பெற்றோர்களுக்கு – குறிப்பாக தந்தைமார்களுக்கு நாம் சொல்வது இது தான்:
"நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்வது ஒன்றும் சரியான கருத்தாக இருக்க முடியாது.
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து பல் வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு, பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து பல தரப்பு மக்களையும் சந்தித்து உதவி கேட்டு, மூட்டை தூக்கி, பல இரவுகள் கண் விழித்து காத்திருந்து, பதற்றம், பயம், சோகம், மன அழுத்தம் போன்ற மன உளைச்சல்களுக்கு ஆளாகி, வெற்றியை சந்திப்பதற்கு முன் பல தோல்விகளை சந்தித்து, ……. ஒரு கட்டத்தில் தோல்விகள் அதன் மூலம் நீங்கள் அடைந்த அனுபவம் உங்களைக் கைத்தூக்கி விட நீங்கள் இப்போது சற்றே ஆசுவாசபடுத்திக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்த பிறகு… என்ன சொல்கிறீர்கள்?
"அப்பப்பா! நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது!"
இது உங்கள் குழந்தைகளைப் "பறக்க" விடாமல் தடுப்பதற்கு நீங்கள் செய்கின்ற முதல் தவறு! மகா தவறு!
கதை ஒன்று சொல்வார்கள்: வண்ணத்துப்பூச்சி ஒன்று அது பறந்து திரிவதற்கு முன் அது தனது கூட்டுக்குள் (cocoon) இருந்து வெளியே வர படு முயற்சி செய்து கொண்டிருந்ததாம். இதைக் கவனித்த சிறுவன் ஒருவன் அதன் மீது இரக்கப்பட்டு அந்தக் கூட்டை ஒரு கத்தரிக்கோலால் உடைத்து விட்டானாம். அவன் எதிர்பார்த்தது அந்த வண்ணத்துப்பூச்சி பறக்கும் என்று!
ஆனால் அதனால் பறக்க முடியவில்லையாமல் கீழே விழுந்து அப்படியே செத்துப் போனதாம்!
அதுபோல தான் உங்கள் குழந்தை தோல்வியையே சந்திக்க கூடாது என்று எல்லா பெற்றோர்களும் எதிர்பார்க்கிறோம்..
அதனால் தான் குழந்தை தடுக்கி விழுந்ததும் அலறி அடித்து ஓடி அதை தூக்குகிறோம்..இப்படியே காலங்கள் சென்றால் அது தவறி விழும் போது எல்லாம் தன்னை தூக்க ஒரு கரம் தேடும் அப்படி கிடைக்கவில்லை என்றால் அதுவே அக்குழந்தை துவண்டு விட காரணமாக அமைகிறது...வீட்டில் சிறு சிறு தோல்விகளை கூட சந்திக்காத குழந்தை வெளியில் சந்திக்கும் தோல்வி அதற்க்கு பேரிடராக தெரியும்...
ஒன்று மட்டும் புரிந்துக் கொள்ளுங்கள்
குழந்தைகள் எப்போதும் உங்கள் கால் கொண்டு நடக்க முடியாது...
குழந்தைகள் எப்போதும் உங்கள் மூளையினால் சிந்திக்க முடியாது...
அவர்களுக்கும் கால்கள் உண்டு மூளை உண்டு மனம் உண்டு
அவர்கள் அவர்களின் கால்களில் நடக்கட்டும்...
அவர்கள் அவர்களின் மூளையில் சிந்திக்கட்டும்...
படிப்பனை பெற வேண்டியது பெற்றோர்கள் தான்.
உங்கள் அனுபவம் அவர்களுக்கு வழிகாட்டது அவரவர் அனுபவம் தான் நல்வழிகாட்டும்...
- நவீன் கிருஷ்ணன்
( மனிதன் )
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment