Sunday, 26 January 2014

கர்ணனும் தருமமும் உலகமும் – தர்மன்-கிருஷ்ணர் – உலகத்தில் தர்மம் ஒரு பார்வை :-

கர்ணனும் தருமமும் உலகமும் – தர்மன்-கிருஷ்ணர் – உலகத்தில் தர்மம் ஒரு பார்வை :-

என்ன நண்பர்களே எல்லோரும் குடியரசு தினத்தினை நன்றாக சந்தோஷமாக காலையில் :) கொடிஎற்றி (அவர் அவர் பில்டிங் இல் ) அல்லது தன்னுடைய மகன் , மகள்களுடன் அவர்களின் பள்ளிக்கூடம் சென்று நமது குழந்தைகளுடன் மற்ற குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கி ஜாலியா இருந்திங்களா இல்லை , என்னடா இந்த ஆண்டு குடியரசு தின பொது விடுமுறை போய்விட்டது என்று மனம் வருத்தப்பட்டு , குடும்பத்துடன் வார கடைசியான ஞாயிற்று கிழமையை தூங்கியே கழிதிர்களா ??? இல்லை கர்ணன் படம் (நல்ல பிரிண்ட் ) என்னை போல குடும்பத்துடன் பார்க்க , என் குழந்தைகளை போல் கிளைமாக்ஸ் வரும் போது அப்பா அப்பா என்று கதை கேட்டு ...... அட அட அதுல ஒரு சுகம் தான் ... நான் என்ன பழைய காலத்திற்கு சென்று விட்டு வந்தேன். அதன் பிரதிபலிப்பு இந்த கட்டுரை.

இந்தத் தொகுப்புக்களில் உள்ளவை பல்வேறு புத்தகங்களிலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும் கர்ணனைப் பற்றிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 

அன்றாட வாழ்வில் இன்றைக்கு இந்த உலகில் தர்மம் செத்துக்கொண்டே இருக்கிறது….நம் முன்னோர்கள் சொல்லி வைத்த தர்ம நெறிகள் யாவும்,இன்று கேலிக்குரியதாகிவிட்டது..நம் புராணக்கதை நாயகர்களான ராமர்,தர்மன்,கர்ணன்…இவர்களெல்லாம் இன்று ரசிக்க கூடிய அளவில் மட்டுமே உள்ளனர்..பின்பற்றக்கூடிய வகையில் இல்லை… தர்மரின் நிலையை சொன்னால் உங்களுக்கு புரியும்…

மஹாபாரத போர் சமயம், அபிமன்யு..சக்கரவீயுகத்தில் சிக்கி மாண்டு போனான்..அவனை கொன்ற ஜயத்ரதனை கொல்ல சபதம் எடுக்கிறான் அர்ஜூனன். பாண்டவர்களுக்கு சகோதரி கிடையாது…கெளரவர்களுக்கு ஒரு சகோதரி உண்டு…அவளை மணந்தவன் தான் ஜயத்ரதன். இவனை கொல்ல அர்ஜனன் சபதம் எடுத்தவுடன், தர்மரின் நிலை தர்ம சங்கடம்….

.இந்த தர்ம சங்கடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றால் தர்மமாகவும் இருக்க முடியாது அதர்மமாகவும் இருக்க முடியாது…நடுவில் மாட்டிக்கொள்வது…தர்மருக்கு அடிக்கடி இந்த சங்கடம் வந்தது…இதனால்தான் இந்நிலைக்கு தர்ம(ர்) சங்கடம் என்று பெயர் வந்தது…

தன் ஒரே தங்கையை விதவை ஆக்கக்கூடாது என்று நினைத்து தர்மர் கடோத்கஜன் மூலம் துரியோதனுக்கு இந்த சபதத்தை சொல்லி அனுப்பி,அவனை எப்படியாவது காப்பாற்ற சொல்லுவார்,ஏனெனில் தங்கையின் கணவன் என்பதால்…ஆனால் கடோத்கஜனோ…பெரியப்பா சொன்னதை சொல்லிவிட்டு,,பின்பு கூறினான்…நீங்கள் அவனை எங்கு ஒளித்து வைத்தாலும் உயிர் பிரிவது உறுதி என்று…
மேற்கூறிய செயல் அவரின் அப்பழுக்கற்ற தர்ம சிந்தனைக்கு ஒரு சான்று எனில்,

அதே யுத்த களம், துரோணாச்சாரியாரை வதம் செய்யும் நேரம்,, பரந்தாமன் தர்மரிடம்…தர்மா அஸ்வத்தாமன் இறந்தான் என்று சொல்லு…அப்படி சொன்னால், துரோணர் ஆயுதம் விடுப்பார்…த்ருஷ்ட்யுமன் அவரின் தலை கொய்வான் என்றார்.

தருமர்- கிருஷ்ணா பரந்தாமா நான் பொய் சொல்லமாட்டேன்

பரந்தாமன் – நீ பொய் சொல்லவேண்டாம்..அசுவத்தமா எனற யானை இறந்துவிட்டது என்று சொல்..மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.

தர்மரும் அஸ்வத்தமா அதகா (இறந்துவிட்டது) (யானை) குஞ்சரகா என்ற போது. பரந்தாமன் யானை என்று சொல்லும்போது சங்கை எடுத்து ஊதி அந்த வார்த்தை கேட்க முடியாது செய்துவிடுவார்…

சொன்னது தர்மர் என்பதால் துரோணரும் அதன் சத்தியத்தை உணர்ந்து,மகன் இறந்துவிட்டான்,,இனி ஏன் வாழ வேண்டும் என நினைத்து ஆயுதம் விடுத்தார்…த்ருஷ்ட்யுமன் அவரின் தேரில் ஏறி அவரின் தலையை கொய்துவிடுவான்.

ஆனால் தர்மர் அப்படி சொன்னவுடன் அவரின் தேர் நான்கு அங்குலம் தரையில் அமுங்கிவிடும்….பூமிக்கே அதிர்ச்சி ஆகிவிட்டது..தர்மனின் நிலையோ மிக மிக சங்கடமாகிவிட்டது…அஸ்வத்தாமனுக்கு தந்தையின் மரணத்தை விட, தர்மனின் இந்த செயல் மிகவும் பாதித்துவிட்டது.

பின்பு கர்ணன் மரணம் முடிந்து பத்னெட்டு நாள் போர் ஒய்ந்து,தர்மரும் ஆட்சியில் அமர்ந்தார்.

பரந்தாமன்..தர்மா அதுதான் ஆட்சியை கைப்பற்றி அரசனாகிவிட்டாயே ..ஏன் இன்னும் மனக்கலக்கத்தோடு தென்படுகிறாய்? என்ன காரணம்..?

தர்மன்..கிருஷ்ணா, நான் பொய் சொல்லிவிட்டேன் அல்லவா..என் தேர் நான்கு அங்குலம் இறங்கிவிட்டது அல்லவா?

பரந்தாமன்- நீ எங்கே பொய் சொன்னாய்..நான் சங்கை ஊதி அல்லவா அதை செய்தேன்..

தர்மர்-தேர் அமுங்கியது நான் பொய் சொன்னதால் அல்லவா?கிருஷ்ணா நீ நினைத்திருந்தால் என்னை பொய் சொல்லாது காத்திருக்கலாம் அல்லவா?ஏன் அப்படி செய்தாய் கிருஷ்ணா?

கிருஷ்ணர்- தர்மா..இந்த உலகில் எல்லாரும் தவறு செய்வார்கள்.ஆனால் பழியை என் மீது போட்டுவிடுவார்கள்…தவறு செய்து விட்டு "ஐயோ என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்"என்பார்கள்…நல்லது எது கெட்டது எது என அறுதியிட்டு பார்க்க உங்களுக்கு எல்லாம் நான் ஆறறிவை கொடுத்தும்,தவறு செய்வது எப்படி சரியாகும்.(இது கலிகால தர்மர்களுக்கு)
தர்மா நான் அஸ்வத்தாமா என்ற யானை இறந்துவிட்டது என்று சொல்ல சொல்லும்போது உனக்கு கண்டிப்பாக தெரியும்"நான் ஏதேனும் செய்து துரோணரை வீழ்த்த செய்யும் உபாய்ம் இது என்று" உனக்கு தெரியுமா தெரியாதா?

தெரியும் கிருஷ்ணா

தெரிந்தும் நீ ஏன் அப்படிச்சொன்னாய்

ஜெயிக்க வேண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது கிருஷ்ணா என்பதுதான் உண்மை..அதனால்தான் தெரிந்தே நான் அப்படி சொன்னேன்.

தெரிந்தே நீ அப்படி சொன்னதால்தான் தேர் அமுங்கியது தர்மா!. .உனக்கு பெய்ரும் கெடக்கூடாது..அதர்மமும் ஜெயிக்கபட வேண்டும் தர்மம் காக்கப்பட வேண்டும்…நீங்களும் அரசாள வேண்டும்…எல்லாம் நடக்க வேண்டும் என்றால் நான் இப்படி சில விஷய்ங்கள் செய்துதான் ஆகவேண்டும்.இப்படி எல்லாம் இருக்க,என்னை குறை கூறுவது என்ன நியாயம்?

நண்பர்களே, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தர்மனே அக்காலத்திலே பொய் சொல்லி இருக்கிறார். பதவி ஆசை என்பது எல்லா மனிதர்களுக்கும் உண்டு என்பதை சொல்லும் ஒரு நிகழ்வு…..

இன்றோ நம்மை ஆளும் ஆளுனர்கள் எவ்வளவு பொய் சொல்கிறார்கள், எவ்வளவு அதர்மம் செய்கிறார்கள் என்பதை தெரிந்தேதான் நாம் அவர்களை பதவியில் அமர்த்துகிறோம்.

உங்களுக்கு தெரியுமா ????தானத்தில் உயர்ந்த கர்ணனைப்பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம், படித்திருக்கலாம் இதோ ஒன்று:-

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன்.தானத்திற்கே பெயர்பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை.எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டு அலுத்து போனான். பிறகு சொர்க்கத்தின் தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை எனக்கு ஏன் இப்படி பசிக்கிறது என கேட்டான்.

அதற்கு சொர்க்கலோகத்தின் தலைவனோ கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாக கொடுத்து பெரும் புகழ்பெற்றவன். ஆனால் சிந்தித்து சொல் எப்பொழுதாவது யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறாயா என கேட்டான். கர்ணனும் அன்னதானம் செய்ததாக நினைவு இல்லை.

அன்னதானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்று பசி அடங்கவில்லையா? அப்படியானால் இதற்கு என்ன தான் வழி என கேட்டான். அதற்கு தலைவன் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து கொள் பசி அடங்கி விடும் என்றான். கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

விரலை சப்பினால் பசி அடங்குமா? என்ன இது என சந்தேகத்துடன் வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சப்பினான். இதனால் அவனது பசி உடனே அடங்கியது. ஒன்றும் புரியாத கர்ணன் இது எப்படி மாய மந்திரம் என கேட்க தலைவன் கூறினான்.

கர்ணா நீ பூவுலகில் வாழும்போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதான சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழிகாட்டினாய். அந்த புண்ணிய செயல் நற்செயல் உனக்கு இëப்பொழுது உதவுகிறது என கூறினான்.

இதன் மூலம் கர்ணன் மூலம் அன்னதான மகிமையை உணர்ந்தான். முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள், ஏழைகள். இவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கு மகிழ்ச்சியினையும் புண்ணியத்தையும் தரும். எனவே அளவற்ற புண்ணியம் தரும் அன்னதானம் செய்யுங்கள்.* 

இருப்பவர்கள் இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கல்வி அறிவு உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு அறிவைப் புகட்டுங்கள். செல்வத்தைப் பகிர்ந்து கொண்டதனால் கர்ணன் கொடையாளி ஆனான். வாழ்க்கையைப் பகிர்நதுகொண்ட காந்தி ஒப்புயர்வற்ற தலைவர் ஆனார்.

உயிருடன் இருக்கையில் எதையும் கொடாமல், இறந்த பின்னர் தானதர்மங்கள் செய்ய எற்பாடு செய்வதெல்லாம் சுயநலமாகும். கூடுமானவரை உலக வாழ்க்கையிலே தருமம் செய்யத் தொடங்கி விடுவதே நல்ல தர்மமாகும். 

உலகத்தில் தர்மம் இன்று தலைகாணாமல் போய் கொண்டே இருக்கிறது. நாமும் அதற்குக்காரணம்…முடிந்த வரை தர்ம சிந்தனையை வளர்போம்..நமது அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்போம்.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator