நமஸ்காரம் ஒரு விளக்கம்
நமஸ்காரம்
நமஸ்காரம் எனும் சொல்லுக்கு வணக்கம் செலுத்துகின்றேன் என்று பொருள்.
வணக்கம் செலுத்துதல் மிக நாகரீகமான மரபு.
மாதா எனும் அன்னைக்கும், பிதா எனும் தந்தைக்கும் தினமும் பாத பூஜை செய்பவருக்கும், பாதத்தைத் தொட்டு வணங்குபவருக்கும் ஏழேழு ஜன்மங்களிலும் செய்த பாவம் தொலையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
பாதத்தைத் தொட்டு வணங்குதலுக்கு உரியவர்கள் பெற்றவர்களே.
வித்யை எனும் கல்வியை வழங்கும் குருவுக்கு வணக்கம்
செலுத்துவது இரு கைகளையும் நெற்றிக்கு நேராக கூப்பிய வண்ணம் செய்வது குருவருளை பெறத்தக்கது.
தெய்வங்களை வணங்குவது இரு கைகளையும் மேலே தூக்கி அஞ்சலி செய்வது தெய்வப்பலன்களைப் பெறக்கூடியது.
இரு கைகளையும் தூக்கி வணக்கம் செய்வது சரணாகதி தெய்வமே கதி என்பதைக் காட்டுகின்றது.
சக மனிதர்களுக்கும், இதயத்துக்கு இதமான நண்பர்களுக்கும் வணக்கம் செலுத்துவது இரு கைகளையும் இருதயத்துக்கு நேராக கூப்புவது நலம் பயக்கும்.
மரியாதைக்கு உரியவர்களை, நம் முகத்துக்கு நேராக இரு கைகளையும் கூப்பிச் செய்வது நல் அபிப்ராயத்தைப் பெற உதவும்.
வணக்கம் என்பது இணக்கம் ஏற்படுத்தக் கூடியது. நல்ல மதிப்பைப் பெறக் கூடியது.
வணக்கம் சொல்லி எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிப்பது வெற்றியாக முடியும்.
பிரச்னைகளுக்குரிய இடத்தில் கூட, விரோதியாக இருப்பவருக்குக் கூட வணக்கம் செலுத்துவது சுணக்கத்தை நீக்கி இணக்கத்தைத் தரக்கூடியது.
நமஸ்கரிக்கும் வழக்கம் தொன்று தொட்டு வரக்கூடியது.
வேத காலத்திலிருந்தே நமஸ்கரிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.
நான்கு வேதங்களில் இரண்டாவதாக இருக்கும், யஜுர் வேதத்தின் இருதயம் போன்று இருக்கும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
அந்த ஸ்ரீ ருத்ர மந்திரத்தின் சிறப்பு பகுதியாக விளங்குவது ருத்ரனை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்த நமகம் பகுதி.
"ருத்ராயா ததாவினே க்ஷேத்ராணாம் பதயே நமோ நமோ" (துன்பங்களைத் துடைப்பவரும், உலகைப் படைத்துக் காப்பவரும் ஆகிய ருத்ரனாகிய பரமேஸ்வரனுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்).
நமகம் எனும் மந்திரத்தை உள்ளடக்கிய ஸ்ரீ ருத்ரத்தைச் சொல்வதும், கேட்பதும் பரமேஸ்வரனையே ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து நமஸ்கரித்தலுக்கான பலன் கிடைக்கும்.
ஸ்ரீ ருத்ர மந்திரங்களால் மகேஸ்வரனை மானசீகமாக நமஸ்கரிப்பது மகத்தான பலனைத் தரக்கூடியது.
சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், நின்ற திருத்தாண்டகம் எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.
நின்ற திருத்தாண்டகம் பாடும்போதும், கேட்கும்போதும் சிவனை நமஸ்கரிப்பது சிறந்த பலனைத் தரக்கூடியது.
"மாதா பிதாவாகி மக்களாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்கோதா விரியாய்க் குமரி யாகிக்கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்போதாய மலர்கொண்டு போற்றி நின்றுபுனைவார் பிறப்பறுக்கும் புனித னாகியாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகிஅழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே." (நின்ற திருத்தாண்டகம்)
தெய்வங்களை வணங்கும் வகைகள் பற்றி சாஸ்திரங்கள் கூறுவதைப் பார்ப்போம்.
தெய்வ ஸன்னிதானத்திலுள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு, ஆலயத்தில் கொடிமரம் இருந்தால் தெய்வத்திற்கும் கொடிமரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இல்லாமல், கொடிமரத்திற்குப் பின்னே நமஸ்கரிக்க வேண்டும்.
கொடிமரத்திற்கும் தெய்வ ஸன்னிதானத்திற்கும் இடையில் நமஸ்கரிக்கக் கூடாது.
முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.
அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி,
வலது கையை முதலில் தலைக்கு நேரே தூக்கி பிறகு இடது கையை தலைக்கு நேரே தூக்கி அஞ்சலி (கூப்பிய கரம்) செய்யவேண்டும்.
முகத்தை நேராக தரையில் கொண்டு வந்து நெற்றியைத் தரையில் படச் செய்து, முன்னர் செய்தது போல வலக்கையை இடுப்புக்கு நேரே கொண்டுவந்து, வலது புஜம் எனும் வலது தோள் தரையில் படச்செய்து,
பிறகு இடது கையை இடுப்புக்குக் கொண்டு வந்து,
இடது தோளைத் தரையில் படச்செய்ய வேண்டும்.
பின்னர், முதலில் வலது காதையும் பிறகு இடது காதையும் தரையில் படச்செய்ய வேண்டும். பின்னர் மோவாய் தரையில் பட வேண்டும்.
இதுவே ஸாஷ்டாங்க (எட்டு அங்கங்களும் – எட்டு உறுப்புகளும் தரையில்படக்கூடிய) நமஸ்காரம் எனப்படும்.
இறைவன் படைத்த உடல் இறைவனுக்கே அர்ப்பணம் எனும் செயலைக் காட்டுவதே அஷ்டாங்க (8 உடல் உறுப்புகள்) நமஸ்காரம்.
இந்த நமஸ்காரம் தெய்வீகப் பலனை வாரி வழங்கக் கூடியது.
பெண்கள் செய்யக் கூடியது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.
பெண்கள் முதலில் இரண்டு முழங்கால்களைத் தரையில் பொருந்தச் செய்து, முதுகை வளைத்து, பின் இரண்டு கைகளையும் கூப்பியவாறு தரையில் படச் செய்து, பின் நெற்றியினை தரையில் படச் செய்ய வேண்டும்.
இதுவே ஐந்து உடல் உறுப்புகள் தரையில் படச்செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.
பெண்களுக்கு நல்வாழ்க்கையும், சுமங்கலிகளுக்கு நீடித்த மணவாழ்க்கையையும் அருளுவது பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.
பெண்களின் திருமாங்கல்யம் எந்நிலையிலும் தரையில் படக்கூடாது.
அங்கப்ரதஷ்ணம் :
தெய்வங்களுக்கு அங்க பிரதஷ்ணம் செய்வது என்பது ஒரு விசேஷ வழிபாடு.
உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படும்படி நமஸ்கரித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது பெரும் புண்யங்களைத் தரக்கூடியது.
பக்தர்கள், பெரியோர்கள், தவசீலர்கள் வலம் வந்த பாதையில் அவர்களின் பாதங்கள் பட்ட இடங்களையும் நமஸ்கரிப்பதால், அடியவர்க்கும் அடியவராக விளங்கக்கூடிய பெருமானின் பூரண அருளைத் தரக் கூடியது.
'நான்' என்ற அகந்தையை நீக்கக் கூடியது.
இறைவன் ஒருவனைத் தவிர வேறு கதியில்லை என்ற செயலைக் காட்டுவது அங்க பிரதஷ்ணம் ஆகும்.
யாரை நமஸ்கரிக்கக் கூடாது ?
இறைவனை எண்ணிக்கொண்டு ஜெபம் செய்து கொண்டிருப்பவரையும், தானம் செய்து கொண்டிருப்பவரையும், தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருப்பவரையும், யாகங்கள் செய்து கொண்டிருப்பவரையும், தர்ப்பணம் செய்து கொண்டிருப்பவரையும், சிரார்த்தம் செய்பவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.
பெரும் புண்ணியம் நல்கும் நமஸ்காரம்
பெரும் தவசீலர்கள் உள்ள சபையிலும், தெய்வங்கள் உறைந்திருக்கும் யாகசாலையிலும், ஆலயங்களிலும், புண்ணிய தீர்த்தங்களை நோக்கியும், வேத கோஷம் முழங்கும் இடங்களிலும் செய்யக் கூடிய பிரத்யேக நமஸ்காரங்கள் பலமடங்கு புண்ணியங்களைத் தரக்கூடியது.
நமஸ்கரிக்கும் திசை :
நமஸ்கரிக்கும் போது நமது தலை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ அமையவேண்டும்.
தெற்கு நோக்கி நமஸ்கரித்தல் கூடாது.
புண்ணியங்கள் தரும் நமஸ்காரம் பற்றி அறிந்தோம்.
பெரும் புண்யத்தையும் தேக ஆரோக்கியத்தையும் நல்கக் கூடியது "சூர்ய நமஸ்காரம்" ஆகும்.
சூர்ய நமஸ்காரமும் வேத காலத்திய பழமை வாய்ந்தது.
சூர்ய நமஸ்காரம் பற்றி யோக சாஸ்திரங்கள் பல்வேறு விதமானப் புகழாரங்களைக் கூறுகின்றன.
வைதீக சம்பிரதாயங்களில் சூர்ய நமஸ்காரம் பிரதான இடம் பெறுகின்றது.
வேதங்கள் போற்றும் வேதநாயகர் சூர்யபகவான். "நமஸ்கார ப்ரியோ பானு:" என்ற சொல்வழக்கப் படி, உலகை ஜீவிக்கக் கூடிய உலக நாயகனாகிய சூர்ய பகவானை வேத மந்திரங்கள் (அருண ப்ரச்னம்) சொல்லி வணங்குவது நல் தேக ஆரோக்கியத்தையும், தெளிவான கண் பார்வையையும், நீடித்த ஆயுளையும், நல்லறிவையும் நல்கக் கூடியது.
சூர்ய பகவான் ஸஹஸ்ர வியாகரண பண்டிதர் என்றும் அனைத்துக் கலைகளுக்கும் நாயகன் என்றும் லோக குரு என்றும் பத்ம புராணம் கூறுகின்றது.
கண்கண்ட தெய்வமான, லோக குருவான சூர்ய பகவானிடம் பாடம் கற்க விருப்பம் தெரிவிக்கின்றார் ஹனுமன்.
சூர்ய பகவான் தன்னால் ஒரு இடத்தில் நின்று பாடம் சொல்லித் தர இயலாது என்கின்றார்.
அதற்கு ஹனுமன் சூர்யன் சுற்றி வரும் பாதையிலேயே, அவரை நோக்கிய வண்ணம் பின்புறம் நடந்துகொண்டே, கைகள் கூப்பிய வண்ணம் பாடம் கற்கின்றார்.
அவரை "நவ வியாகரண பண்டிதர்" என்று புராணங்கள் புகழும். சூர்யனிடம் பாடம் கற்றதால் பெரும் அறிவாளியாகின்றார், ஆகையால் அவர் சொல்லின்செல்வர் என்று புகழப்படுகின்றார்.
சாக்த வழிபாடு என்பது சக்தியை அம்பிகையை வழிபடுவது. இந்த சாக்த வழிபாட்டின் உச்ச நிலை வழிபாடாகிய ஸ்ரீ துர்கா ஸப்தசதீ (சண்டி ஹோமத்தின் போது சொல்லப்படக் கூடிய எழுநூறு ஸ்லோகங்கள்) எனும் ஸ்லோகங்கள் அம்பிகையின் அருட்கடாட்சத்தை அருளக்கூடியது.
பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட துர்கா ஸப்தசதீயின் ஐந்தாவது அத்தியாயம் மிக முக்கியம் வாய்ந்தது.
அருட்செயல்கள் புரிந்த தேவியை நமஸ்கரிக்கும் விதமாக அமைந்தது ஐந்தாவது அத்தியாயம் . "யா தேவி ஸர்வபூதேஷ¤ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: (அனைத்துலகையும் ஈன்று எடுத்த அன்னை வடிவாகிய அம்பிகைக்கு வணக்கம். மீண்டும் வணக்கம். என்றென்றும் வணக்கம்)
இந்த அத்தியாயத்தில் வரும் மற்ற ஸ்லோகங்களிலும் வரும் "நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: " என்று சொல்லும்போதெல்லாம் அம்பிகையை நமஸ்கரிப்பது, வாழ்வில் ஏற்படக் கூடிய துன்பங்கள் அனைத்து அகற்றி, அளவற்ற அருளை பெறக் கூடியது.
நமஸ்காரங்கள் செய்து நமஸ்கரிப்பதால் ஏற்படும் நற்பலன்களைப் பெறுவோம்.

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment