பெரியவாளின் மஹா கருணை |
தினமும் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படும் ஒரு பரம ஏழை. பெரியவாளுடைய மஹா மஹா மஹத்துவமோ, அந்த எளிய உருவத்தின் கருணையோ எதுவுமே அவருக்குத் தெரியாது. ஆனால் பெரியவா இருந்த முகாமுக்கு தினமும் இரண்டு வேளையும் வந்துவிடுவார். காரணம்? அன்னபூரணி இருக்கும் இடத்தில், அன்னத்துக்குக் குறைவேது?
வயிறார சாப்பிட்டுவிட்டுப் போவார். பெரியவா அந்த கிராமத்தை விட்டுக் கிளம்பியதும், பழையபடி பசி, பசி, பசி! குடும்பத்தில் நான்கைந்து உருப்படிகள்! என்ன செய்வது? பேசாமல் தற்கொலை பண்ணிக் கொண்டுவிடலாம் என்று முடிவு பண்ணினார். ஒரு கஷ்டத்திலிருந்து தப்பிக்க அதைவிடப் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொள்ளப்போவதை இம்மாதிரி தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் அறிவதில்லை.
சந்திரமௌலீஸ்வரர் ப்ரஸாதத்தை கொஞ்ச நாள் சாப்பிட்டிருக்கிறார் இல்லையா? எனவே, சாவதற்கு முன் பெரியவாளை சென்று ஒரு முறை தர்சனம் பண்ணிவிட்டு, அப்புறம் சாகலாம் என்று எண்ணி காஞ்சிபுரம் வந்தார். பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, எதுவும் பேசாமல் நின்றார்.
"ஒன்னோட அடுத்த ப்ரோக்ராம் என்ன?..." பெரியவாளின் திருவாக்கிலிருந்து 'டமால்' என்று வந்து விழுந்தது!
ப்ரோக்ராமா? வாழ்க்கையோட விளிம்பில் நின்று கொண்டிருக்கும் அந்த ஏழை என்ன பதில் சொல்லுவார்? 'தற்கொலை பண்ணிக் கொள்ளப் போகிறேன்' என்று அந்த தெய்வத்திடம் சொல்ல முடியுமா?
மனஸ் முழுக்க துக்கம்; அது தொண்டையை வேறு அடைத்துக் கொண்டது. கண்களிலிருந்து கண்ணீர் நதியாக பெருக்கெடுத்து, இதோ கருணைக்கடல்! போய்ச் சேருவோம்!...என்று வெளியே வழிந்தோடியது.
"என்ன செய்யறதுன்னே தெரியலே ஸாமி...எங்க ஊருக்குத்தான் போகணும்" கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
அது நின்றால்தானே!
"நான் ஒனக்கு பஸ் சார்ஜ் தரேன்...இப்டியே ஒன்னோட ஊருக்குப் போகாதே! என்ன பண்ணு...நேரா இங்கேர்ந்து மெட்ராஸ் போயி.....பாரீஸ் கார்னர்ல எறங்கி, அங்கேர்ந்து மறுபடியும் பஸ் பிடிச்சு, ஒன்னோட ஊருக்குப் போ!..." என்று அந்த மனிதர் சுத்தமாகப் புரிந்து கொள்ளவே முடியாத ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, கையில் ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.
மடத்திலிருந்து மெட்ராஸுக்குப் போக பஸ் சார்ஜ் தரப்பட்டது. அங்கிருந்தவர்களிடம் குழம்பிய முகத்தோடு, "வேலூர் பக்கம் எங்க கிராமம்... இங்கேருந்து நேராப் போனா, செலவும் கம்மி. ஸாமி ஏன் மெட்ராஸ் போயி அப்புறம் எங்கூருக்கு போகச் சொல்லறாருன்னு புரியலே!" என்று புலம்பிக் கொண்டே சென்றார்.
பெரியவா சொன்னபடி பாரீஸ் கார்னரில் இறங்கிக் கொண்டு, தன்னுடைய கிராமத்துக்கான பஸ்ஸை தேடிக் கொண்டிருந்தார்......
"என்னப்பா இவ்வளவு தூரம்? எங்க வந்தே? பாத்து எத்தனை வருஷமாச்சு!...." என்று வாஞ்சையும், நட்பும் ஒருசேர ஒரு குரல் அவருக்குப் பின்னாலிருந்து கேட்டது; தோளைச் சுற்றி அணைப்பாக ஒரு கரமும் விழுந்தது. திரும்பிப் பார்த்தால்.....பெரியவா அனுப்பிய தூதர் போல் இவருடைய பால்ய நண்பர் நின்று கொண்டிருந்தார்!
இவருடைய வாடிய முகத்தைப் பார்த்ததும் "வாப்பா! மொதல்ல சாப்பிடலாம். எனக்கும் பசிக்குது" என்று ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போய் வயிறார வேண்டியதை வாங்கிக் கொடுத்து பசியாற்றினார்.
"இப்போ சொல்லு. எங்க இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? எத்தனை கொழந்தைங்க?..." கேட்டதுதான் தாமதம்! பெரியவாளின் இந்த மஹா கருணையை எண்ணி எண்ணி உள்ளே பொங்கிக் கொண்டு வந்த அழுகை, தன் பால்ய நண்பன் அன்போடு வரிசையாகக் கேட்ட கேள்வியால், வெடித்துச் சிதறியது! தன்னுடைய அவல நிலையைக் கொட்டித் தீர்த்துவிட்டார்! தற்கொலை எண்ணம் உட்பட.
"இதுக்கெல்லாம் மனசு ஒடிஞ்சு போகலாமா? கவலையை விடு. ஒனக்கு வேண்டிய ஒதவிய நான் பண்ணறேன்! சின்னச்சிறு புள்ளைங்களைத் தவிக்க விட்டுட்டு, தற்கொலை அது இதுன்னெல்லாம் நெனைச்சுக் கூடப் பாக்காதே! ஒன்னோட எல்லாக் கடனையும் நான் அடைக்கறேன்! எங்கூடவே வேலை செய்யி...என்ன? புரியுதா?..." தன்னை மறுபடி அணைத்துக் கொண்ட நண்பனில் "காஞ்சி சாமி"யைத்தான் கண்டார்.
25 வருஷத்துக்குப்பின் தன் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது வாசலில் ரதயாத்திரையாக வந்த பெரியவா விக்ரஹத்துக்குத் தன் கண்ணீரைக் காணிக்கையாக செலுத்தினார்.
"25 வருஷத்துக்குப்பின் தன் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது வாசலில் ரதயாத்திரையாக வந்த பெரியவா விக்ரஹத்துக்குத் தன் கண்ணீரைக் காணிக்கையாக செலுத்தினார்." This is highlight, great experience.
Jaya Jaya Shankara! Hara Hara Shankara!
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment