"ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் விரும்பி சாப்பிட்ட கும்பகோணம் கடப்பாவின் மற்றொரு ரெசிபி."
"கும்பகோணம் கடப்பா [5 பேருக்கு]"
எதேச்சையாக 4-7-99 கதிர் ஒரு பக்கம் எனக்கு கிடைத்தது.கட்டுரையாளர் பேர் இல்லை ஆனால் தமிழ்நாட்டின் பெரிய சமையல்காரர்.
ஒரு தடவை குருஜி [ஹரிதாஸ்கிரி] அவரது குருநாதர் ஞானானந்த ஸ்வாமிகளின் ஆராதனையை நடத்த நினைத்தார்.அவரது கட்டளையை ஏற்று ஆராதனைக்கு தர்மப்ரகாஷ் முதலாளி, இடம் மற்றும் சகல வசதிகளையும் செய்து தந்தார்.
சுமார் 3000 பேர் சாப்பிட்ட ஆராதனைக்கு நான்தான் சமையல் ரவா சொஜ்ஜியும்,வெண் பொங்கலும் செய்தேன். இந்த ஐட்டங்களுடனே வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ரவாதோசையும் அதற்கு தொட்டுக் கொள்ள கும்பகோணம் கடப்பாவும் செய்தேன். இந்தக் கடப்பா குருஜிக்கு மிகவும் பிடித்தமானது.
இது இட்லி,தோசை,ரவா தோசை,ஊத்தப்பம்,பூரி,வடை போன்றவற்றுக்குப் பக்க மேளமாக அமையும்.
செய்முறை+தேவையான பொருள்கள். உருளைக்கிழங்கு-300 கிரம் பெரிய வெங்காயம்-அரை கிலோ தக்காளி-100 கிராம் பூண்டு-பெரியதாக-1 தேங்காய்-ஒரு மூடி பச்சைமிளகாய்-7 இஞ்சி-சிறிய துண்டு உப்பு-தேவையான அளவு மஞ்சள் பொடி-அரை டீஸ்பூன் எலுமிச்சம்பழம்-1 முந்திரி-50 கிராம் எண்ணெய்-150 கிராம் பயத்தம் பருப்பு-50 கிராம். கசகசா,சோம்பு-தலா 1 டீஸ்பூன்
பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை நன்றாக வேகவைத்துப் பொடியாக உடைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு,சோம்பு,கசகசா, பச்சை மிளகாய்,இஞ்சி,தேங்காய்த் துருவல் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்லவும்.பாத்திரத்தில் எண்ணெய் வைத்து அடுப்பில் ஏற்றி காய்ந்தவுடன் வெட்டிய வெங்காயத்தை அதில் நன்றாக வதக்கிக்.கொண்டு மிக்ஸியில் அரைத்த மசாலாக் கலவையை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி சேர்த்து நன்றாக வெந்தவுடன் வேக வைத்து உடைத்த உருளைக் கிழங்கையும் வெந்த பயத்தம் பருப்பையும் அதில் சேர்த்துக் கூட்டு மாதிரி பதம் வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சம் பழம் பிழியவும்.இதில் முந்திரையை வறுத்துப் போட்டுக் கலந்து சாப்பிடவும்.
தட்டச்சு;வரகூரான் நாராயணன், |
No comments:
Post a Comment