இந்த நாட்டின் மிகப் பெரும் சாபக் கேடு சட்டங்களை யாரும் மதிப்பதில்லை....
மீறப் படும் சட்டங்களுக்கு அதன் காப்பாளர்களிடம் தகுந்த விலை கொடுத்தால் சட்டம் ஒன்றும் செய்வதில்லை....
அருகதை அற்றவர்கள், தகுதி இல்லாதவர்கள் கூட சம்பளம் தவிர கூடுதலாகப் பெரும் பணத்தை சுமக்க முடியாமல் சுமக்கிறார்கள்..... மறைக்க முடியாமல் மறைக்கிறார்கள்.... எல்லை மீறும்போது மட்டுமே பிடிபடுகிறார்கள்.....
இலஞ்சம் எனும் அரக்கன் கொஞ்சி தவழ்ந்து விளையாடும் சில இடங்களைப் பட்டியல் படுத்தி இருக்கிறேன்....
கிராம நிர்வாக அலுவலகம்
ரெவின்யு இன்ஸ்பெக்டர் அலுவலகம்
தாலுக்கா அலுவலகம்
தாசில்தார் அலுவலகம்
வட்டார வழங்கல் அலுவலகம்
காவல் நிலையங்கள்
மாநகராட்சி
ஊராட்சி, பேரூராட்சி
பஞ்சாயத்து
பத்திரப் பதிவுத் துறை
சர்க்கார் ஆஸ்பத்திரி
நிலவள வங்கி
கல்வித் துறை
வட்டாரப் போக்கு வரத்துத் துறை
பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA)
DTCP அலுவலகம்
மின்சார வாரியம்
குடிநீர் வடிகால் வாரியம்
கழிவு நீர் வாரியம்
நீதித்துறை அலுவலகம்
மேற்கண்ட அலுவலகங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நான் இலஞ்சம் கொடுத்துதான் என் வேலை நடைபெற்றது. இல்லாவிட்டால் இழுத்தடிக்கப் பட்டிருக்கிறேன்.
இலஞ்சப் புகார் கொடுத்தால் என்னுடைய உரிமைகள் முழுவதும் பறிக்கப் பட்டு விடுமோ எனும் பயத்தை இந்த அலுவலர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். என் வேலையை முடித்துக் கொடுக்காமல் அடுத்து வரும் அலுவலர் தடை செய்வார் எனும் பயம்.
இந்த பயம்தான் இவர்களின் முதல். இந்த பயத்திற்குப் பின்னால் பல உயர் அதிகாரிகள் உடநதைகளாக இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது.......
நான் இலஞ்சம் கொடுத்த பணம்தான் இவன் வீட்டில் டிவியாகத் தெரிகிறது, குளிர் சாதனப் பெட்டியாக மாறுகிறது.
என் இலஞ்சப் பணம்தான் இவன் பெண்டாட்டியின் நகையாக மாறுகிறது. அவள் அதை தடுத்திருக்க வேண்டாமா? பணம் கொடுத்து போகும் வேசிக்கும், என் பணம் கொண்டு இவன் மனைவிக்குத் தரும் வசதிக்கும் என்ன வித்தியாசம்?
இலஞ்சம் வாங்கியவன் இன்று பிடிபட்ட பின் முகத்தை மறைத்துப் போனாலும், இவனின் குழந்தைகள் எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகும் மானசீக நோயிற்கு இவன் காரணம் இல்லையா?
தகப்பன் என்பவன் தன பிள்ளைகளுக்கு ஆசான் ஸ்தானத்தில் நின்று வழி காட்ட வேண்டும். நல்ல விதை விதைத்தால் நல்ல மரம் முளைக்கும். கள்ளி விதை விதைத்தால் கருநாகம் குடியேறும் புற்றே முளைக்கும்......
இன்றைய தலைமுறை இளைஞர்களே.... நீங்கள் பணம் சம்பாதிக்க அதுவும் கோடி கோடியாக சம்பாதிக்க பல நேர்மையான வழிகள் உள்ளன.... உங்களால் அது முடியும்.....
உங்கள் பெற்றோர் இலஞ்சம் வாங்குபவராக இருந்தால் அவர்களிடம் சொல்லுங்கள் அந்த இலஞ்சப் பணத்தில் உண்ண மாட்டேன், உடுக்க மாட்டேன் என்று.........
இலஞ்சத்தில் முதலிடம் பெறும்வரை நாம் இந்தியாவை கவனிக்காமல் விட்டு விட்டோம்..... இனி வரும் காலங்களில் நாம் இலஞ்சப் பிசாசை போராடியாவது வெல்வோம்.....
நன்றி

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment