Wednesday, 15 January 2014

கொலஸ்ட்ரால் எத்தனை வகை ?

கொலஸ்ட்ரால் எத்தனை வகை ?

உடலுக்கு நன்மை செய்ய கூடிய கொழுப்பு, "கொலஸ்ட்ரால்!' ஈரல், இதை உற்பத்தி செய்கிறது. ஈரலிலிருந்து, உடலிலுள்ள செல்களுக்கு இதை கொண்டு சேர்ப்பது, "லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன்' எனும் கெட்ட கொழுப்பு. 

செல்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை, மீண்டும் ஈரலுக்கு எடுத்து சென்று வெளியேற்ற உதவுவது, "ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன்' எனும், நல்ல கொழுப்பு."டிரைகிளிசரைடு' என்பது, மூன்றாம் வகை கொழுப்பு. நாம் உட்கொள்ளும், கொழுப்பு மற்றும் அதிக அளவு சர்க்கரை பொருட்கள், டிரைகிளிசரைடாக மாற்றப்பட்டு, திசுக்களில் சேமித்து வைக்கப்படும். தேவைப்படும் போது, கலோரியாக மாற்றப்பட்டு, உடலுக்கு உதவும். 

இந்த டிரைகிளிசரைடு, அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து, "சாச்சுரேட்டர் பேட்டி ஆசிட்' எனும் முழுமையான கொழுப்பு, "அன்சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்' எனும் முழுமையற்ற கொழுப்பு என, இரண்டாக பிரிக்கப்படும்.

தேங்காய் எண்ணெய், முழுமையான கொழுப்பு என, ஒதுக்கினோம். ஆனால், இதற்கு, பாக்டீரியா மற்றும் எய்ட்ஸ் நோய் வைரஸ் போன்ற, தீயவற்றை அழிக்கும் ஆற்றல் உண்டு. அதனால் தான், கேரளாவில் மாரடைப்பு மிகவும் குறைவு.

விலை உயர்ந்த ஆலிவ் எண்ணெயில், நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதிலும் தீமைகள் உள்ளன. வேர்க்கடலை நல்லது. ஆனால், கடலை எண்ணெய் உடலுக்கு உகந்ததல்ல.

நல்லெண்ணெய், மிகவும் நல்ல எண்ணெய். எத்தனை தீர்க்கதரிசனத்துடன், நம் முன்னோர் இப்படியொரு பெயரிட்டிருக்கின்றனர். இதில் கணக்கிலடங்காத வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்ட்கள் பொதிந்திருக்கின்றன.

பண்டைய ஆயுர்வேத நூல்களிலும், சீன மருத்துவ நூல்களிலும், இந்த எண்ணெய், எத்தனையோ வியாதிகளுக்கு மருந்தாக வர்ணிக்கப்படுகிறது. "ரீபைன்' செய்கிறேன் என, எண்ணெயை சிதைக்காமல், இயற்கையாக உபயோகிப்பது நல்லது.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator