மகாபெரியவாளின் மகிமை
எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா. குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ஹக்ரி என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது. கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது . கறையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமாஇருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா. அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்த கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது. அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்சாவுர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.
"நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? " என்று தெய்வம் அவரை கேட்டது.
ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். " அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்" உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று. வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.
ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை. சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.
அருகில் இருந்தவர்களிடம் " நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ" என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.
அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது.
நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது.
ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார்.
அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment