Sunday, 2 November 2014

இப்படியும் கீரையைச் சமைக்கலாம்! By கீதா ஹரிஹரன், கொச்சின்.

இப்படியும் கீரையைச் சமைக்கலாம்!
By கீதா ஹரிஹரன், கொச்சின்.

* முளைக் கீரையை உப்புப்போட்டு வேகவைத்து தேங்காய், பச்சைமிளகாய் அரைத்துக் கலந்து இரண்டு கரண்டி புளிக்காத தயிர்விட்டு, கடுகு தாளித்தால் கீரைப் பச்சடி தயார். இது மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

* கறிவேப்பிலைத் துவையலுக்கு உளுத்தம் பருப்புக்குப் பதிலாக நிலக்கடலையை வறுத்துப் போட்டால் சுவையாக இருக்கும்.

* கீரைத்தண்டுகள் மிச்சம் வந்துவிட்டதா? அதைத் கொண்டு சுவையான காய்கறி சூப் தயாரிக்கலாம்.

* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிதளவு வெல்லத்தூள் சேர்த்தால் கசப்பு தெரியாது. சுவையும் கூடும்.

* பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை உப்பு சேர்த்து அரைத்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* பாகற்காய் பொரியல் செய்யும்போது முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி, பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டுப் பாருங்கள். சிறிது கூட கசக்காது. கீரையும், பாகற்காயும் சேர்ந்து நல்ல மணமாகவும் இருக்கும்.

* கீரைவகைகளை வதக்குவதை விட கூட்டாக சமைப்பதில் வைட்டமின் சத்துக்கள் வீணாவதில்லை.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator