"வெண் பொங்கல்"
பொங்கல் செய்முறை...
..3/4 கப் அரிசி , 1/4 கப் பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேஸாக வறுத்துக்கோ..
குக்கரில் 4 கப் தண்ணிர் வைத்து, அது கொதித்ததும் அரிசி, பருப்பு கலவையை களைந்து போட்டு மூடி 4 அல்லது 5 சத்தம் விட்டு அணைத்து விடு... ஒரு துண்டு இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளு... முந்திரிப் பருப்பை துண்டாக்கு..
.1/2 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம் எடுத்துக்கோ...
.1/4 ஸ்பூன் மிளகைப் பொடி செய்துகொள்...
.6 டீஸ்பூன் நெய்யில் இஞ்சி வதக்கி, முந்திரி வறுத்து வடித்த பொங்கலில் கொட்டு.... மேலும் 2 ஸ்பூன் நெய்யில் மிளகு, சீரகம், மிளகுப்பொடி போட்டு பொரிந்ததும் அதையும் பொங்கலில் கொட்டு...
தேவையான உப்பு சேர்த்து கேஸில் வைத்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்கு....,
சட்னியுடன் சாப்பிட்டு எப்படி இருந்ததுனு சொல்லு... வேண்டுமானால் நெய் அதிகம் சேர்த்துக்கோ (பின் குறிப்பு)
முந்திரியைத் தவிர, முழுமிளகு,ஜீரகம்,கறிவேப்பில்லை, இஞ்சியை நெய்யில் வதக்கி சாதம்பருப்புடன் இதைப்போட்டு, குக்கரில் வேகவைக்கணும். பொங்கல் ரெடி,.இறக்கின்ற நேரத்தில் முந்திரிப்பருப்பு சேர்க்கவும். இது தான் ஹோட்டல் டெக்னிக்!!!!!! |
No comments:
Post a Comment