பழந்தமிழன்_கண்ட_காலக்கணக்கு..!
மனிதன் சிறிய ஜீவன் என்றாலும் அந்த ஜீவனுக்குள்ளளேயே பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் அடங்கயுள்ளன என்று கண்டவன் சித்தன்.
அப்படியிருக்கும்போது மனிதனையே வைத்துக் காலத்தைக் கணக்கிட முடியும் என்று உணர்ந்தார்கள்.
எங்கோ ஒரு மூலையிலே வெட்டவெளியிலே இருந்து பாதாளம் வரை ஒரு நூல் ஏணி தொங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அந்த நூல் ஏணிக்கு இடையிலே இருக்கின்ற மனிதன் அந்த நூலேணியில் பயணம் செய்தால் அதனுடைய நுனியையும் அடைய முடியும், முடிவையும் அடைய முடியும் அல்லவா?
அதேபோல பிரபஞ்ச படைப்பான மனிதனை வைத்தே காலத்தை கணக்கிட முடியும் என்று கண்டு பிடித்தவர்கள் சித்தர்கள்.
காலக்_கணக்கீடு
60நாழிகை கொண்டது1நாள்.
2, 10,000நொடி கொண்டது1நாள்.
1நாழிகை மனிதன் விடும் மூச்சு 360.
60நாழிகை,அதாவது1நாளைக்கு21,600மூச்சு.
நொடிகள் 60 கொண்டது1விநாடி.
60விநாடி கொண்டது1நாழிகை.
60நாழிகை கொண்டது1நாள்.,
360நாள் கொண்டது1வருடம்.
21,600நாழிகை கொண்டது1வருடம்.
மனிதனுடைய சராசரி ஆயுள் 100 வருடம் என்று கணக்கிட்டு 80வயது, 60வயது,40வயது,20வயது என்று குறைத்து வருகின்ற ஆயுளின் கணக்கை அடிப்படையாக வைத்து பூமியின் காலக் கணக்கீடு செய்யப்பட்டது.
மனிதனுடைய1நாழிகை என்பது பூமிக்கு1வருடம்.
21,600நாழிகைக்கு பூமிக்கு100வருட ஆயுட்காலக் கணக்கு 21,600×100=21,60,000வருடம்,
திரேதா யுகம் 21,600×80=17, 28,000வருடம்.
கிரேதா யுகம் 21,600×60=12, 96,000வருடம்
துவாபர யுகம் 21,600×40=8,64,000வருடம்
கலி யுகம்21,600×20= 4,32, 000வருடம்
ஒவ்வொரு யுகமும் 4,33,000வருட காலம். நடைபெறுகிறது.
இப்படியாக தற்போது கடைசி யுகமாகிய கலியுகம் நடந்து கொண்டிருகின்றது. |
No comments:
Post a Comment