ்ரீவீரட் டேஸ்வர ஆலயம் மற்றும் திருப்பனூர், கொன்றை வேந்தனார் ஆலயம் போன்றவற்றின் தலவிருட்சமாக இந்தக் கொன்றை போற்றப்படுகிறது.
கொன்றை மலரைக் கொண்டு வழிபட்டால் பொன்னை வைத்து வணங்கிய பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இதற்கு 'சொர்ண புஷ்பம்' என்கிற பெயரும் உண்டு! இதனாலேயேதான் கேரளாவில் கொண்டாடப்படும் 'விஷ§ கனி' பண்டிகையின்போது கொன்றை மலர் முக்கிய இடம் பிடிக்கிறது!

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment