Wednesday, 29 January 2014

நாட்டு பசுவும் ஆன்மீகமும்

நாட்டு பசுவும் ஆன்மீகமும்
=====================

நாம் கோவிலில் இறைவனுக்கு பயன்படுத்தும் பால், தயிர், நெய் விளக்கு போன்றவற்றிற்கு நாட்டு பசுவின் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். சீமை மாட்டு பொருட்களை பயன்படுத்துவது மிகப்பெரிய பாவமாகும். அதேபோல கும்பாபிசேகம், கோபூஜை, கிரகபிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நாட்டு பசுவையே பயன்படுத்த வேண்டும். செமை பன்றிகளை வணங்குவது அர்த்தமற்றது மாற்றமின்றி பாவமும் கூட.

நாட்டு பசுவின் உடலில் 33 கோடி தேவர்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளனர்.

1. பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
2. கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய 
தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
3. சிரம் - சிவபெருமான்
4. நெற்றி நடுவில் - சிவசக்தி
5. மூக்கு நுனியில் - குமரக் கடவுள்
6. மூக்கினுள் - வித்தியாதரர்
7. இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
8. இரு கண்கள் - சந்திரர், சூரியர்
9. பற்கள் - வாயு தேவர்
10. ஒளியுள்ள நாவில் - வருண பகவான்
11. ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்
12. மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்
13. உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்
14. கழுத்தில் - இந்திரன்
15. முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்
16. மார்பில் - சாத்திய தேவர்கள்
17. நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு
18. முழந்தாள்களில் - மருத்துவர்
19. குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்
20. குளம்பின் நடுவில் - கந்தவர்கள்
21. குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்
22. முதுகில் - உருத்திரர்
23. சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்
24. அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்
25. யோனியில் - ஏழு மாதர்கள்
26. குதத்தில் - இலக்குமி தேவி
27. வாயில் - சர்ப்பரசர்கள்
28. வாலின் முடியில் - ஆத்திகன்
29. மூத்திரத்தில் - ஆகாய கங்கை
30. சாணத்தில் - யமுனை நதி
31. ரோமங்களில் - மகாமுனிவர்கள்
32. வயிற்றில் - பூமாதேவி
33. மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்
34. சடாத்களியில் - காருக பத்தியம்
35. இதயத்தில் - ஆசுவனீயம்
36. முகத்தில் - தட்சிணாக்கினி
37. எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்
38. எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய 
மாதர்கள் வாழ்கிறார்கள்.

காமதேனு அனைத்தையும் தரவல்ல-படைக்கவல்ல தெய்வமாகும். பல தலைமுறைகளாக தீராத கொடும பாவங்களும்கூட கோசேவை, கோதானம் போன்றவற்றால் நிச்சயம் தீரும் என்பது வேத சாஸ்திரங்களில் உள்ள வாக்கு.

நம் நாட்டை பொருத்தவரை வரலாறு ஆன்மிகம் பசு மூன்றும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாததாகும். பசு ஒரு நாட்டின் தலையாய செல்வமாகும். பெண்ணும் மாடும் ஒரு நாட்டில் இருந்து வேறு நாட்டிற்கு போக அனுமதியில்லை. படையெடுத்து வந்தால் செல்வங்களோடு பசுக்களைத்தான் முதலில் ஒட்டி செல்வர். இதையே நிறை கவர்தல்-நிறை மீட்டல் என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது.

கோவில்கள்-கோ+இல், பசு இருக்கும் இடம். 'ஆ'லயம் - பசு தன்னை மறந்து லயித்து நிற்கும் இடம். எனவே கோவில் என்பது எங்கு இருக்க வேண்டும் என்று இறைசக்தியை கண்டுணர்ந்து உணர்த்தும் ஆற்றல நாட்டு பசுவுக்கே உண்டு. கோவில் தூபஸ்தம்பங்களில் பசு லிங்கத்திற்கு பால் சுரக்கும் சிற்பத்தின் உள் அர்த்தம் இதுவே.

ஸ்ரீ கிருஷ்ணர் – ராதாதேவியும் கிருஷ்ணா பரமாத்மாவும் கோலோகத்தில் இருந்து தவறாது கோபூஜை செய்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் கோபூஜையின் பலனாக கோகுலம் சுபிட்சமடைந்தது.

பழனி முருகன் – ஞானப்பழத்தின் பொருட்டு பெற்றோரிடம் கோபித்து வந்த முருகன் பழனியில் பசுபராமரிப்பில் தான் ஈடுபட்டார். அதுவே திரு'ஆ'வினன்குடி. 

பஞ்சாமிர்தம் என்பது இன்று கடைகளில் விற்பது போல வாழைப்பழம் உள்ளிட்டவை கொண்டு செய்வதல்ல. பால், தயிர், நெய், பனங்கல்கண்டு, தேன் முதலான ஐந்து பொருட்கள் சமமான அளவு கொண்டு செய்யப்படுவதே. அளவில்லா மருத்துவ பலன் கொண்டது.

சண்டிகேஸ்வரர் – சிவாலயங்களில் இருக்கும் சண்டிகேஸ்வரர் கோசேவையுடன் சிவபூஜை செய்து வந்ததால் சிவபெருமானின் முதல் பக்தனாக இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்..

திலீப ராஜா – ஸ்ரீராமரின் முன்னோரான திலீப ராஜா, காமதேனுவை வணங்காது சென்ற பாவத்தால் புத்திர பேறு இல்லாமல் போனது. அதனால் குலகுருவின் ஆலோசனை படி காமதேனுவின் மகளான நந்தினி பசுவின் பராமரிப்பில் ஈடுபட்டார். அதனை சிங்கத்திடம் இருந்து காக்கும் பொருட்டு உயிரை விட துணிந்தமையால் நந்தினி பசு ஆசிர்வதித்தது. அதனால் வம்சம் தழைக்க சிறந்த புத்திரனை பெற்றார்.

குப்பண்ண பரதேசியார் – திருச்செங்கோடு மலையில் வாழ்ந்தவர். இறைப்பணியோடு கோசேவையும் செய்து வந்ததால் இறைசக்தி சித்திக்க பெற்றார். இன்றும் இவர் மடம் மலையில் உண்டு.















                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator